சமையலறை ரொம்ப சின்னதா இருக்கா... இந்த 6 தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!

Small Kitchen Design Tips
Small Kitchen Design Tips
Published on

இன்றைய நவீன அடுக்குமாடி குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறை, ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகச் சமையலறை என்பது மிகவும் குறுகிய இடத்திலேயே அமைக்கப்படுகிறது. இருக்கும் அந்தச் சிறிய இடத்தையாவது வசதியாக மாற்றலாம் என்று நாம் நினைப்போம். ஆனால், அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் நாம் செய்யும் சில வடிவமைப்புத் தவறுகள், அந்த அறையை மேலும் சிறியதாகவும், காற்று புகாத இடமாகவும் மாற்றிவிடுகின்றன. 

சமையலறை, வீட்டின் மிக முக்கியமான பகுதி. அங்கே வேலை செய்வது ஒரு சுகமான அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நெருக்கடியான தண்டனையாக இருக்கக்கூடாது. நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு சிறிய சமையலறையை வடிவமைக்கும்போது நாம் தவிர்க்க வேண்டிய 7 முக்கியத் தவறுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மோசமான நிறம்! 

சமையலறை என்றாலே பளிச்சென்று இருக்க வேண்டும். ஆனால் பலர் 'ரிச் லுக்' வேண்டும் என்பதற்காகக் கறுப்பு அல்லது அடர்த்தியான நீல நிறங்களை அலமாரிகளுக்கும், சுவர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். அடர் நிறங்கள் வெளிச்சத்தை உறிஞ்சிவிடும் என்பதால், அறை பார்ப்பதற்குக் குகை போல இருண்டு, மேலும் சிறியதாகத் தெரியும். அதற்குப் பதிலாக வெண்மை அல்லது வெளிர் நிறங்களைப் பயன்படுத்தினால் அறை விசாலமாகத் தெரியும்.

2. அலமாரிகள்!

பொருட்களை வைக்க இடம் வேண்டும் என்பதற்காகச் சுவர் முழுவதும் மரக்கதவு போட்ட அலமாரிகளை அமைப்பது அறையை அடைத்தது போன்ற உணர்வைத் தரும். இதற்கு மாற்றாக, சில இடங்களில் கண்ணாடிப் பதித்த கதவுகளைப் பயன்படுத்தலாம். அல்லது திறந்த நிலை அலமாரிகளை அமைப்பதன் மூலம், அறைக்குள் காற்றோட்டம் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கலாம். இது கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், இடத்தைப் பெரிதாகவும் காட்டும்.

3. தவறான மேடை அமைப்பு! 

நடுவில் மேடை அமைக்கும் Island Kitchen முறை தற்போது பிரபலமாகி வருகிறது. ஆனால் இடமில்லாத சமையலறையில் இதைத் திணிப்பது நடக்கக் கூட வழியில்லாமல் செய்துவிடும். ஒருவேளை அப்படி அமைப்பதாக இருந்தால், அமரும் நாற்காலிக்கும் மேடைக்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். கால்களை வசதியாக வைப்பதற்குக் குறைந்தது 12 முதல் 18 அங்குல இடைவெளியாவது தேவை. சமையல் மேடைக்கும் இந்தத் தீவு மேடைக்கும் நடுவில் குறைந்தது 36 அங்குல இடைவெளி இருந்தால் மட்டுமே இடிக்காமல் வேலை செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
பயனற்ற விவாதங்கள் முன்னேற்றத்திற்கு தடைகள் - அவற்றை எவ்வாறு தவிர்ப்பது?
Small Kitchen Design Tips

4. பயனற்ற சிறிய டிராயர்கள்!

அலமாரிகளை வடிவமைக்கும்போது, டிராயர்கள் பெரிதாக இருக்க வேண்டியது அவசியம். சிறிய கரண்டிகள் வைக்கும் அளவிற்கு மட்டும் டிராயர்களை அமைத்தால், பெரிய பாத்திரங்களையோ அல்லது வாணலிகளையோ உள்ளே வைக்க முடியாது. இதனால் அந்தப் பொருட்கள் அனைத்தும் சமையல் மேடையின் மீதே தங்கி, இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு சமையலறையை அலங்கோலமாகக் காட்டும்.

5. இடைஞ்சலான கதவுகள்!

இது மிக முக்கியமான வடிவமைப்புத் தவறாகும். பாத்திரம் கழுவும் இயந்திரத்தின் கதவைத் திறந்தால், பக்கத்தில் உள்ள அலமாரியின் கதவைத் திறக்க முடியாத நிலை பல வீடுகளில் உள்ளது. இது வேலை செய்யும்போது மிகுந்த எரிச்சலை ஊட்டும். அதேபோல, சமையல் செய்யும் இடம், பொருட்கள் எடுக்கும் இடம் மற்றும் பாத்திரம் கழுவும் இடம் ஆகியவை ஒன்றுக்கொன்று இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: மரியா - தவறான கருத்தியல்!
Small Kitchen Design Tips

6. தவறான பர்னிச்சர்! 

சிறிய அறைக்குப் பெரிய டைனிங் டேபிள் அல்லது பிரம்மாண்டமான நாற்காலிகளைப் போடுவது இடத்தை முழுமையாக விழுங்கிவிடும். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாலும், அதற்குப் பின்னால் ஒருவர் வசதியாக நடந்து செல்லும் அளவிற்குச் சுவரிலிருந்து இடைவெளி இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய பெரிய பொருட்களைத் தவிர்ப்பதே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com