குப்பைக்கு விடை... பால்கனிக்கு நடை! தேங்காய் ஓட்டில் மினி கார்டன்!

home gardens
home gardens
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

நீங்க உங்க வீட்டில் செடிகொடிகள் வளர்க்கும் செடிப் பிரியரா? அப்படின்னா உங்களுக்குத்தான் இந்த செய்தி.

உங்க வீட்டை ஒரு குட்டி கார்டனாக, அழகான மினி தோட்டமா மாற்றணும்னு நினைக்கிறீங்களா? ஏற்கனவே நீங்க வீணாகப் போகும் பிளாஸ்டிக் மற்றும் தேவையில்லாத பொருட்களில் செடிகள் வளர்ப்பீங்கன்னு தெரியும். அதுக்கு கூட இப்ப ஒரு புதுசா ஐடியாவையும் சொல்றேன் கேட்டுக்கோங்க. அதாங்க, சமையலில் பயன்படுத்திட்டு தூக்கிப் போடுற தேங்காய் ஓடு!

தேங்காய் ஓட்டில் செடி வைத்து ஹாங்கிங் பாட்ஸ்மாதிரி அழகாக தொங்கவிட்டு, உங்க பால்கனியை மாடர்ன் லுக் கொண்டு வரலாம்.

உங்க பால்கனி இல்லையென்றாலும், சின்ன இடத்தை ஒரு அழகான மினி கார்டனாக மாற்றணும்னு நினைத்தா, தேங்காய் ஓடு ஒரு சூப்பரான, காசே இல்லாத ஆப்ஷன். நாம கிச்சன்ல வேஸ்ட்னு தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை, கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சு அழகான தொங்கும் செடித் தொட்டியா மாற்றலாம். இதுல சின்ன செடிகள் ஈஸியா வளரும். பால்கனிக்கும் ஒரு நேச்சுரல், டிரெண்டி லுக் கிடைக்கும். முக்கியமா, தேங்காய் ஓட்டுல தண்ணி தேங்காது. அதனால செடியோட வேர்கள் பாதுகாப்பா இருக்கும். அப்படி தேங்காய் ஓட்டுல வளர்க்கக்கூடிய 5 செடிகளைப் பத்தி பார்க்கலாம்:

போத்தோஸ் (Pothos)

போத்தோஸ் செடி பாக்க மணி பிளான்ட் மாதிரியே இருந்தாலும், இதோட இலைகளின் டிசைன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இதை தேங்காய் ஓட்டுல வைத்து பால்கனி கிரில்லிலோ அல்லது கொக்கியில் மாட்டிவிடலாம். இந்த செடி வேகமாக பரவி, குறைந்த வெளிச்சத்திலும் நல்லா வளரும்.

ஸ்பைடர் பிளான்ட் (Spider Plant)

ஸ்பைடர் பிளான்ட் அதோட நீளமான, மெல்லிய இலைகளாலும் தொங்கும் கிளைகளாலும் ஒரு பெர்ஃபெக்ட் ஹேங்கிங் பிளான்ட். தேங்காய் ஓட்டுல இதை வைக்கும்போது இன்னும் அழகா தெரியும். இந்த செடி காற்றை சுத்தப்படுத்தவும் உதவும்.

போர்டுலக்கா (Portulaca / டேபிள் ரோஸ்)

பூக்களை விரும்பாதவர்கள் யாரும் இல்ல. அதுவும் கலர்ஃபுலா தொங்கவிட்டா, உங்க கார்டன் ஒரு பூந்தோட்டம் மாதிரி இருக்கும். அதற்கு போர்டுலக்கா ஒரு நல்ல சாய்ஸ். இதோட வண்ணமயமான பூக்கள் பால்கனியை ரொம்ப அழகா காட்டும். வெயிலில் நல்லா வளரும்.

இதையும் படியுங்கள்:
வீட்டை அரண்மனை போல மாற்ற இந்த ஒரு டேபிள் போதும்.. இதன் சீக்ரெட் பயன்களை தெரிஞ்சுக்கோங்க!
home gardens

இங்கிலீஷ் ஐவி (English Ivy)

இங்கிலீஷ் ஐவி ஒரு கிளாசிக் ஹேங்கிங் செடி. இதோட கொடிகள் கீழே அழகா தொங்கும். உங்க பால்கனிக்கு ஒரு நேச்சுரல் கார்டன் லுக் கொடுக்கும்.

மணி பிளான்ட் (Money Plant)

மணி பிளான்ட் ரொம்ப ஈஸியா வளர்க்கக்கூடிய பிரபலமான செடி. குறைந்த பராமரிப்பிலேயே வேகமாக வளரும். தேங்காய் ஓட்டுல வச்சா ரொம்ப அழகா இருக்கும். இதுக்கு மிதமான வெயிலும், குறைவான தண்ணீரும் போதும்.

பால்கனியில் மட்டும் இல்லாமல், உங்க வீட்டு காம்பவுண்ட்ல கூட வைக்கலாம். இந்த செடிகளை கிச்சன்ல வீணாக தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை பயன்படுத்தி, உங்க வீட்டு வரவேற்பறையையும் சூப்பரான லுக்கில் மாற்றலாம். இதனால் நமக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும், சுத்தமான காற்றையும் சுவாசிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com