வாஷிங் மெஷினில் தண்ணீர் வடியவில்லையா? பிளம்பர் இல்லாமல் 5 நிமிடத்தில் சரிசெய்யும் வழிகள்! 

பிளம்பரை அழைக்காமல், வீட்டிலேயே மிக எளிதாக வாஷிங் மெஷின் தண்ணீர் அடைப்பை சரிசெய்து சுத்தமாக வைத்துக்கொள்ளும் அற்புதமான ரகசியங்கள்.
washing machine வாஷிங் மெஷின்
washing machine வாஷிங் மெஷின்
Updated on

நமது அன்றாட வீட்டு வேலைகளை மிக சுலபமாக்கி நமது நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு மிக முக்கியமான சாதனம் தான் வாஷிங் மெஷின். ஆனால் துணிகளை நன்றாக துவைத்து முடித்த பிறகு, உள்ளே இருக்கும் அந்த அழுக்கு தண்ணீர் வெளியேறாமல் அப்படியே ட்ரம்முக்குள் நின்றால் அது எவ்வளவு பெரிய தலைவலி என்பது அதை நேரில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே நன்றாக தெரியும். 

நாம் துணிகளை துவைக்கும் போது பாக்கெட்டில் மறந்து வைக்கும் நாணயங்கள், காகிதங்கள், துணிகளில் இருந்து உதிரும் சிறிய நூல்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் அதிகப்படியான சோப்பு தூள் போன்றவை ஒன்றாக சேர்ந்து காலப்போக்கில் மெஷினின் பைப்புகளை அடைத்துவிடுகின்றன.

 இதற்காக பதறிப்போய் உடனே ஒரு பிளம்பரை கூப்பிட்டு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் உள்ள சில சாதாரண பொருட்களை வைத்தே இந்த தண்ணீர் அடைப்பை மிக எளிதாக சில நிமிடங்களில் சரிசெய்ய முடியும். 

வாஷிங் மெஷின் ட்ரெயின் ஃபில்டரை சுத்தம் செய்யும் முறை!

தண்ணீர் வெளியேறவில்லை என்றால் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய இடம் ட்ரெயின் ஃபில்டர் (Drain Filter) ஆகும். உங்களது வாஷிங் மெஷின் ஃபிரண்ட் லோட் அல்லது டாப் லோட் என எந்த மாடலாக இருந்தாலும் அதில் கட்டாயம் இந்த ஃபில்டர் கொடுக்கப்பட்டிருக்கும். ஃபிரண்ட் லோட் மெஷின்களில் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய கதவு போன்ற மூடிக்கு பின்னால் இது அமைந்திருக்கும். மெஷினின் மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு அந்த ஃபில்டரை மெதுவாக திருகி கழற்ற வேண்டும். 

அப்போது அதிலிருந்து தண்ணீர் கசியும் என்பதால் கீழே ஒரு பழைய துணி அல்லது சிறிய பாத்திரத்தை வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த ஃபில்டருக்குள் சிக்கியுள்ள முடி, ஹேர்பின்கள், காயின்கள் மற்றும் சேறு போன்ற அடைப்புகளை ஒரு பழைய டூத் பிரஷ் பயன்படுத்தி டிஷ்வாஷ் சோப்புடன் நன்றாக தேய்த்து கழுவி மீண்டும் அதே இடத்தில் கவனமாக மாட்டிவிடுங்கள்.

வாஷிங் மெஷின் ட்ரெயின் பைப் அடைப்பை நீக்க உதவும் டிப்ஸ்!

ஃபில்டரை முழுமையாக சுத்தம் செய்த பிறகும் தண்ணீர் சரியாக வெளியேறவில்லை என்றால் அடுத்ததாக ட்ரெயின் பைப் பகுதியை முழுமையாக சோதிக்க வேண்டும். மெஷினின் பின்புறம் உள்ள இந்த பைப்பை வெளியே எடுங்கள். பல வீடுகளில் இந்த பைப் சுருண்டு, வளைந்து அல்லது மடிந்து இருக்கும். அப்படி இருந்தாலும் தண்ணீர் சீராக வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கும். 

washing machine வாஷிங் மெஷின்
washing machine வாஷிங் மெஷின்
இதையும் படியுங்கள்:
உங்க வீட்டு குழாய் அடைத்துக்கொண்டதா.. செலவே இல்லாமல் சரிசெய்யும் சூப்பர் ட்ரிக்ஸ்!
washing machine வாஷிங் மெஷின்

எனவே முதலில் அந்த பைப்பை நேராக வைத்துக்கொண்டு, ஒரு நீளமான இரும்பு கம்பி அல்லது பழைய ஹேங்கர் கம்பியை மெதுவாக உள்ளே விட்டு ஏதேனும் துணி அல்லது குப்பை அடைப்பு உள்ளதா என பார்க்க வேண்டும். அதன் பிறகு பைப்பிற்குள் போர்ஸாக தண்ணீரை பீய்ச்சி அடித்தால் உள்ளே இருக்கும் நாள்பட்ட குப்பைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வெளியே வந்துவிடும்.

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா!

மெஷினின் கண்ணுக்கு தெரியாத உட்புற குழாய்களில் படிந்துள்ள சோப்பு கறைகள் மற்றும் பிசுபிசுப்பான அழுக்குகளை நீக்க வினிகர் மற்றும் பேக்கிங் சோடா மிகச்சிறந்த ஒரு இயற்கை தீர்வாகும். வாஷிங் மெஷின் ட்ரம்முக்குள் இரண்டு கப் வெள்ளை வினிகர் மற்றும் அரை கப் பேக்கிங் சோடாவை தாராளமாக சேர்த்துக்கொள்ளுங்கள். 

அதன் பிறகு உள்ளே துணிகள் எதையும் போடாமல் Hot water மோடில் அல்லது Tub clean ஆப்ஷனில் மெஷினை முழுமையாக ஓட விட வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக சேரும்போது ஏற்படும் அபாரமான ரசாயன மாற்றம் உள்ளே இருக்கும் அனைத்து கெட்ட அழுக்குகளையும் சுக்குநூறாக கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் மெஷினில் இருந்து வரும் துர்நாற்றமும் முற்றிலுமாக நீங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
வாஷிங் மெஷின் பட்டன்கள், சைல்ட் லாக் முதல் ஃபஸி லாஜிக் வரை: பயன்படுத்துவது எப்படி?
washing machine வாஷிங் மெஷின்

மாதம் ஒருமுறை மேலே சொன்ன வினிகர் முறையை பின்பற்றி சுத்தம் செய்தால் உங்கள் மெஷின் எப்போதுமே புத்தம் புதியது போலவே அருமையாக வேலை செய்யும். இந்த எளிய மற்றும் செலவில்லாத குறிப்புகளை பின்பற்றி உங்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் புத்திசாலித்தனமாக சேமித்துக்கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com