ஓட்டுநர் உரிமம் பெறுவது இவ்வளவு சுலபமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முழு வழிகாட்டி!

ஆன்லைன் மூலம் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவது, எல்.எல்.ஆர் (LLR) விண்ணப்பிப்பது மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எளிதாக புதுப்பிக்கும் வழிமுறைகளை அறியுங்கள்.
Driving licence | ஓட்டுநர் உரிமம்
Driving licence | ஓட்டுநர் உரிமம்
Updated on

வாகனங்களை ஓட்டும் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் (Driving licence) பெறுவது, இந்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும், காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனங்களை இயக்குவதும் குற்றமாகும். அந்த குற்றங்களுக்கு அரசு அவர்களுக்கு அபராதத்தை விதிக்கலாம். இவர்கள் விபத்து ஏற்படுத்திய பட்சத்தில் அதற்கு தகுந்தவாறு தண்டனைகளை கூட வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது. உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதம் செலுத்த நேரிடலாம்.

Driving licence | ஓட்டுநர் உரிமம்
Driving licence | ஓட்டுநர் உரிமம்AI Image

தமிழ்நாட்டில் ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைன் மூலம் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க முடியும். முதன்முறையாக ஓட்டுனர் உரிமம் பெற முயற்சி செய்பவர்கள் முதலில் LLR என்ற பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும். இதற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் உங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (RTO) அஞ்சல் குறியீட்டு எண் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.

ஆன்லைன் முறையில் இல்லாமல் நேரடியாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமும் விண்ணப்பிக்க முடியும். அல்லது நேரடியாக ஆர்டிஓ அலுவலகம் சென்று கூட விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் முகவரிச் சான்று, வயது சான்று மற்றும் மருத்துவச் சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பழகுநர் உரிமம் (LLR) 6 மாதக் காலம் வரை செல்லுபடியாகும்.

பழகுநர் உரிமம் கிடைத்த நாளிலிருந்து ஒரு மாதத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும் . ஆனால், ஓட்டுனர் உரிமம் தேர்வு, நேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் தான் நடைபெறும். ஒருவேளை அந்த தேர்வில் தோல்வியடைந்தால், அடுத்த நாள் புதிதாக கட்டணம் செலுத்தி மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஓட்டுநர் உரிம விண்ணப்பத்தை LLR காலாவதி ஆகும் முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
PM Kisan நிதி உதவி: விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
Driving licence | ஓட்டுநர் உரிமம்

புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க https://sarathi.parivahan.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்.

Driving licence | ஓட்டுநர் உரிமம்
Driving licence | ஓட்டுநர் உரிமம்AI Image
  1. அதில் 'ஓட்டுநர் உரிமம் சேவைகள்' என்ற பிரிவை கிளிக் செய்து உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

  2. அடுத்ததாக 'புதிய ஓட்டுநர் உரிமம்' என்பதை தேர்வு செய்யவும்.

  3. விண்ணைப்ப படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

  4. உங்கள் அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் தேர்வுக்கு முன்பதிவு செய்யவும்.

  5. இறுதியாக விண்ணப்பக்க கட்டணம் செலுத்திவிட்டு, அதற்கான ஒப்புகை சீட்டை பிரிண்ட் செய்து கொள்ளவும்.

  6. தேர்வு நாளில் நேரில் சென்று வாகனத்தை ஓட்டிக் காட்டவும்.

இதையும் படியுங்கள்:
பெண்களை மயக்கும் டூ இன் ஒன் பிரேஸ்லெட் வாட்ச் டிசைன்கள்!
Driving licence | ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வது எப்படி?

https://sarathi.parivahan.gov.in/ இணையதளத்திற்கு சென்று முதலில் 'டிஎல் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கவும்' என்ற பிரிவை கிளிக் செய்தால், புதுப்பித்தலுக்கு தேவையான விவரங்கள் இருக்கும், அதன் இறுதியில் 'தொடரவும்' பட்டனை கிளிக் செய்தால், ஓட்டுநர் உரிமம் எண், பிறந்த தேதி, கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும். மாநிலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அஞ்சல் குறியீடு போன்றவற்றை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி படிவத்தை பிரிண்ட் செய்துக் கொள்ளவும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் நாளில் பழைய உரிமம், 40 வயதிற்கு மேல் இருந்தால் Form 1A, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும். மேலும் தகவலுக்கு அரசாங்கத்தின் https://sarathi.parivahan.gov.in/ தளத்தினை பார்வையிடவும்.

logo
Kalki Online
kalkionline.com