கோடையில் ஜெட் வேகத்தில் சுழலும் மின்சார மீட்டர்... பிரேக் போடுவது எப்படி?

இந்தியாவில் கோடை வெயில் தன் ஆதிக்கத்தை தொடங்கிய நிலையில் வீடுகளில் மின்சார சிக்கனத்தை எப்படி செயல்படுத்தலாம் என்பதை பார்ப்போம்..
summer Reduce EB Bill tips
summer Reduce EB Bill tipsAI Image
Updated on

இந்தியாவில் கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், மின்சாரத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. சித்திரை மாத அக்னி நட்சத்திரம் தன் ஆதிக்கத்தை தொடங்கிய உடனேயே பலருடைய வீடுகளில் மின்சார மீட்டர்கள் ஜெட் வேகத்தில் சுழலத் தொடங்கி விடுகின்றன. பொதுவாக, கோடைக் காலம் தொடங்கியவுடன் வீட்டில் மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கிறது. ஏனெனில் வெப்பத்திலிருந்து தப்பிக்க நாம் ஏசியையும், மின்விசிறியையும் தஞ்சம் புகுவது தவிர்க்க முடியாது.

ஆனால் அதேசமயம் மாத இறுதியில் வரும் மின் கட்டணத்தை பார்க்கும் போது வெப்பத்தை விட அதிக அதிர்ச்சி ஏற்படுகிறது. குளிர்ச்சியாகவும் இருக்கும். அதேசமயம் மின் கட்டணமும் எகிற கூடாது என்பதுதான் இன்றைய சராசரி இல்லத்தரசிகளின் கனவாக இருக்கிறது. சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல. இந்த கோடையில் மின்சார சிக்கனத்தை எப்படி செயல்படுத்தலாம் என்பதை பார்ப்போம்..

நவீன வசதிகளில் ஏசி என்பது இன்று அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் ஏசியை 18 அல்லது 20 டிகிரியில் வைத்தால் தான் அறை சீக்கிரம் குளிரும் என்பது ஒரு தவறான புரிதல். மனித உடலுக்கு 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே இதமானது மற்றும் ஆரோக்கியமானது. ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை நீங்கள் உயர்த்தும் போதும் சுமார் 6 சதவீதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஏசி தேவையில்லை.. கரண்ட் பில் கவலையில்லை! கோடையிலும் வீட்டை 'ஜில்' என்று மாற்ற எளிய வழிகள்!
summer Reduce EB Bill tips

அதேபோல் ஏசி இயங்கும் போது மின்விசிறியையும் மெதுவான வேகத்தில் ஒடவிடுவது, குளிர்ந்த காற்றை அறையின் மூலை முடுக்கெல்லாம் குளிர்ந்த காற்று வேகமாகப் பரவும். மேலும், ஏசி இயங்கும்போது ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். இதனால் ஏசியின் கம்ப்ரஸர் அதிக நேரம் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. முக்கியமாக ஏசியின் பில்டர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது, மின் நுகர்வை கணிசமாக குறைக்கும். தூசு படிந்த பில்டர்கள் காற்றை இழுக்க அதிக சக்தியை உறிஞ்சும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏசி இல்லாத வீடுகளில் மின்விசிறியே பிரதானம். ஆனால் பழைய மாடல் மின்விசிறிகள் மற்றும் அதன் ரெகுலேட்டர்கள் அதிக மின்சாரத்தை இழுக்க கூடியவை. தற்போது சந்தையில் கிடைக்கும் பிஎல்டிசி (BLDC) மின்விசிறிகள் சாதாரண விசிறிகளை விட 50 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கின்றன.

மேலும், பகல் நேரங்களில் ஜன்னல் திரைகளை மூடி வைப்பதன் மூலம் அறையின் வெப்பத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். சுவர்களில் படும் நேரடி வெயிலை தடுக்க கூலிங் ரூப் பெயிண்ட் அடிப்பது அல்லது மேல் மாடியில் செடிகளை வளர்ப்பது போன்ற இயற்கை முறைகள் ஏசி மற்றும் விசிறிகள் தேவையை தானாகவே குறைக்கும். குளிர்ச்சியான காற்றுக்காக இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைப்பதும், அறையில் தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து வைப்பதும் வெப்பத்தை குறைக்க உதவும் எளிய வழிகளாகும்.

மின்சாரம் சேமிப்பது என்பது வெறும் பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, அது ஒரு சமூக கடமையும் கூட. நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் மற்றொரு கிராமத்தின் வெளிச்சத்திற்கு வழிவகை செய்யும். பழைய எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஸ்டார் ரேட்டிங் கொண்ட புதிய சாதனங்களுக்கு மாறுவது நீண்ட கால அடிப்படையில் பெரும் லாபத்தை தரும். குறிப்பாக மின்சாரம் அதிகம் செலவாகும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேவையற்ற மின் சாதனங்களை தவிர்ப்பது மின் விநியோக கட்டமைப்பிற்கு நாம் செய்யும் பெரும் உதவியாகும்.

தேவை இல்லாத போது விளக்குகளை அணைத்து விடுங்கள். பழைய பல்புகள் அல்லது சி.எஃப்.எல் (CFL) விளக்குகளுக்குப் பதிலாக முழுமையாக எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தலாம். இது மின்சாரத்தைச் சேமிக்க உதவும்.

பொதுவாக, கோடைக்காலம் தொடங்கியவுடன் வீட்டில் மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் மின்சாரக் கட்டணமும் உயர்கிறது. உங்கள் வீட்டில் பழைய மின் சாதனங்கள் இருந்தால் அவை அதிக மின்சாரத்தை இழுக்கும். புதிய 5-Star இன்வெர்ட்டர் சாதனங்களைப் பயன்படுத்துங்கள்.

அதிகாலை நேரங்களிலோ அல்லது மாலை நேரங்களிலோ உங்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைப்பது, உங்கள் வீடு நல்ல காற்றோட்டத்துடனும் குளிர்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்யும். மேலும், சரியான திரைச்சீலைகளைக் கொண்டு சூரியக் கதிர்களைத் தடுப்பது, உங்கள் அறையின் உட்புற வெப்பநிலையைப் பராமரிக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஏசி இல்லாமல் வீட்டை ஊட்டி போல மாற்றுவது எப்படி.. இந்த 5 சீக்ரெட் டிப்ஸை உடனே ட்ரை பண்ணுங்க!
summer Reduce EB Bill tips

விழிப்புணர்வுடன் கூடிய சின்ன சின்ன மாற்றங்களே பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்.

logo
Kalki Online
kalkionline.com