இப்படி கூடவா கலப்படம் செய்வாங்க? ஒரிஜினல் வெல்லத்தை கண்டுபிடிக்க சூப்பர் ஐடியா இதோ!

identify fake jaggery
identify fake jaggery
Published on

ர்க்கரைக்கு பதிலா நாம எல்லாரும் அதிகமா விரும்பி பயன்படுத்துற ஒரு சூப்பரான மாற்றுப்பொருள்தான் வெல்லம். உடம்புக்கு ரொம்பவே நல்லதுனு நெனச்சு காசு கொடுத்து வாங்குற இந்த வெல்லத்துல இப்போ ஏகப்பட்ட கலப்படங்கள் வர ஆரம்பிச்சுடுச்சு. 

பாக்குறதுக்கு ரொம்ப அழகா, கலர்ஃபுல்லா இருக்குனு நாமளும் ஏமாந்து வாங்கிடுறோம். ஆனா அந்த பளபளப்புக்கு பின்னாடி பல மோசமான கெமிக்கல்கள் ஒளிஞ்சிருக்கு. காசை கொடுத்து நாம ஏன் கெமிக்கலை வாங்கணும்? ஒரிஜினல் வெல்லத்தை எப்படி சுலபமா கண்டுபிடிக்கலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

நிறத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்!

நம்மில் பலரும் கடைகளுக்கு சென்றால் மிக பிரகாசமான மஞ்சள் நிறத்தில், லேசான பொன்னிறத்தில் பளபளப்பாக இருக்கும் வெல்லத்தை தான் ஆசையாக வாங்குவோம். ஆனால் அதுதான் மிகப்பெரிய தவறு. கரும்பில் இருந்து வெல்லம் காய்ச்சும்போது அதன் இயற்கையான நிறம் அடர் பழுப்பு, லேசான கருப்பு நிறமாகத்தான் இருக்கும்.

அதை வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மஞ்சள் நிறமாக மாற்றுவதற்காக சோடியம் பைகார்பனேட் மற்றும் சூப்பர் பாஸ்பேட் போன்ற பல கொடிய ரசாயனங்களை சேர்க்கிறார்கள். அதனால் எப்போதுமே அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து வாங்குவது மிகவும் பாதுகாப்பானது.

தண்ணீரே போதும்!

நீங்கள் வாங்கிய வெல்லம் உண்மையானதா என்பதை ஒரு டம்ளர் தண்ணீரை வைத்தே மிக சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஒரு சிறிய துண்டு வெல்லத்தை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கி விடுங்கள். அந்த வெல்லம் உண்மையாக இருந்தால் அது தண்ணீரில் முழுமையாக கரைந்துவிடும், அடியில் எந்த ஒரு மாவும் தங்காது. 

ஆனால் அதுவே போலி வெல்லமாக இருந்தால், அதன் அடியில் சாக்பீஸ் தூள் போல அல்லது ஒரு வெள்ளை நிற மாவு போன்ற படிமம் தங்கிவிடும். வெல்லத்தின் எடையை கூட்டுவதற்காக அதில் கால்சியம் கார்பனேட் மற்றும் செயற்கை மாவு பொருட்களை கலக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் மிக தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சுவை இனி உங்கள் வீட்டிலும்! செஃப் (Chef) சொன்ன ரகசியம்!
identify fake jaggery

சுவை, கடினத்தன்மை!

உண்மையான வெல்லத்தை வாயில் போட்டால் அது லேசான உப்பு சுவையோடு, கரும்பு சாற்றின் இயற்கையான மணத்தோடு இனிக்கும். மேலும் ஒரிஜினல் வெல்லம் சற்று மென்மையாக இருக்கும், அதை கைகளால் மிக சுலபமாக உடைத்து விடலாம். ஆனால் கலப்பட வெல்லம் என்பது அதீத இனிப்பு சுவையுடன் இருக்கும், சில நேரங்களில் அதில் ஒரு கசப்பான ரசாயன வாடையும் வரக்கூடும். சீனியை பாகு காய்ச்சி வெல்லத்தில் கலப்பதால், அந்த போலி வெல்லம் பார்ப்பதற்கு கண்ணாடி போல மினுமினுக்கும், தொட்டு பார்த்தால் கல் போல மிக கடினமாக இருக்கும்.

நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நாம் அதிக விலை கொடுத்து வெல்லத்தை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது அதன் நிறம் அழகாக இல்லை என்று ஒதுக்கி விடாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வாங்குவதுதான் ஒரு புத்திசாலி வாடிக்கையாளருக்கு அழகு.

இதையும் படியுங்கள்:
'புதுமைப்பெண்' போல் இனி 'தமிழ் புதல்வன்' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
identify fake jaggery

இனி கடைகளுக்கு சென்று வெல்லம் வாங்கும்போது மேலே சொன்ன இந்த சின்ன சின்ன விஷயங்களை கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் குடும்பத்தினருக்கு எந்தவிதமான ரசாயனமும் இல்லாத உண்மையான ஆரோக்கியத்தை மட்டுமே கொடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com