
பழங்கால மக்களிடையே காலத்தை கணிக்கும் முறையில் எண் ‘7’ மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. 7 என்பதற்கு முழுமை எனப் பொருள்படும். வாரத்திற்கு மொத்தம் ஏழு நாட்கள், ஏழு பிறவிகள், ஏழு கடல்கள், வானவில்லின் ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள், கடை ஏழு வள்ளல்கள், ஏழு பருவங்கள், ஏழு அதிசயங்கள் என்று ஏழுக்குப் பெருமை தரும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தொழிற்சாலை மற்றும் சேவை மையங்களில் அன்றாடம் நிகழக்கூடிய, ‘ஏழு விரயங்கள்’இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
டோயொட்டா நிறுவனத்தின் முன்னாள் முதன்மைப் பொறியாளரான, ‘டாய்ச்சி ஓஹ்னோ’ என்பவரால் இது அடையாளம் காணப்பட்டு, டோயொட்டா உற்பத்தி முறைமையின் ஒரு முக்கிய அங்கமாக்கப்பட்டன.
பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்போது, பல வகையான செய்முறைகள் மற்றும் இணைப்புகளால் அவற்றின் மதிப்பு கூட்டப்படுகிறது. இப்படி மதிப்பு கூட்டப்படும்போது பல வகையான வளங்களும், விரயங்களும் நுகரப்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகமாகின்றன. நிறுவனங்கள் இச்செலவுகளை ஈடு செய்ய அதிக விலைக்கு வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்க முனைகின்றன.
ஆனால், சந்தையில் உள்ள போட்டியினால் அவ்வாறு செய்யக்கூடிய பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கிவிடும் அல்லது முதலீட்டை விட குறைந்த விலைக்கு விற்கும்போது அந்நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை ஏற்கக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக, ஏழு வகையான விரயங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை நீக்கப்படுகின்றன.
அந்த ஏழு வகையான விரயங்கள் (The seven wastes) இவைதான்:
1. அதிகப்படியான உற்பத்தி,
2. அதிகப்படியான நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குனருடையது),
3. காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குனருடையது),
4. தேவையற்ற ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருட்களின் தேவையற்ற ஊர்வு),
5. அதிகப்படியான செயல்முறை,
6. அதிகப்படியான இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்),
7. திருத்தம் (மறு சீர் செய்தல்).
இந்த ஏழு விரங்களை கவனத்தில் கொண்டால், எந்தவொரு தொழிலிலும் வெற்றி பெற முடியும்.