உங்கள் கை மூலம் பரவும் கிருமிகள்! குடும்பத்தைக் காக்க கை கழுவுதல் ஏன் முக்கியம்?

மொபைல், பணம், கதவுப் பிடிகள் மூலம் பரவும் கிருமிகளிடம் இருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் எளிய வழி.
கை கழுவுதல் - Daily hygiene habits
கை கழுவுதல் - Daily hygiene habits
எஸ்.மாரிமுத்து

எஸ்.மாரிமுத்து, தனது மனைவி எம்.வந்தாவுடன் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பல இதழ்களில் கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள், ஆன்மீகம், சமையல் சார்ந்த படைப்புகளை எழுதி வருகிறார். தற்போது இவர்களின் படைப்புகள் கல்கி ஆன்லைனிலும் வெளியாகின்றன. இருவரும் கல்கி குழுமத்தின் பல வருட வாசக எழுத்தாளர்கள்.

Updated on: 

கை கழுவுதல் என்பது கையில் படிந்துள்ள மண் அழுக்குகளையும் நுண்ணுயிர்களையும், நீக்க சுத்தம் செய்வதாகும் கை கழுவுவதற்கு நீர் மற்றும் சவர்க்காரம் போன்றவை பயன்படுத்தியும் செய்யலாம்.

நோய் பரவுவதல்

மருத்துவ ரீதியாக பார்த்தால் பல நோய்கள் கை கழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கை கழுவுவதால்தான் நோய்களை பரப்பக்கூடிய பாக்டீரியாக்கள் வைரஸ்கள் அளிக்கப்படுகின்றன . உணவினை செய்யக்கூடியவர்கள், வேலை செய்பவர்கள், மருத்துவத்துறையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு கை கழுவுதல் பயிற்சி என்பது அடிப்படையாக கருதப்படுகிறது.

சோப்பினால் கை கழுவுதல் என்பது பல வகையான நோய்களிலிருந்து காக்க பயன்படுகிறது.

உதாரணமாக, காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவுவதில் இருந்து காக்கிறது. கை கழுவுதல் சரும நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் தீயினால் ஏற்பட்ட தடிமனாலும் பாதிக்கப்படுகின்றனர். காரணம் அவர்கள் கைகளை கழுவாமல் தங்கள் கண்களைத் தொடுதல், மூக்கில் விரல் வைத்தல், வாயில் கைகளை வைத்தல் போன்றவை செய்வதால்தான் வருகிறது.

கை கழுவும் முறைகள்

கைகளை சுத்தமான நீரில் கைகளை நன்றாக நனைத்து கைகள் இரண்டையும் நன்றாக தேய்த்து லிக்யூட் சோப் பயன்படுத்தி கழுவவும்.

விரல்களுக்கிடைப்பட்ட பகுதிகள், நகங்களின் அடிப்புறம், மணிக்கட்டு ஆகியவற்றை சேர்த்து குறைந்தது 20 விநாடிகள் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும்.

ஓடும் குழாயின் நீரின் அடியில் சோப்பு முழுமையாக நீங்கும் வரை நன்றாகக் கழுவவும்.

சுத்தமான துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு கைகளை நன்றாகத் துடைத்து உலர்த்தவும்.

இதையும் படியுங்கள்:
பாத்திரம் கழுவும் சோப்பில் ஒளிந்திருக்கும் கெமிக்கல் ஆபத்து: எச்சரிக்கும் நிபுணர்கள்!
கை கழுவுதல் - Daily hygiene habits

கழுவ வேண்டிய நேரங்கள்.

உணவு சமைப்பதற்கு முன்பும்,

சாப்பிடுவதற்கு முன்பும் கழுவவும்.

கழிவறை பயன்படுத்தி விட்டு வந்த பின்பும் கழுவவும்.

தும்மும் போதும் இருமும் போதும் அல்லது மூக்கை சிந்தும் போதும் கழுவவும்.

வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியவுடன் கை கழுவவும்.

வளர்ப்பு பிராணிகளை தொட்டாலோ அல்லது குப்பைகளை தொட்டாலோ கை கழுவவும்.

கை கழுவுதல் - Daily hygiene habits
கை கழுவுதல் - Daily hygiene habits

கழுவுவதால் ஏற்படும் நன்மைகள்.

தொற்று நோய்களை தடுத்தல் -சளி ,காய்ச்சல் போன்ற சுவாச நோய் தொற்றுகள் மற்றும் கோவிட் 19 போன்ற வைரஸ் பாதிப்புகள் பரவுவதை இது குறைக்கிறது.

வயிற்றுப்போக்கை தடுத்தல்

வயிற்றுப்போக்கு மற்றும் குடல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை 30 %முதல் 48% வரை குறைக்கிறது.

கிருமிகைளை தடுத்தல்

நாம் போடும் பொருள்கள் மூலம் கைகளில் ஒட்டிக்கொள்ளும் பாக்டீரியா வைரஸ் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை முழுமையாக தடுத்து நீக்குகிறது.

உணவு பாதுகாப்பு

சமைப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவுவதால் கிருமிகள் உணவின் மூலம் உடலுக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது.

மற்றவர்களை பாதுகாத்தல்

நம் கைகள் சுத்தமாக இருப்பதால் நம்மிடம் இருந்து குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதில் கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

மருத்துவச் செலவை குறைத்தல்

சுத்தமான பழக்கத்தால் நோய்கள் வராமல் தடுத்து மருத்துவமனைச் செலவுகள் மற்றும் பள்ளி, வேலைக்கு செல்லாமல் தவிர்க்கும் விடுமுறை நாட்களை குறைக்கலாம்.

காலரா, டைபாய்டு மற்றும் குடல் தொற்றுகள் போன்ற தீவிரமான நோய்கள் வராமல் தடுக்க கை கழுவுதல் மிக எளிய மற்றும் மலிவான வழியாகும்.

நம் கைகளை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய மற்றும் சக்தி வாய்ந்த வழிகளில் ஒன்றாகும். முறையாகக் கை கழுவுவது நோய் தொற்றுகளை தடுக்கவும், கிருமிகள் பரவுவதை குறைக்கவும் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர் களையும், குடும்பத்தினரையும் பாதுகாக்கவும் இது உதவும்.

ஒவ்வொரு நாளும் நமது கைகள், கதவு ,கைப்பிடிகள், தொலைபேசி, பணம் மற்றும் பிறருடைய கைகள் எவ எண்ணற்றவர்களுடன் தொடர்பு கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் நகத்தில் இந்த அறிகுறிகளா? பெற்றோர் கவனிக்க வேண்டிய 9 விஷயங்கள்!
கை கழுவுதல் - Daily hygiene habits

இந்த கைபரப்பிகளால் சளி, காய்ச்சல் ,வயிற்றில் தொற்று நோய்கள் மற்றும் கடுமையான நோய்களை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பிற கிருமிகள் தங்கியிருக்க கூடும். இதனால் தவறாமல் கைகளை கழுவுவது மூலம் இந்த கிருமிகள் உடலுக்குள் நுழைவதற்கு முன்பே அவற்றை அகற்றி விடுகிறோம் .

இந்த எளிய பழக்கம் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை கணிசமாக குறைத்து நம்மையும், நம் அன்புக்குரியவர் களையும், வீட்டில் உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

இதனை செய்து இனிமேலாவது குடும்பத்தினர் அனைவரும் கைகழுவவதின்

முக்கியத்துவம் தெரிந்து செய்யுங்கள்.