வீடு கட்டத் துவங்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

house construction
house construction
Published on

சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும்போது, அந்த இடத்தைத் தேர்வு செய்வதில் இருந்து, அங்கு வீடு கட்டுவது வரை பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இடத்தின் முக்கியத்துவம்: பள்ளி, மருத்துவமனை, கடை, போக்குவரத்து வசதிகள் அருகில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

நிலத்தின் வகை: பசுமை நிலம், வருவாய்த் துறையின் ஒப்புதல், குடியிருப்பு நிலம் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.

உரிமை ஆவணங்கள்: பட்டா, சிட்டா, உரிமை பத்திரம், (கடன் பற்றிய விவரம்), FMB Map – நில அளவை வரைபடம், நீதிமன்ற வழக்குகள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

கட்டட வடிவமைப்பு: ஒரு அனுபவம் வாய்ந்த architect அல்லது civil engineerஐ அணுக வேண்டும். உங்கள் குடும்ப தேவைகள், எதிர்கால வளர்ச்சி, இட வசதி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தரமான 2D மற்றும் 3D வரைபடம் தயாரிக்கப்பட வேண்டும். வடிவமைப்பில், அறைகள் இட அமைப்பு, வெளிச்சம், காற்றோட்டம், படிக்கட்டுகள், வாயில், பூந்தோட்டம் இடம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிறியவர், பெரியவர் என அனைவரும் பின்பற்ற வேண்டிய குளியலறைப் பழக்க வழக்கங்கள்!
house construction

கட்டட அனுமதிகள் (Building Approval): நகராட்சி, நகர மேம்பாட்டு ஆணையம் (DTCP), பஞ்சாயத்து ஆகியவற்றிடமிருந்து கட்டட அனுமதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், கட்டுமானம் செய்யும் பொறியாளர் கையொப்பம், சொத்துக் காகிதங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மண் சோதனை (Soil Test): மண் எந்த அளவிற்கு (load-bearing) ஆற்றல் கொண்டது என்பதைக் கண்டறிய வேண்டும். உலர் மண், சோதனைக்கு ஏற்ற தண்ணீர் அளவு, நீர்நிலை (water table level), பாறை அமைப்பு ஆகியவை அறியப்பட வேண்டும். இதன் அடிப்படையில் foundation வகை தீர்மானிக்கப்படும்.

அடித்தள வேலை (Foundation Work): நிலம் சமமாக்கப்படுகிறது (leveling), பின்னர் marking (படத்தில் உள்ள அளவுகள் நிலத்தில் அடையாளம் காண்பது) , Footing வெட்டப்படும், அதில் கம்பிகள் அமைக்கப்படும் (steel reinforcement), Concrete ஊற்றப்படும். இது வீட்டு உறுதித்தன்மைக்கு மிக முக்கியமான அடிப்படை கட்டமாகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் வளரும் தாவரங்களிலும் அவசியம் வேண்டும் எச்சரிக்கை!
house construction

மேல் கட்டுமானம் (Superstructure): Foundationக்குப் பிறகு, சுவர்கள் (brick work), தூண்கள் (pillars), மாடிப்படி, slab casting (கூரை), பளபளப்பான plastering ஆகியவை செய்யப்படும். RCC (Reinforced Cement Concrete) slab வேலை மிக முக்கியம். வீடு முழுவதும் அமைப்பதற்கான பெரும் கட்டமைப்பு இதுதான்.

உள்புற வேலை (Interior Work): மின் இணைப்பு – ஒவ்வொரு அறையிலும் பிளக் பாயிண்ட், fan point, light point, நீர் குழாய்கள் அமைத்தல் (பாதுகாப்பான வெளியேற்றம் மற்றும் குடிநீர்), சுவர் சாமர்த்தியம், பைன்டிங், சாளரம் (windows), கதவு (doors), அழகான உள்தோற்றம் வரும்படி false ceiling, woodwork, tiles வேலை செய்யலாம்.

வெளிப்புறப் பணி (Exterior Work): வாயில் (compound wall) அமைத்தல், பணிக்குழாய் (Drainage system) அமைத்தல், வாயிலில் கேட், பூந்தோட்டம், மாடிப்படிகள், ஓரங்கட்டைகள், வாசல் பகுதியில் பைவர் பிளாக் அல்லது கான்கிரீட் flooring போடலாம்.

இதையும் படியுங்கள்:
ஓவர் நைட்டில் மில்லினியர் ஆன இருவரின் வியக்க வைக்கும் நிஜங்கள்!
house construction

9. இறுதிக் கட்டம் பரிசோதனை மற்றும் அனுமதி: பொறியாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பரிசோதனை செய்து ‘Completion Certificate’ வழங்குவர். பின்னர் ‘Occupancy Certificate’ (OC) – குடியிருக்கும் அனுமதி பெற வேண்டும். வாடகைக்கு விட, விற்பனை செய்ய அல்லது குடியேற இது அவசியம்.

10. குடியேறுதல் (Housewarming / Gruhapravesam): வீட்டில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் நடத்தி, குடும்பத்துடன் குடியேறலாம். மரபுப்படி சுப நாளில் பூஜைகள் செய்து வணங்கி கடவுளின் ஆசீர்வாதத்துடன் குடியேற வேண்டும்.

இந்தக் கட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்யப்படும்போது உங்கள் வீடு உறுதியானதாகவும் அழகானதாகவும் அமையும். வீடு என்பது வாழ்நாள் முதலீடு. ஆகவே, தெளிவான திட்டத்துடன் அதை செய்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com