இரட்டையர்கள் - 16 சுவையான தகவல்கள்! மூன்று வகையான இரட்டையர்கள் உண்டு தெரியுமா?

Twins
Twins
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

1. இரட்டையர்கள் என்பது ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதாகும். எனினும், கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்களில் சில வேறுபட்ட பண்புகள் இருக்கும். 

2. இரட்டையர்கள் ஒத்த நிறம், உருவங்களைக் கொண்டவர்களாயினும், அவர்களின் கைரேகைகள் மாறுபாடு கொண்டவை. பற்களிலும் சிறு வேறுபாடுகள் இருக்கும்.

3. உலகளாவிய நிலையில், 1000 குழந்தைப் பிறப்புகளில் 12 இரட்டைக் குழந்தைப் பிறப்பு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

4. இரட்டையர்களில் ஆண் - ஆண், பெண் - பெண், ஆண் - பெண் என்று மூன்று வகையான இரட்டையர்களாக இருக்கின்றனர். 

5. இரட்டைக் குழந்தைப் பிறப்பில், ஒத்த இரட்டைக் குழந்தைகள் (Identical Twins) அல்லது மோனோசைகோடிக் இரட்டையர்கள் (Monozygotic Twins) என்று இரண்டு வகைகளாக இருக்கின்றனர். 

6. இரட்டையர்கள் என்பது ஒரே பிரசவத்தில் குழந்தைப் பிறப்பது மட்டுமில்லை. ஏனெனில், முதல் குழந்தை பிரசவித்து, 85 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் மற்றொரு குழந்தை பிறந்துள்ளது.

7. இரட்டைக் குழந்தைகளின் எடை ஒற்றை குழந்தையின் எடையை விடக் குறைவாகவே இருக்கும். ஒற்றைக் குழந்தையின் சராசரி எடை 3.500 கிலோகிராம். ஆனால் இரட்டைக் குழந்தைகளின் எடை 2.500 கிலோகிராம் என்ற அளவிலேயே இருக்கும்.

8. ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை அதிகமாகப் பெறுபவர்கள் நைஜீரிய நாட்டுப் பெண்கள்தான். இங்கு 1000 குழந்தைப் பிறப்புகளில் 50 இரட்டைக் குழந்தைப் பிறப்புகள் இருக்கின்றன. 

9. பிரசவத்தின் போது இரட்டைக் குழந்தைப் பிறப்பு குறைந்து காணப்படும் நாடு சீனா.

10. இரட்டைக் குழந்தைப் பிறப்புகளில் 50% அதிகமாக 37 வாரங்களுக்கு முன்னரேப் பிறக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் இந்த விஷயங்களைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! 
Twins

11. இரட்டையர்களில் 22% ஆனோர் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இரட்டையவர்கள் அல்லாத மக்கள் தொகையில் 10% க்கும் கீழ்ப்பட்டவர்களே இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள்.

12. 50,000 முதல் 1,00,000 வரையிலான குழந்தைப் பிறப்புகளில், ஒரு பிறப்பு ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் பிறப்பாக இருக்கின்றது.

13. இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் இடையேயான பிணைப்பு கருப்பையிலேயே தொடங்கிவிடுகிறது. கர்ப்பத்தின் 14-வது வாரங்களில் இந்தப் பிணைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் மதிப்பிடுகிறார்கள்.

14.இரட்டையர்கள் தொடர்பிலான அறிவியல் கல்வியினை ‘இரட்டைக் குழந்தையியல்’ என்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் Gemellology என்கின்றனர்.

15. இரட்டையர்கள் மட்டுமின்றி, இரண்டுக்கு மேல் 3 முதல் 6 குழந்தைகள் வரை பெற்ற தாய்மார்களும் இருக்கின்றனர். 

16. உட்ரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1800 – 1970 ஆம் ஆண்டுகளிடையே குழந்தை பிரசவித்த 59,000 க்கும் அதிகமான பெண்களிடையே மேற்கொண்ட ஆய்வில், இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள், மற்ற தாய்மார்களை விட அதிக ஆயுளைக் கொண்டவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com