

வீட்டின் சுத்தமான பகுதியாக வைத்திருக்க வேண்டிய இடங்களில் முதன்மையாக இருக்கும் குளியலறைகளில் ஈரப்பதங்களும், சோப்பு எச்சங்களும், பிடிவாதமான கரைகள், மறைக்கப்பட்ட அழுக்கு இருப்பதால் அவற்றை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் குளியல் அறையின் ஒவ்வொரு மூலையையும் சுத்தமாக பராமரிக்கும் 10 நடைமுறை குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சோப்பு கறையை நீக்கவும்
குளியலறையின் டைல்ஸ்களில் இருக்கும் சோப்பு எச்சங்கள், கடின நீர்க்கரைகள், ஷவர் சுவர்கள் ஆகியவற்றில் அதிக ரசாயனம் இல்லாத திரவங்களை பயன்படுத்தி மேற்பரப்பில் மென்மையாக சுத்தம் செய்வது ஆழமான அழுக்கு படிவதை தடுக்கும்.
கிரௌட் கோடுகள்
குளியலறையில் ஈரப்பதம் ,அழுக்கு மற்றும் பூஞ்சையை எளிதில் சிக்க வைக்கும் கிரௌட் கோடுகள் பகுதியில் அடிக்கடி ஆழமாக தேய்த்து சுத்தப்படுத்துவது கறைகள் உருவாவதை தடுத்து சுவர்கள் மற்றும் தரையை புதிது போல மாற்றும்.
குளியலறை சாதனங்கள்
குளியல் அறையில் உள்ள குழாய்கள்,ஷவர்ஹெட்ஸ் மற்றும் கைப்பிடிகளில் கடின நீரால் கனிம படிவங்கள் இருப்பதை லேசான கரைசல்கள் கொண்டு சுத்தப்படுத்துவதால் குளியலறை சுத்தமாகவும், குளியலறை சாதனங்கள் பளபளப்பாகவும் காட்சி தரும்.
அடிக்கடி தொடப்படும் மேற்பரப்பு சுத்தம்
அடிக்கடி தொடும் ஃப்ளஷ் கைப்பிடிகள், குழாய்கள், அலமாரி கைப்பிடிகள் மற்றும் கதவு கைப்பிடிகளின் மேற்பரப்புகளில் உள்ள அழுக்குகளை கிருமி நாசினியால் துடைப்பது பாக்டீரியா பரவுவதை குறைத்து குளியலறையை சுத்தமாக்குகிறது.
கழிப்பறை பகுதியை சுத்தம் செய்யுங்கள்
கழிப்பறைப் பகுதியின் கிண்ணத்தை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள மேற்பரப்புகள், இருக்கை, மூடி, வெளிப்புற அடித்தளம் ,தரைப்பகுதி ஆகியவற்றை சுத்தம் செய்வதால் பாக்டீரியா கறைகள் மற்றும் நாற்றங்கள் அகற்றப்பட்டு கழிப்பறை ஆழமான சுத்தத்தோடு சுகாதாரமாக காட்சி தரும்.
குளியலறை கண்ணாடி
குளியலறை கண்ணாடியில் உள்ள நீர்த் துளிகள், கைரேகைகள், பற்பசை தெறிப்புகள் ஆகியவற்றை மென்மையான கண்ணாடி கரைசல் கொண்டு சுத்தம் செய்வதால் குளியல் அறை பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
சுத்தமான குளியலறை சேமிப்பு & துணைக்கருவிகள்
குளியலறையில் ஈரப்பதம் இருக்கும் இடங்களான சோப்பு டிஸ்பென்சர்கள், பல் துலக்கும் தட்டுகள், தட்டுகள் மற்றும் அலமாரிகள் போன்ற குளியலறை சேமிப்பு மற்றும் துணை கருவிகள் இருக்கும் இடங்களை ஒழுங்கமைத்து சுத்தம் செய்வதால் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது.
குளியலறை பாய்கள் மற்றும் துணி பொருட்களைப் புதுப்பிக்கவும்
தினந்தோறும் ஈரப்பதத்தை உறிஞ்சும் குளியலறை பாய்கள், துண்டுகள் மற்றும் ஷவர் திரைச்சீலைகளை மாதத்திற்கு இரண்டு முறை துவைத்து சுத்தப்படுத்துவதால் துர்நாற்றம், பூஞ்சை, காளான் தொற்றுகள் பாதிப்பில் இருந்து குளியலறையை பாதுகாக்கலாம் .
மறைக்கப்பட்ட மூலைகளுக்கு கவனம் செலுத்துங்கள்
கழிப்பறையின் அழுக்குகள் சேரும் இடமான கழிப்பறையின் பின்புற மூலை, சிங்க்குகளின் கீழ் பகுதி, குளியலறை ஓரங்களிலுள்ள தூசி, முடி மற்றும் அழுக்குகள் சேரும் இடங்களை சுத்தப்படுத்துவதால் பார்வைக்கு சுத்தமாக இருப்பதை உறுதி செய்கிறது.
காற்று சுழற்சியை மேம்படுத்தவும்
குளியலறையை புத்துணர்ச்சியூட்டவும், சரியான காற்றோட்டத்திற்கும், உலர்ந்ததாக வைக்கவும் எக்ஸாக்ட் ஃபேன்கள் மற்றும் திறந்த ஜன்னல்களை தவறாமல் பயன்படுத்துவது குளியலறை சுத்தத்திற்கு உகந்தது.
மேற்கூறிய முறைகளில் குளியலறையை சுத்தப் படுத்துவதால் புதிய கழிப்பறை போல காட்சி தரும்.