

நம் சமையலறையில் எங்கெங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் இருப்பதைப் போல, நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் கன்டெய்னர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஏனெனில், அவை வலுவானதும் குறைந்த செலவில் கிடைப்பதாலும் பயன்படுத்த எளிதானவை. ஆனால் அதேசமயம், சில உணவுகள் மற்றும் பொருட்களை பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல. அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமைக்கப்படாத இறைச்சி (Raw meats)
சமைக்கப்படாத இறைச்சியை பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் வைப்பது cross-contamination அபாயத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, airtight lid கொண்ட கண்ணாடி (glass) கன்டெய்னர்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
தக்காளி சாஸ் மற்றும் கறிகள் (Tomato sauces & curries)
இவற்றில் உள்ள அமிலத்தன்மை (acidity), பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து மணமும் கறையும் பதியச் செய்யும். மேலும் chemical leaching அபாயமும் உள்ளது.
பூண்டு, வெங்காயம், புதிய கீரைகள் (Garlic, onions & fresh herbs)
வாசனை அதிகமான இவற்றின் மணம் பிளாஸ்டிக்குள் ஊடுருவி நிரந்தரமாக தங்கிவிடும். கீரைகள் காற்றோட்டம் இல்லாததால் விரைவில் கெட்டு விடும்.
பழங்கள் (Fruits)
பெர்ரிகள், அவகாடோ, சிட்ரஸ் போன்ற பழங்களை பிளாஸ்டிக்குள் வைக்கும்போது ஈரப்பதம் அதிகரித்து விரைவில் கெட்டுப்போகும். கண்ணாடி அல்லது காற்றோட்டம் உள்ள பாத்திரங்கள் சிறந்தவை.
சூடான உணவுகள் (Hot foods)
சூடான உணவு அல்லது திரவங்களை பிளாஸ்டிக்குள் வைக்கக் கூடாது. அதிக வெப்பம் காரணமாக கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் வெளியேறலாம். உணவை ஆற வைத்து பிறகு சேமிக்கவேண்டும்.
எண்ணெய் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகள் (Oily, fatty foods)
எண்ணெய் மற்றும் கொழுப்பு, பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து அதை சேதப்படுத்தி, உணவுக்கு மாசுபாடு ஏற்படுத்தலாம். கண்ணாடி பாத்திரங்கள் சிறந்தது.
புத்தகங்கள் (Books)
ஈரப்பதம் உள்ள இடங்களில் பிளாஸ்டிக் பெட்டிகளில் புத்தகங்களை வைத்தால், பக்கங்கள் வளைந்து பூஞ்சை (mildew) உருவாகலாம்.
தோல் பொருட்கள் (Leather goods)
பைகள், காலணிகள் போன்ற தோல் பொருட்கள் பிளாஸ்டிக்குள் ஈரப்பதத்தால் சேதமடையும். Silica gel packets பயன்படுத்துவது நல்லது.
புகைப்படங்கள் (Photographs)
வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக புகைப்படங்கள் ஒட்டிக் கொள்ளவும், மங்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான special storage boxes பயன்படுத்துவது நல்லது.
மெழுகுவர்த்திகள் (Candles)
வெப்பம் அல்லது சூரிய ஒளி படும்போது மெழுகு உருகி, கன்டெய்னர்கள் வடிவம் மாறக்கூடும்.
சிறந்த மாற்று சேமிப்பு வழிகள்
பிளாஸ்டிக் கன்டெய்னர்களுக்கு பதிலாக கண்ணாடி (glass) கன்டெய்னர்கள் பயன்படுத்தலாம். இவை chemical reaction இல்லாதவை, கறை படாதவை,சூடு மற்றும் குளிர் இரண்டுக்கும் ஏற்றவை
மேலும், silicone bags போன்ற eco-friendly மாற்றுகளையும் பயன்படுத்தலாம்.