

வீட்டின் குளியலறை என்பது வீட்டில் பின்னணியில் இருந்த காலத்தை கடந்து விட்டு ஒவ்வொருவரின் தனி அறையின் ஒரு பக்கத்தை ஆக்கிரமித்துள்ளது.
சிறிய அளவு முதல் பெரிய அளவிலான குளியறைக்கு ஏற்ற வாஷ் பேசின் (wash basin) டிசைன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மர மேடையுடன் கூடிய வாஷ் பேசின் (wooden top wash basin)
ஒரு கிரேனைட் மேடையில் மேல் waterproof டீக் மரத்துடன் கூடிய மேடையில் வட்ட வடிவில் அல்லது நீள் வட்ட வடிவிலான பேசின் அமைப்பில், பேசின் வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் குளியலறைக்கு இயற்கையானதும் அழகானதுமான தோற்றத்தை வழங்கும். அதன் மேல் வட்ட அல்லது நீள்வட்ட வால்-மவுண்ட் டேப் மற்றும் round backlit மிரர் சேர்த்தால் modern touch கிடைக்கும்.
கார்னர் வாஷ் பேசின் (corner wash basin)
மிகச் சிறிய குளியலறைகளுக்கு மிகவும் பொருத்தமான இந்த open type corner wash basin. உங்கள் குளியலறை சிறியதாக இருந்தால், இந்த கார்னர் வாஷ் பேசின் (corner wash basin) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளியலறையின் மூலையில் பொருந்தக்கூடிய இந்த கார்னர் வாஷ் பேசின் அதிக இடத்தை மிச்சப் படுத்துகிறது. நடப்பதற்கு அதிக இடம் கிடைக்கும். விருந்தினர் குளியலறைகளிலும் பயன்படுத்தலாம்.
கான்கிரீட் வாஷ் பேசின்
கான்கிரீட் பேசின்கள் இப்போது மீண்டும் பிரபலமாகி வருகிறது. சற்றே கரடுமுரடான தோற்றம் இருந்தாலும் ஸ்டைலான உணர்வை அளிக்கின்றன; சாம்பல் நிறம் பல டைல்ஸ்களுடன் எளிதில் பொருந்தும், வலிமையானதும் நீடித்ததுமானது, பளபளப்பான பீங்கான் பேசின்களைவிட தனித்துவமாகத் தெரிகிறது, குறிப்பாக கருப்பு கிரேனைட் மேடைகளுடன் நன்றாக இணையும். இது புதுமை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். மரச்சட்டத்துடன் கூடிய சதுரக் கண்ணாடி பொருத்தலாம்.
LED விளக்கு பொருத்தப்பட்ட கண்ணாடி வாஷ் பேசின் (glass wash basin with LED lights)
நிறங்களை மாற்றும் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளுடன், மிகவும் நவீனமாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் உள்ள கண்ணாடி வாஷ் பேசின், அடர் நிற சுவர்களுடன் நன்றாக பொருந்தும்.
ஒப்பனை அறைகள் (dressing room & guest room) மற்றும் விருந்தினர் குளியலறைகளுக்கு மிகவும் சிறந்தது. இந்த வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. கீழே அல்லது பின்புறத்தில் உள்ள விளக்குகளுடன் கூடிய ஒரு ஒளிரும் தோற்றத்தை உருவாக்குகிறது.
இரட்டைக் குழாய் வடிவம் (double taps)
நீளமான தொட்டி வடிவிலான பேசின் ஒரு குடும்பத்திற்கு ஏற்ற எளிய மற்றும் பயனுள்ள வடிவமைப்பு ஆகும்; இரண்டு தனித்தனி பேசின்களுக்குப் பதிலாக ஒரே நீளமான பேசினைப் பயன்படுத்துவதால் ஒரே நேரத்தில் பலர் வசதியாக பயன்படுத்த முடியும். இதில் இரண்டு குழாய்களை பொருத்தலாம், இடத்தை மிச்சப்படுத்தி சுத்தமான மற்றும் தொடர்ச்சியான தோற்றத்தை வழங்கும். குறிப்பாக குடும்ப குளியலறைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், மேலும் இது ஒரு நவீன ஹோட்டல் போன்ற அழகான உணர்வையும் தருகிறது. இதற்கு செவ்வக வடிவ கண்ணாடிகள் மிகப் பொருத்தம்.
பளபளப்பான உலோக பேசின் (Polished metal basin)
பித்தளை அல்லது செம்பு போன்ற உலோகத் தொட்டி பேசின்கள் அரிதாகக் காணப்படுவதால் குளியலறைக்கு கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான தோற்றத்தை வழங்குகின்றன; அவை உடனடியாக ஆடம்பர உணர்வை உருவாக்கி, அடர் அல்லது பளிங்குப் பின்னணிகளுடன் நன்றாக பொருந்தும், மேலும் ஒரு தனித்துவமான முக்கிய அம்சமாக மாறுகின்றன. ஆனால் முறையான பராமரிப்பு அவசியம். ஆகவே உங்கள் குளியலறை மற்ற வற்றிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்றால் இது சிறந்த தேர்வாகும். இதற்கு லேசர் கட்டிங் ஃபிரேம் கொண்ட கண்ணாடி பொருத்தலாம்.
அலமாரியில் உட்புறம் இருக்கும் பேசின்
சிறிய இடங்களுக்கு ஏற்ற மற்றும் தனித்துவமான வசதியை வழங்கும்; இது சேமிப்பையும் பேசினையும் ஒரே யூனிட்டில் இணைத்து குளியலறைக்கு சுத்தமான மற்றும் நவீன வடிவமைப்புடன் தோன்றச் செய்யும்.
வண்ணமயமான பீங்கான் தொட்டி வடிவமைப்பு
வண்ணம் தீட்டப்பட்ட வடிவமைப்பு கொண்ட பேசின் வெற்று வெள்ளை நிறத்தில் இல்லாமல், பல வண்ணம் பூசப்பட்ட பேசின்கள், வடிவங்கள், அச்சுகள் அல்லது hand arts எனப்படும் கையால் வரையப்பட்ட வடிவமைப்பு களுடன் கிடைக்கின்றன.
குளியலறைக்கு முழுமையான மாற்றம் தேவையில்லை; கை கழுவும் தொட்டியின் வடிவமே பெரும் பங்கு மாற்றத்தை ஏற்படுத்தும். மேலே, சிறிய இடங்களுக்கானது முதல் பிரம்மாண்ட அலங்கார பொருட்கள் வரை, ஒவ்வொரு வீட்டிற்கும் பொருத்தமான வித்தியாசமான வடிவமைப்புகள் உள்ளன. சரியான வடிவமைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.