புரியாத புதிர் அல்ல வாழ்க்கை... புரிந்து கொண்டால் அது ஒரு வசந்தம்!

Lifestyle articles
Lifestyle articles
Updated on

னிதனின் வாழ்வில் ஏதாவது ஒரு பிரச்னை வந்து போகாமல் இருப்பதே இல்லை. பருவம் தவறி திடீரென மேகக்கூட்டங்கள் அணிவகுத்துச்சென்று சம்பந்தமே இல்லாமல் மழையை தந்துவிட்டு விரைவாய் கலைந்து செல்கின்றன. இது காலநிலை, பருவநிலை மாற்றம்.

அதேபோல குடும்பங்களிலும் உளவியல் ரீதியாக கருத்துப் பறிமாற்றங்கள் வந்து போவது இயல்பான ஒன்று. சில விஷயங்கள் பொிதான பாதிப்பை தருவதில்லை மாறாக சில தருணங்களில் தேவையில்லாமல் பூதாகரமாகி பிாிவினை வரை போய்விடுகிறது.

இத்தகைய மனேநிலை வரக்காரணம் என்ன என்று ஆராய்ந்து பாா்த்தால் சிம்பி்ள் மேட்டர். நான்கே எழுத்துதான் அது புாிதல்தான்.

குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் சரியான புாிதல் இல்லாத நிலையில் அடுத்தவர் தலையீடு வரத்தான் செய்யும்.

அதை சரிசெய்ய நம்மால் முடியாதா? முடியும் இருதரப்பு களுக்குள்ளும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அகலவேண்டும், அதில்தான் பாதிப்பே, அதுமட்டுமா பாதி நபர்களை சிரமத்தின் எல்லைக்கே கொண்டுபோய் விட்டுவிடுமே!

பொதுவாகவே வாழ்வில் கோபம், விரக்தி, எடுத்தேன் கவிழ்த்தேன் போன்ற செயல்பாடு, தவறான முன்னுதாரனமாக அமையும்போது நமக்கு நிதானம் வேண்டும் அதை கடைபிடிக்கா விட்டால் சிக்கல்தான். அந்த தருணத்தில் அன்பும் பாசமும் ஒற்றுமையும் நமக்கு கைகொடுக்க வரும்.

இதையும் படியுங்கள்:
டென்ஷன் ஃப்ரீ எக்ஸாம்… பதற்றமில்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி?
Lifestyle articles

ஆனால் அதை நாம் உதறித்தள்ளிவிடலாமா அது தவறு சரியான புாிதல் இல்லாத வாழ்க்கை பிாிதலில்தான் முடியும்.

பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் அமைந்துவிட்டாலே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

அந்த குணம் நம்மிடமே உள்ளது சின்ன சின்ன விஷயங்களை ஊதி பொிதாக்காமல் இருப்பதே நல்ல அணுகுமுறையாகும்.

புாியாத புதிராகவே வாழமுடியாது, புாிதல் இல்லா வாழ்வில் சந்தேகம் வரும் நேரம் அதை பேசி தெளிவு படுத்திவிடவேண்டும், அப்படியே மனதிற்குள் பூட்டி வைப்பதால் ஒருவருக்கும் நல்லதல்ல, அதற்கு உடனடியாக பேசி தீா்வு கண்டுவிட்டால் புாிதல் இல்லா வாழ்வில் பாதி பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

பொதுவாக பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்தால் பிறந்த வீட்டின் பெருமையை எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது, அதேபோல புகுந்தவீட்டின் நிறைகுறைகளும் பிறந்த வீட்டிற்கு போகக்கூடாது.

அதுதான் நல்ல குடும்பத்திற்கு அழகு புகுந்த வீட்டை தன் வீடாக நாம் வாழவந்த வீடாக மனைவியும், நம்மை நம்பி வந்த மனைவியை புாிந்துகொண்டு நமக்கானவள் நம்மை நம்பி வந்திருக்கிறாள் என உணர்ந்து அன்பாக வாழ்ந்து வந்தாலே பிரச்னை எனும் சைத்தான் உள்ளே வரவே வராது.

இதையும் படியுங்கள்:
சமையலறை ரொம்ப சின்னதா இருக்கா... இந்த 6 தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!
Lifestyle articles

ஆக! நமக்கு நாமே துணை, நம்கையே நமக்கு உதவி, இரு கைகள் தட்டினாலே சப்தம் வரும், மாறாக சரியான பரஸ்பர அன்பு காட்டி கணவன் மனைவியாகிய நான்கு கரங்கள் தட்டினால் கேட்கவா வேண்டும், வசந்தம் வீடு தேடிவருமே! அதை கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com