குறைவான செலவில் மாளிகை போன்ற தோற்றம் தருவது எப்படி?

லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் வீட்டை ஆடம்பரமாக மாற்றும் எளிய வழிகள்.
மாளிகை
மாளிகை Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

முறையான இன்டீரியர் திட்டமிடல் மற்றும் சில எளிய மாற்றங்கள் மூலம் நம்முடைய சிறிய வீட்டையும் ஒரு ஆடம்பரமான மாளிகை போல மாற்ற முடியும். வீட்டை பிரம்மாண்டமாகவும் அழகாகவும் காட்ட அதிக செலவு செய்ய வேண்டியது இல்லை. சரியான நிறங்கள், வெளிச்சம் மற்றும் இட மேலாண்மை இருந்தாலே போதுமானது.

1. சுவர்களின் வண்ணத் தேர்வுகள் (Color Palette):

நியூட்ரல் டோன்கள்:

சுவர்களுக்கு மென்மையான க்ரீம், வெளிர் சாம்பல் அல்லது ஆஃப் ஒயிட் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துலாம். இது அறையை பெரியதாகவும், அகலமானதாகவும், அழகாகவும், வெளிச்சமாகவும் காட்ட உதவும்.

காண்ட்ராஸ்ட் லுக்:

வெள்ளை நிற சுவர்களுக்கு இணையாக ஒரு சுவரில் மட்டும் அடர் நீலம், எமரால்டு பச்சை, மெரூன் போன்ற தடிமனான ராயல் வண்ணங்களைப் பூசி அதற்குப் பொருத்தமான விளக்குகளைப் பொருத்தினால் மாளிகை போன்ற தோற்றத்தைக்கொண்டு வரலாம்.

2. பிரம்மாண்டமான லைட்டிங் (luxury lighting):

ஸ்டேட்மென்ட் லேம்ப்ஸ்:

ஒரே ஒரு டியூப்லைட்டிற்கு பதிலாக வார்ம் ஒயிட் நிற எல்.இ.டி விளக்குகள், ஸ்பாட்லைட்டுகள் மற்றும் சுவர்களில் ஒளிரும் ஃபேன்சி விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

ஹாலின் நடுவே ஒரு அழகான ஜொலிக்கும் கிரிஸ்டல் சாண்ட்லியர் (Chandelier) அல்லது நவீன பெண்டண்ட் விளக்குகளைத் தொங்கவிடலாம்.

டைனிங் டேபிள் அல்லது ஹாலின் மையப் பகுதியில் தொங்கும் விளக்குகளைப் பயன்படுத்துவது வீட்டின் அழகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

மறைமுக வெளிச்சம் (Ambient Lighting):

சுவர்கள் மற்றும் ஃபால்ஸ் சீலிங் பகுதிகளில் LED ஸ்ட்ரிப் விளக்குகளைப் பயன்படுத்துவது வீட்டிற்கு ஒரு சொகுசு ஹோட்டல் போன்ற பிரீமியம் லுக்கைத் தரும்.

3. பர்னிச்சர் மற்றும் துணிகள்:

பெரிய சோபா செட்கள்:

சிறிய பர்னிச்சர்களைப் போடுவதற்கு பதிலாக ஹாலில் ஒரு பெரிய எல்-ஷேப் சோபாவை அமைப்பது இடத்தை அகலமாகக் காட்டும்.

வெல்வெட் மற்றும் சில்க்:

சோபா உறைகளுக்கு வெல்வெட் துணிகளையும், தரையில் விரிப்பதற்கு நல்ல தரமான கம்பளங்களையும் (Rugs) பயன்படுத்தினால் ஆடம்பரம் பளிச்சிடும்.

மாளிகை
மாளிகைGemini image

4. கலைப் பொருட்கள் மற்றும் கண்ணாடிகள்:

பெரிய கலைப் படைப்புகள்:

சுவர்களில் பல சிறிய படங்களை மாட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு பெரிய மார்டன் ஆர்ட் பெயிண்டிங் அல்லது மர வேலைப்பாடுகள் கொண்ட கலைப் பொருட்களை வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
செலவில்லாமல் வீட்டில் உள்ள பொருட்களில் கொலுப்படி அமைப்பது எப்படி?
மாளிகை

மரச் சிற்பங்கள் அல்லது சுடுமண் சிற்பங்களை வைப்பது வீட்டிற்கு ஒரு கலைநயம் மிக்க கம்பீரமான தோற்றத்தைத்தரும்.

5. பிரமிப்பூட்டும் கண்ணாடிகள்:

சுவரில் பெரிய அளவிலான அலங்காரக் கண்ணாடிகளை மாட்டுவதன் மூலம் வெளிச்சம் பிரதிபலித்து அறை இரண்டு மடங்கு பெரியதாகத் தோன்றுவதுடன் வீட்டிற்கும் ஒரு புதுப்பொலிவைத் தரும்.

6. இட மேலாண்மை:

மறைமுக சேமிப்பு:

மாளிகை போன்ற தோற்றத்திற்கு மிக முக்கியமான விஷயம், வீடு சுத்தமாக இருப்பதுதான். வீட்டின் தேவையில்லாத பொருட்களை ஆங்காங்கே குவித்து வைக்காமல், வார்ட்ரோப் அல்லது மல்டி பர்பஸ் பர்னிச்சர்களில் சேமித்து வீட்டை எப்போதும் சுத்தமாக பராமரிக்கலாம். அத்துடன் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி, மினிமலிசம் பாணியைப் பின்பற்றினாலே வீடு கம்பீரமாக தோற்றமளிக்கும்.

7. உயரமான திரைச் சீலைகள்:

ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் போடும்பொழுது கூரையின் உயரத்திலிருந்து தரை வரை தொங்குமாறு அமைத்தால் சுவர்கள் அதிக உயரமுடையதாகத் தோன்றும். வெல்வெட் அல்லது சில்க் கலந்த திரைச்சீலைகள் மற்றும் சோபா குஷன்களைப் பயன்படுத்துவது வீட்டிற்கு அழகான தோற்றத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
பெரிய செலவை வைக்கும் வீடு! தப்பிப்பது எப்படி? மாதாந்திர பராமரிப்பு டிப்ஸ்!
மாளிகை

8. இன்டோர் செடிகள்:

வீட்டின் மூலைகளில் Monstera, Snake Plant மற்றும் Areca Palm போன்ற பெரிய இலைகள் கொண்ட செடிகளை வைப்பது புத்துணர்ச்சியையும் மாடர்ன் லுக்கையும் தரும்.

9. மெட்டாலிக் டச்:

கதவின் கைப்பிடிகள், விளக்குகள் மற்றும் போட்டோ பிரேம்களில் கோல்டன் அல்லது பிராஸ் ஃபினிஷிங் இருந்தால் அது வீட்டின் மதிப்பை உயர்த்திக்காட்டும்.

வாசகர்கள் அதிக பொருட்செலவின்றி, சிறிய மாற்றங்கள் மூலமாகவே தங்கள் இல்லத்தை ஒரு சொகுசு மாளிகையின் தோற்றத்திற்கு மாற்றக்கூடிய கைதேர்ந்த வழிகளைப் பெற்றுச் செல்வர்.