கேஸ் சிலிண்டரில் இந்த குறியீடு இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

எல்பிஜி சிலிண்டரில் உள்ள ரகசிய குறியீடும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிகளும்.
சிலிண்டர் சோதனை
சிலிண்டர் சோதனைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி உண்டு என்பதால், அவற்றைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். வீட்டு சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் காலாவதி தேதி (Expiry Date) சிலிண்டரின் மேல் பகுதியில் உள்ள மூன்று இரும்புப் பட்டைகளில் (Metal Strips) ஒன்றில் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். அந்த உலோகப் பட்டையில் தேதி, ஆங்கில எழுத்து மற்றும் எண்களால் பொறிக்கப்பட்டிருக்கும். இதைக்கொண்டு கேஸ் சிலிண்டர் காலாவதி ஆகிவிட்டதா என்பதைக் கண்டறியலாம். இந்த குறியீடு காலாவதி தேதி அல்ல. LPG சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி கிடையாது. மாறாக இது சோதனை தேதி (test date) என்று அழைக்கப்படுகிறது.

இந்தியன் ஆயில் படி எல்பிஜி சிலிண்டர்கள் வலுவான எஃகால் ஆனவை. அவை BSI 3196 தரநிலைகளின் படி தயாரிக்கப்படுகின்றன. அவை CCOE மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்யப்படுகின்றது. நீண்ட காலம் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை சிலிண்டரை சோதனைக்கு அனுப்புவார்கள். அதன்பிறகு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் சிலிண்டர்கள் சோதிக்கப்படும். இது Statutory Testing & Painting என்று அழைக்கப்படுகிறது.

இந்த சிலிண்டர் சோதனை எப்போது செய்யப்பட வேண்டும் என்பதை அடையாளம் காண்பதற்காகத்தான் இந்த குறியீடு. இந்த சோதனை தேதிக்குப் பிறகு அதை ஆலைக்கு எடுத்துச் சென்று சிலிண்டர்கள் பிரிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. சோதனையில் தோல்வி அடைந்த சிலிண்டர்கள் மாற்றப்படும்.

சிலிண்டர் சோதனை
சிலிண்டர் சோதனைGemini image

தேர்ச்சி பெற்ற சிலிண்டர்கள் மீண்டும் வண்ணம் தீட்டப்பட்டு புதிய சோதனை தேதியுடன் திருப்பி அனுப்பப்படும். இந்த சோதனை தேதிக்குள் நமக்கு வரும் சிலிண்டர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சோதனை தேதியைக் கடந்த சிலிண்டர்கள் அல்லது துருப்பிடித்த அல்லது சேதமடைந்த சிலிண்டர்கள் வந்தால் அவற்றைப் பற்றி உடனடியாக விநியோக முகவருக்கு தெரிவிக்க வேண்டும்.

வீட்டுக்கு சிலிண்டர் வந்ததும் அதற்கு சீல் இருக்கிறதா, எடை சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கும் நாம் சோதனைத் தேதியை சரி பார்க்க வேண்டும். சோதனை தேதிக்குள் இருக்கும் சிலிண்டர்கள் மட்டுமே நமக்கு வழங்கப்படும் என்றாலும் சோதனைத் தேதியைக் கடந்த சிலிண்டர் அல்லது துருப்பிடித்த அல்லது சேதமடைந்த சிலிண்டர்கள் வந்தால் உடனடியாக விநியோக முகவருக்கு தெரிவிக்க வேண்டும். காரணம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை சிலிண்டரை சோதனைக்கு அனுப்புவார்கள். அதன்பிறகு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் சிலிண்டர்கள் சோதிக்கப்படும்.

இருப்பிடம் மற்றும் குறியீட்டு அர்த்தங்கள்:

சிலிண்டரில் A, B, C, D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் ஒரு எழுத்துடன் இரண்டு எண்கள் எழுதப்பட்டிருக்கும். இது சிலிண்டரின் கழுத்துப் பகுதியில் உள்ள மூன்று செங்குத்து இரும்புப் பட்டைகளில் ஒன்றில் முத்திரையாக குத்தப்பட்டிருக்கும்.

மாதங்களைக் குறிக்கும் எழுத்துக்கள்:

A: ஜனவரி முதல் மார்ச் வரை (முதல் காலாண்டு)

B: ஏப்ரல் முதல் ஜூன் வரை (இரண்டாம் காலாண்டு)

C: ஜூலை முதல் செப்டம்பர் வரை (மூன்றாம் காலாண்டு)

D: அக்டோபர் முதல் டிசம்பர் வரை (நான்காம் காலாண்டு)

இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
சிலிண்டர் சோதனை

ஆண்டைக் குறிக்கும் எண்:

எழுத்துக்கு அருகில் உள்ள இரண்டு இலக்க எண் உதாரணத்துக்கு C-26 என்றால் 2026 ஆம் ஆண்டு ஜூலை- செப்டம்பர் மாதத்தைக் குறிக்கும்.

A-26 என்றிருந்தால், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சிலிண்டர் காலாவதி ஆகிறது என்று பொருள்.

B-27 என்றிருந்தால் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் சிலிண்டர் காலாவதி ஆகிறது என்று பொருள்படும்.

D-28 என்றிருந்தால் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் சிலிண்டர் காலாவதி ஆகிறது என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
கேஸ் ஸ்டவ் பர்னர் அடைப்பா? புதியது போல மின்ன வைக்க எளிய வழிகள்!
சிலிண்டர் சோதனை

நடப்பு ஆண்டு மற்றும் மாதத்தைத் தாண்டிய குறியீடு இருந்தால், அந்த சிலிண்டர் காலாவதி ஆகிவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பு கருதி அத்தகைய சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது. இனி நம் வீட்டு சிலிண்டரை வாங்கும் பொழுது, இந்தத் தேதியை சரிபார்த்து தற்போதைய வருடத்திற்கு முந்தைய வருடம் இருந்தால் உதாரணத்திற்கு இப்போது 2026 ஆம் ஆண்டு என்பதால் 2025 அல்லது அதற்கு முன் உள்ள வருடங்களை அவை குறிப்பதாக இருந்தால் அதை வாங்க மறுக்கலாம்.

இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை உடனடியாகக் கண்டறியும் திறன் உங்களுக்குக் கிடைக்கும். விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டரைப் பெறும்போது ஆபத்தான மற்றும் சோதனை தேதி முடிந்த சிலிண்டர்களைத் தவிர்த்து, உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்ய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com