நிர்வாகத் திறமை - கிளிகளின் விலையும் கமிட்டியின் விதிகளும்!

Parrot
Parrot
Published on

கிளியின் விலை என்ன? :

ஒரு மனிதர் கிளி ஒன்றை வாங்கி வளர்ப்பதற்காக கிளிகளை விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றார். கடைக்காரர் அவரை வரவேற்று கூண்டில் இருக்கும் கிளிகளைக் காண்பித்தார். அதிசயமாக மூன்று கிளிகள் ஒரே மாதிரியாக இருந்தன. அதைப் பார்த்த கிளியை வாங்க வந்த மனிதர் விலையைக் கேட்டார்.

கடைக்காரர் இடது புறம் இருக்கும் கிளி 500 ரூபாய் ஆகும் என்றார். ‘என்ன, அதிக விலையை அல்லவா சொல்கிறீர்கள், என்ன விசேஷம் இந்தக் கிளிக்கு இருக்கிறது’ என்று கேட்டார் அவர். "இந்தக் கிளிக்கு கம்ப்யூட்டரை எப்படி இயக்க வேண்டும் என்று தெரியும்" என்றார் கடைக்காரர்..

அடுத்தாற்போல நடுவில் இருந்த கிளியின் விலை 1000 ரூபாய் என்றார் அவர். “ஏன் அப்படி அதிக விலை?” என்று கேட்ட போது அவர், ”இந்தக் கிளி முதல் கிளி என்னவெல்லாம் செய்கிறதோ அதைச் செய்வதோடு யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தையும் கையாளும்” என்றார்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி கடன் கேட்பவர்களிடம் ‘நோ’ சொல்லி தப்பிக்க 10 ஆலோசனைகள்!
Parrot

“சரி மூன்றாவது கிளியின் விலை என்ன?” என்று கேட்கப்பட்ட போது அதன் விலை 2000 ரூபாய் என்றார் கடைக்காரர்.

“எதற்காக இப்படி ஒரு இரட்டிப்பு விலை? இந்தக் கிளி அப்படி விசேஷமாக என்ன செய்யும்?” என்று கேட்டபோது கடைக்காரர் சொன்னார் இப்படி: ”உண்மையாகச் சொல்லப் போனால் இந்தக் கிளி எதையும் செய்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் இந்த மற்ற இரண்டு கிளிகளும் இதை “பாஸ்! பாஸ்!” என்று அழைக்கின்றன!”

நிறுவனத்தில் அமைக்கப்படும் கமிட்டியின் விதிகள்:

ஒருபோதும் சரியான நேரத்திற்கு வந்து விடாதீர்கள். ஒருவேளை அப்படி நீங்கள் வந்தால் நீங்கள் ஒரு கத்துக்குட்டி என்ற பெயரைச் சூட்டி விடுவார்கள்.

பாதி கூட்டம் நடக்கும் வரை பேசவே பேசாதீர்கள். இப்படி இருந்தால் உங்களை புத்திசாலி என்று மற்ற அனைவரும் நினைப்பார்கள்.

எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் வழ வழவென்று பட்டுக் கொள்ளாமல் இழுத்தடியுங்கள். இதனால் மற்றவர்கள் எரிச்சல் அடைவதைத் தவிர்த்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறதா? 20's கிட்ஸ்க்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!
Parrot

சந்தேகம் ஏற்படும் போது ஒரு சப்-கமிட்டி போடலாம் என்று உடனடியாகக் கூறி விடுங்கள்.

இந்தக் கூட்டத்தை ஒத்தி வைப்போம் என்று சொல்வதில் முதலாவது ஆளாக நீங்கள் இருங்கள். இது உங்களை பிரபலமாக்கி விடும். இதற்காகத் தான் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருகின்றனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com