மைக்ரோவேவ் ஓவன் வைத்திருக்கிறீர்களா? இதையெல்லாம் செய்யவே கூடாது - உஷார்!


Microwave oven
Microwave oven
Published on

ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் பழைய உணவுகள், சட்னி கூட ஓவனில் சூடாக்கி எடுக்கலாம். பேக்கரியில் செய்வது போல வீட்டிலும் கேக் செய்ய உதவும். புதுமையாக எந்த சமையலும் இதில் செய்யலாம். ஓவனை அக்கறையோடு பராமரிக்க சில டிப்ஸ்.

மின்சார அடுப்பு அல்லது கேஸ் அடுப்புக்கு மிக அருகில் ஓவனை வைக்கக்கூடாது. அவற்றிலிருந்து வரும் வெப்பமும், நீராவியும் மைக்ரோவேவ் ஓவனை இயக்கத்திற்கு தடையாக அமையலாம்.

ஓவன் வைத்திருக்கும் இடத்துக்கு மேலே போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். ஒரு அலமாரியின் உள்ளோ மிகவும் நெருக்கமான இடத்திலோ இதை வைக்கக்கூடாது.

ஓவனில் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துங்கள் எவர்சில்வர் மற்றும் சாதாரண கண்ணாடி பாத்திரங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

ஓவனில் கதிரியக்க அலைகள் மூலம் சமையல் நடக்கிறது சமைத்து முடித்து ஓவன் மணி அடித்த பின்னரும் ஓரிரு நிமிடங்களுக்கு தொடர்ந்து இந்த கதிர்களின் தாக்கம் இதற்குள் இருக்கும். அதன் பிறகுதான் ஓவனைத் திறந்து உணவை வெளியில் எடுக்க வேண்டும்.

நீக்ரோ ஓவனில் குறைந்த அளவில் சமையல் செய்யும் போது மின்சார செலவு குறையும். ஆனால் பெரிய அளவுகளில் நிறைய பேருக்கு சமைக்கும்போது சாதாரண அடுப்பிலேயே செய்யலாம்.

எண்ணெயயை சூடேற்றி பொரித்து எடுக்கும் சமையல் வகைகளை மைக்ரோவேவ் ஓவனில் செய்யக்கூடாது.

இனிப்பு வகைகளை ஓவனில் சூடு செய்யலாம். ஆனால் இனிப்பு வகைகளில் சில்வர் ஃபாயில் பேப்பர் ஒட்டி வைத்திருந்தால் அதை ஓவனில் சூடு செய்யக்கூடாது.

சமைக்கப்பட்ட பழைய உணவை ஒரு தட்டி பரப்பி வைத்தும் சூடேற்றும்போது ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ சூடேற்றினால் போதும்.

சமைக்கப்பட்ட கறி வகைகை சூடு பண்ணும்போது ஓவனை மூடியே உபயோகிக்க வேண்டும். ஆனால் இடையில் ஆப் செய்து மூடியைத் திறந்து ஓரிரு தடவைகள் கிளறிவிட்டால் பரவலாக உணவு சூடேறும்.

இதையும் படியுங்கள்:
திருமணம் ஏன் செய்தோம் என்று நினைக்கத் தோன்றுகிறதா? - இந்த மாற்றங்களைச் செய்து பாருங்கள்!

Microwave oven

ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கும் பச்சை பட்டாணி, சோளம் ஏற்கனவே சமைத்து உறைய வைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை நேரடியாக பாக்கெட்டோடு மைக்ரோவேவில் செய்யும்போது அந்த பாக்கெட்டுகளில் சிறு துளைகள் இடவேண்டும். இப்படி செய்யாது போனால் பாக்கெட் வெடித்து உள்ளே இருக்கும் உணவு சிதற வாய்ப்பு உண்டு.

ஓவனில் வைக்கப்படும் பாத்திரம் சூடாவது இல்லை என்பதால், உணவு சூடாக இருப்பது நமக்கு தெரியாது. எனவே உணவோ, பால் போன்றவற்றை சூடாக இருக்கிறதா? என்று பார்த்து பரிமாறலாம்.

சிறிய கழுத்து உள்ள பாத்திரங்களில் உணவுகளையோ, பான வகைகளையோ வைத்து சூடேற்றக்கூடாது. ஓரளவு அகன்ற வாயுள்ள பாத்திரங்களை உபயோகிக்கலாம். ஆனால் தொடர்ந்து அதிக நேரம் பாத்திரங்களை சூடேற்றுவது அவ்வளவு நல்லது அல்ல. அவை வெடிக்கும் அபாயம் உண்டு. இதனை தெரிந்துகொண்டு ஓவனில் சமைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com