உங்கள் மிக்ஸி 15 ஆண்டுகள் வரை உழைக்கணுமா? இதோ எளிமையான பராமரிப்பு ரகசியங்கள்!

குறைவான தேய்மானத்துடன் மிக்ஸியின் ஆயுளை இருமடங்காக உயர்த்த உதவும் அறிவியல் பூர்வமான வழிகள்.
மிக்ஸி பராமரிப்பு - Mixer Grinder Care
மிக்ஸி பராமரிப்பு - Mixer Grinder Care
Updated on

ம்மியில் தொடங்கிய நம் சமையல் பயணம், இப்போது ‘மிக்ஸியில்’ போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் அம்மி நம் உடல் செயல்பாட்டிற்கும், நா ருசிக்கும் நல்ல பலன் தந்தாலும், ‘நேரம்’ என்னும் ஒன்றிற்காக உலகம் மிக்ஸியை நோக்கி நகர்ந்து விட்டது. சரி உங்கள் மிக்ஸி நன்றாக உள்ளதா? அதன் ஆயுட்காலத்தை எப்படி அதிகரிக்கலாம்? மிக்ஸர் கிரைண்டரை எப்படி முறையாக கையாளலாம்?

ஒரு ‘மிக்ஸர் கிரைண்டர்’ என்பது நம் சமையலறையில் வெறும் பத்தொன்னு பதினொன்றாய் இருக்கும் கருவி மட்டுமல்ல; அது கொஞ்சம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டிய இயந்திரம் ஆகும். பயன்படுத்திய உடனேயே ஜாடிகளை (Jars) எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும். காரணம், அதில் உள்ள உணவுக் கழிவுகள் விரைவாகக் காய்ந்து, பாக்டீரியா வளர்ச்சிக்கும் பிளேடுகள் தேய்வதற்கும் காரணமாகின்றன.

அரைக்கும்போது ஜாடிகளில் அளவுக்கு அதிகமாக பொருட்களை நிரப்புவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது மிக்ஸியின் மோட்டாருக்கு அதிக அழுத்தத்தை அளித்து, அரைக்கும் திறனைக் குறைக்கிறது.

இடைவெளிகளுடன் கூடிய குறுகிய நேர மிக்சி இயக்கங்கள் (வெறும் 30–60 வினாடிகள்), அதன் மோட்டார் அதிகளவு தேய்மானத்தை தடுக்கின்றன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

செய்யவேண்டிய முன்கூட்டிய மிக்ஸி பராமரிப்பு:

பிளேடு பராமரிப்பு(Blade): மாதந்தோறும் அதன் பிளேடுகளைப் பரிசோதிக்க வேண்டும். காரணம் தேய்ந்த பிளேடுகள் மோட்டாரைக் கடினமாக வேலை செய்ய வைத்து, அதன் ஆயுளைக் குறைக்கின்றன.

மோட்டார் பகுதியின் பாதுகாப்பு: மிக்சி இருக்கும் இடத்தை காய்ந்த (dry) நிலையில் வைத்திருங்கள்; காரணம் ஈரப்பதம் மிக்சியின் ‘உள் பாகங்களை’ துருப்பிடிக்க வைக்கிறது.

கப்ளர் சோதனை(Coupler): மோட்டாரில் இருந்து கிடைக்கும் செயல்திறன் முழுமையாக கிடைக்க, ‘ஒவ்வொரு மிக்சி ஜாரின்(jar) அடியில் இருக்கும்’ கப்ளர் ‘தேயாமல் இருக்கிறதா!’ என்பதை எப்போதும் சோதிக்க வேண்டும்.

மிக்ஸி பராமரிப்பு - Mixer Grinder Care
மிக்ஸி பராமரிப்பு - Mixer Grinder Care

மின்னழுத்த நிலைத்தன்மை (Voltage): இந்தியாவில் நிகழும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் நம் வீட்டின் கருவிகளுக்கு ஒரு மறைமுக எதிரிகளாகும். இதை தடுக்க ஒரு சர்ஜ் ப்ரொடெக்டர்(surge protector) அல்லது ஸ்டெபிலைசரைப் பயன்படுத்துவது உங்கள் வீட்டின் சாதனத்தின் ஆயுளைப் பல ஆண்டுகள் நீட்டிக்க உதவும்.

ஆயுட்காலத்தைக் குறைக்கும் நாம் செய்யும் தவறுகள்

● மிக்சியை வெறுமென(Empty) இயக்குவது, அதற்கு சுமை இல்லை என்று நாம் நினைப்போம். ஆனால் அதுவும் ‘மோட்டாருக்கு பிரச்னையை ஏற்படுத்தும்’.

● தவறான ஜாடியை பயன்படுத்துவது. காரணம் மசாலா பொருட்கள் போன்ற கடினமான பொருட்களை அரைக்க வேண்டிய ஜாரில் போய் ‘ஈரமான பொருட்களை’ அரைத்தால் ஜாரின் உட்பகுதியில் கீறல்கள் உண்டாக்கிவிடும்.

● மேலே கூறியதுபோல் இடைவெளியின்றி தொடர்ச்சியாக இயக்கினால், வெப்பத்தால் சேதம் ஏற்படும்.

● ஈரமான நிலையிலோ அல்லது ஜாரை இறுக்கமாக மூடப்பட்டோ சேமித்து வைத்தால், துர்நாற்றம் மற்றும் துருப்பிடித்தல் போன்றவற்றை வரவழைத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
வீட்லயே நாவல் பொடி ஈஸியா செய்யலாம்... இனிமே காசு குடுத்து வாங்காதீங்க!
மிக்ஸி பராமரிப்பு - Mixer Grinder Care

நீடித்த உழைப்பிற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மை

ஸ்பிரிங்கர்(Springer study) நடத்திய ஒரு ஆய்வில், யுனிவர்சல் மோட்டார்கள் மற்றும் BLDC மோட்டார்களை ஒப்பிட்டுப் பார்க்கையில்;

BLDC வடிவமைப்புகள் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன, குறைவான வெப்பத்தை உருவாக்கிறதாம். இதோடு BLDC மோட்டாரில் ‘பிரஷ் இல்லாத வடிவமைப்பு’ காரணமாக அவை நீண்ட காலம் நீடிக்கின்றன என்று கண்டறியப்பட்டது.

இதன் மூலம், ஒரு மோட்டார் வடிவமைப்பு ஒரு சாதனத்தின் ஆயுட்காலத்தை எப்படி உயர்த்துகிறது என்பதை ஸ்பிரிங்கர் அறிவியல் ஆதாரம் நிரூபிக்கிறது.

ஆக, ஒரு மிக்ஸி கிரைண்டரின் நீண்ட ஆயுள் என்பது வெறும் அதிர்ஷ்டம் சார்ந்ததல்ல; அது அறிவியல் மற்றும் முறையான பயன்பாடு சேர்ந்த கலவையாகும்.

இதையும் படியுங்கள்:
ஒருமுறை சார்ஜ் போட்டா 142 கி.மீ ஓடுமா? பெட்ரோல் பங்கிற்கு குட்பை சொல்லுங்க மக்களே!
மிக்ஸி பராமரிப்பு - Mixer Grinder Care

அதன் மோட்டார், பிளேடுகள் (blades) மற்றும் ஜார்களைச் சரியாக கையாண்டு, கவனக்குறைவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் அதன் சராசரி ஆயுட்காலமான 5 முதல் 8 ஆண்டுகளைக் கடந்து அதை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த முடியும். சொல்லப்போனால், முறையான பராமரிப்பு, பிரச்னையற்ற மின்சாரம் கிடைத்தால்; உயர்தர ரக மிக்ஸிகள் 12 முதல் 15 ஆண்டுகள் வரை கூட உழைக்கக்கூடும்.

இந்த வழிகாட்டியின் மூலம் உங்கள் சமையலறை மிக்ஸியை அடிக்கடி பழுதுபார்க்கும் தேவையின்றி, அதன் மோட்டார் மற்றும் பிளேடுகளின் ஆயுளை 15 ஆண்டுகள் வரை நீட்டித்து, மின்சாரக் கட்டணத்தையும் பராமரிப்புச் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com