பொம்பள புள்ள மாதிரி இரு! - இந்த அட்வைஸ் இனி செல்லுபடி ஆகாது! ஏன் தெரியுமா?

modern-women
modern-women
Published on

ல்லூரியிலும், அலுவலகத்திலும், பெண்களோடு மட்டுமே பெண்கள் பேசி வந்த காலம் மாறிவிட்டது. ஆண்களுக்கு பெண்கள் சரிநிகராக அலுவலகங்களில் மட்டுமல்ல வெளியில் சென்று செய்யும் வேலைகளிலும் பங்கேற்கிறார்கள். அதனால் பொதுவெளியில் ஆண்களோடு பெண்கள் சகஜமாக பேசும் சூழல் இப்போது இருக்கிறது.

ஆனால் யாராவது ஒரு ஆணுடன் பெண் பேசினாலே யார் அவன்? கல்யாணம் செய்யப்போகிறாயா? என்று சிலர் கேட்கிறார்கள்.

ஒரு ஆணுடன் பேசினாலே அது திருமணத்தோடு முடிச்சு போடும் இப்படிப்பட்ட பார்வைகளை, கேள்விகளை பெண்கள் விரும்புவதில்லை.

ரொம்ப அதிகமாக படிச்சிடாதே: நிறைய சம்பளம் வாங்கற வேலைக்கு போனா, அப்புறம் பொருத்தமான மாப்பிள்ளை தேடுவது ரொம்ப சிரமம்! என அட்வைஸ் செய்வது இப்போதைய பெண்களுக்கு பிடிப்பதில்லை. இப்படிப்பட்ட ஆலோசனை வாழ்க்கையில் முன்னேறும் தங்கள் வேகத்தை குறைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

ஆசைப்பட்டு எதையாவது சாப்பிட்டால் இப்படி கண்டதையும் சாப்பிட்ட உடம்பு குண்டாக வைக்காதே! ஒழுங்கா இருந்து உடம்பை குறைக்கிற வழிய பாரு! கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் குண்டாகத்தான் போறே! என பேசுவதும் இளம் பெண்களுக்கு பிடிப்பதில்லை. தங்களுக்கு எது நல்லது என்பதை, அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு மட்டும் இல்லை, திருமணத்துக்குப் பிறகும் உங்கள் ஆரோக்கியத்தில் அவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் பொது இடங்களில் பெண்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என கருத்துக்களை தங்கள் மீது திணிப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

தங்கள் உடல் நலன் குறித்து தங்களையோ, தங்கள் குடும்பத்தினரையும் விட வேறு யாருக்கும் தெரியாது, என்பதை இந்த கால பெண்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

திருமணத்துக்கும் பிறகும் பெண்கள் தங்கள் தந்தையின் பெயரோடு சேர்த்தோ தந்தை இன்ஷியலோடு அறியப்படுகிறார்கள். கல்யாணம் ஆகிவிட்டாலே பிறந்து வீட்டு அடையாளங்களை துறந்துவிட்டு, புகுந்த வீட்டு அடையாளங்களுக்கு மாறிவிட வேண்டும் என, இந்த காலத்திலும் பேசுவது இளம்பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
மடிக்கலாம்... நீட்டிக்கலாம்! சிறிய இடத்திலும் கச்சிதமாக பொருந்தும் நவீன டைனிங் டேபிள்கள்!
modern-women

பணிக்கு செல்லும் பல பெண்கள் குழந்தை பெற்ற பிறகு எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி எப்படித்தான் குழந்தையையும் கவனித்துக்கொண்டு வேலையையும் பார்க்கிறாேளோ? என்பதுதான். இப்படிப்பட்ட பல குத்தல் வார்த்தைகள் பெண்களுக்கு பிடிப்பதில்லை. எவ்வளவு பிசியான வேலைகளை செய்தாலும், வீட்டில் ஒரு அம்மாவாக குழந்தைகளுக்கு செய்யவேண்டிய கடமைகளை தவிர்ப்பதில்லை. சில வேலைகளை அம்மாவால் மட்டுமே செய்ய முடியும் என்பதையும் பெண்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு சந்தோஷமான தருணத்தில் வாய்விட்டு சிரிப்பதோ, தியேட்டரில் ஒரு படத்தை பார்த்து கைதட்டி ரசிப்பதோ, ஏதேனும் ஒரு விஷயம் பற்றி விவாதம் வந்தால் அதில் தன் மனதுக்குபட்ட கருத்தை சொல்லுவதோ, இன்னும் சில பெண்களுக்கு பிடிக்காத விஷயமாக இருக்கிறது.

பொம்பளை மாதிரி இரு! என வெளிப்படையாக சொல்வார்கள். சிலர் ஆனால் நீ ரொம்ப தைரியமான பொண்ணுதான் என பாராட்டுவதுபோல குத்தி காட்டுவார்கள். வேறு சிலர். இந்த இரண்டுமே இளம்பெண்களுக்கு பிடிப்பதில்லை.

நினைத்ததை சொல்வதில், பிடித்ததை செய்வதில் தவறு இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. அக்கம் பக்கத்தினரோ, உறவுகளோ விமர்சனம் செய்வது இக்கால பெண்களுக்கு பிடிக்காது.

இதையும் படியுங்கள்:
தங்கம்... தங்கம்... தங்கம்! எளியவர்களின் எட்டாக்கனியாகிறதா? ஒரு அலசல்!
modern-women

மற்றவர்கள் இது புரியாமல் மூக்கை நுழைக்கும்போது, அந்த கோபத்தை வெளிக்காட்டவும் அவர்கள் தவறுவதில்லை .

இந்த தலைமுறைப் பெண்களுக்கு பிடிக்காத இப்படிப்பட்ட விஷயங்கள்தான் இது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com