சமையலறை எண்ணெய் பிசுக்கு இனி கவலை வேண்டாம்! இதோ 9 எளிய தீர்வுகள்!

kitchen-cleaning-tips
kitchen-cleaning-tips
Published on

இல்லறம் இனிமையாக அமைய... கணவன் - மனைவிக்கான பொன்னான குறிப்புகள்தினந்தோறும் எண்ணெய்கள் பயன்படுத்தி சமைப்பதால் சமையலறையில் எண்ணெய் கறை ஏற்படுவது இயல்பானது. எண்ணெய் கறையை அகற்றவில்லை என்றால் சமையலறை சுகாதாரமற்று பொலிவிழந்து காட்சி தரும். அந்த வகையில் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக்கொண்டு சிரமம் இல்லாமல் எண்ணெய் கறையை அகற்றும் 9 எளிய வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம் .

பேக்கிங் சோடா பேஸ்ட்

சமையல் சோடா சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பசை போல கலக்கி எண்ணெய் கறையின் மீது தடவவும் . இதனை சிறிது நேரம் ஊறவிட்டு லேசாக தேய்த்தாலே எண்ணெய் கறை காணாமல் போய்விடும்.

பாத்திரம் கழுவும் சோப்பு கரைசல்

பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த கரைசலில் பஞ்சை தொட்டு எண்ணெய் கறை உள்ள இடங்களில் லேசாக தேய்த்தாலே பிடிவாதமான எண்ணெய் கறைகளும் மறைந்துவிடும்.

வினிகர் ஸ்ப்ரே

சிறிதளவு வெள்ளை வினிகரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொண்டு எண்ணெய் கறையின் மீது நேரடியாக ஸ்பிரே செய்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவேண்டும். வாசனை கடுமையாக இருந்தாலும் சிறிது நேரம் கழித்து துணியால் துடைக்க எண்ணெய் பிசுக்கு எளிதாக நீங்கி இருக்கும்.

எலுமிச்சை தேய்ப்பு முறை

ஒரு எலுமிச்சையை எடுத்துக்கொண்டு இரண்டாக வெட்டி எண்ணெய் பிசுக்கு இருக்கும் இடத்தில் நேரடியாக அழுத்தி தேய்தது, சிறிது நேரம் கழித்து ஈரமான துணியால் துடைக்க புத்துணர்ச்சியான வாசனையுடன் எண்ணெய் கறை முழுவதும் நீங்கி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இல்லறம் இனிமையாக அமைய... கணவன் - மனைவிக்கான பொன்னான குறிப்புகள்!
kitchen-cleaning-tips

சோளமாவு சுத்தம்

சோள மாவு சிறிதளவு எடுத்துக்கொண்டு புதிதாக ஏற்பட்ட எண்ணெய் கறையின் மீது தூவி விடவேண்டும். சிறிது நேரத்தில் மாவு எண்ணெயை முழுவதும் உறிஞ்சிக் கொள்ளும். அப்பொழுது அந்த இடத்தை துணியால் துடைக்க பளிச்சென்று இருப்பதை காணலாம்.

உப்பு ஸ்க்ரப்

ஒரு சிட்டிகை உப்பை எடுத்துக்கொண்டு எண்ணெய் கறையின் மீது தூவி ஈரமான துணியை பயன்படுத்தி மெதுவாக தேய்க்க, உப்பு ஸ்க்ரப் போல செயல்பட்டு எண்ணெய் பிசுக்கை அகற்றுகிறது. உலோகப் பகுதி மற்றும் டைல்ஸ்களில் இந்த உப்பு ஸ்க்ரப் நன்றாக வேலை செய்கிறது.

முதலில் வெந்நீர்

எண்ணெய் கறை உள்ள இடத்தில் முதலில் வெந்நீரை ஊற்றி சிறிது நேரம் ஊறவிட்டு தேய்க்க எண்ணெய்கறை நீங்கி இருக்கும். பிடிவாதமான எண்ணெய் கறைகளுக்கு முதலில் வெந்நீர் ஊற்றி அதன் பிறகு மற்ற பொருட்களை பயன்படுத்தினால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஷூக்களை வாஷிங் மெஷினில் துவைக்கலாமா? நிபுணர்கள் சொல்லும் 10 டிப்ஸ்!
kitchen-cleaning-tips

பற்பசை கறை சரிசெய்தல்

விடாப்பிடியான சிறிய எண்ணெய் கறைகள் உள்ள இடத்தில் ஒரு துணி அல்லது பழைய பிரஷ் கொண்டு சிறிதளவு பற்பசையை தேய்த்து இரண்டு நிமிடங்கள் அப்படியே வைக்கவேண்டும். அதன் பிறகு அந்த இடத்தை துடைத்து எடுக்க கடினமான எண்ணெய் கறைகளும் அகன்று விடும்.

மாவு உறிஞ்சும் முறை

பழைய மற்றும் தடிமனான எண்ணெய் கறைகள் உள்ள இடங்களில் கறையுள்ள இடம் முழுவதற்கும் மாவை தூவி அப்படியே வைக்க, மெதுவாக மாவு எண்ணெயை உறிஞ்சிவிடும். சிறிது நேரம் கழித்து அவ்விடத்தை துடைக்க எண்ணெய் கறை நீங்கி பளிச்சென காட்சி தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com