ஒரே நாளில் வீடு முழுவதும் பளபளக்கணுமா? இதோ உங்களுக்கான சீக்ரெட் பிளான்!

Home cleaning tips tamil
Home cleaning tips tamil
Updated on

“ஒரு காலை நேரத்தில் இந்த விடுமுறை நாள்ல வீட்டை முழுக்க சுத்தம் பண்ணிடலாம்!” அப்படின்னு நாம முடிவு பண்ணுறது ரொம்ப சாதாரணம். அந்த காலை நேர உற்சாகம் வேற மாதிரி இருக்கும். ஆனா அந்த உற்சாகம் மாலை வரை நீடிக்குதா? அதுதான் சவால். ஆனாலும் கொஞ்சம் திட்டமிட்டு வேலை செய்ய தொடங்கினா, அது முடியும் வேலைதான்.

நாம் ஒரு நாளைச் சரியாக திட்டமிட்டு பயன்படுத்தினால் வீடு முழுவதும் பளபளப்பாக மாறும்; அதற்குத் தேவையானது சரியான திட்டம், மற்றும், தொடர்ச்சியான வேலை மீண்டும் ஒழுங்கு படுத்துவதுதான்.

திட்டமிடல்

ஆரம்பிக்கும் முன் தேவையற்ற பொருட்களை அகற்றி, அவசியமானவற்றை ஒழுங்குபடுத்துங்கள். தேவையான அனைத்து சுத்தம் செய்யும் பொருட்களையும் முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். எப்போதும் மேலிருந்து கீழே சுத்தம் செய்யத் தொடங்குங்கள். (மேல்மாடி → கீழ்மாடி)

காலை – குளியலறை சுத்தம்

காலை 9 மணிக்கே குளியலறை வேலை ஆரம்பிங்க. டவல், மேட் எல்லாம் வாஷிங் மெஷினில் போடுங்க. டாய்லெட், சிங்க், கண்ணாடி எல்லாம் ஒன்னொன்னா தேய்க்கும்போது கொஞ்சம் சோர்வா இருக்கும். நடுவுல ஒரு கப் தண்ணீர் குடிச்சுக்கோங்க. ஏன்னா வேலை செய்யும்போது உடம்புல நீர் குறையாமல் இருந்தாதான் சோர்வு குறையும், தலைசுற்றலும் வராது.

படுக்கையறை சுத்தம்

அதுக்கப்புறம் படுக்கையறை. விசிறி துடைக்க நாற்காலி ஏற வேண்டி வரும். படுக்கை விரிப்புகள் எடுத்து, மெட்ரஸ்ஸை தூசி தட்டி, ஜன்னல் எல்லாம் துடைக்கணும். வேலை சின்ன மாதிரி தோணினாலும் நேரம் போயிடும். நடுவுல தண்ணீர் அல்லது லேசான ஜூஸ் குடிச்சுக்கோங்க எனர்ஜி திரும்ப வரும், உடம்பு லேசாக இருக்கும்.

சமையலறை (Kitchen)

மதியம் சமையலறைதான் ரொம்ப கஷ்டமான பகுதி. அலமாரி காலி பண்ணி துடைக்கணும், அடுப்பு தேய்க்கணும், ஃப்ரிட்ஜ் உள்ளே வரை சுத்தம் பண்ணணும். “இப்போ சுத்தம் பண்ணுறதுக்கே திரும்ப அழுக்கு ஆகுதே”ன்னு தோணும். இங்க வேலை அதிகமா இருக்கும், அதனால இடையில தண்ணீர் அல்லது ஜூஸ் குடிச்சா உடம்பு டீஹைட்ரேட் ஆகாது, மனசும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் ஹோம் மேக்கர்ஸ்: கோடையில் செய்யவேண்டிய வீட்டுப் பராமரிப்புப் பணிகள்!
Home cleaning tips tamil

உணவறை (Dining Room)

மேஜை, ஜன்னல், மேலிருக்கும் தூசி எல்லாம் துடைக்கணும். இது லேசா இருக்கும் மாதிரி தோணினாலும் கவனமா செய்யணும். சின்ன பிரேக் எடுத்து தண்ணீர் குடிக்கலாம். மூளைக்கும் உடம்புக்கும் ரீஃப்ரெஷ் ஆகும்.

ஹால் (Living Room)

ஹால்ல சோபா குஷன் தூக்கி வாக்க்யூம் பண்ணும்போதுதான் எவ்வளவு தூசி இருக்குனு தெரியும். டிவி, ரிமோட், ஜன்னல் எல்லாம் தனி கவனம். நடுவுல தண்ணீர் குடிச்சா உடம்பு சோர்வு குறையும், வேலை இன்னும் எளிதா போகும்.

லாண்ட்ரி ரூம் (Laundry Area)

மாலை நேரத்துல லாண்ட்ரி ரூம் வேலை வரும். உடம்பு ஏற்கனவே சோர்ந்திருக்கும். ஆனாலும் முடிக்கணும். இப்போ தண்ணீர் அல்லது ஜூஸ் குடிக்கிறதுனால உடம்புக்கு உடனடி எனர்ஜி கிடைக்கும், மீதமிருக்கிற வேலையை தள்ளி போகாம செய்யமுடியும்.

மாலை 6 மணிக்கு வீடு முழுக்க ஒரு சுற்று பார்த்தா தரை மின்னும், கண்ணாடி பளபளக்கும், எல்லாம் ஒழுங்கா இருக்கும். சொன்னா நம்பமாட்டிங்க! அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கும் திருப்தி வேற லெவல். உங்க உடல் சோர்வு காணாம போய்விடும்.

வீடு சுத்தம் செய்வது சுலபமில்லை. உடல் சோர்வு, நேரக்குறைவு, மனசு சலிப்பு எல்லாம் வரும். ஆனா ஒரு நாள் திட்டமிட்டு, ஒழுங்கா, தொடர்ந்து செய்தால் அது சாத்தியமே. இறுதியில் கிடைப்பது சுத்தமான வீடு மட்டும் இல்ல… நமக்கே ஒரு மன நிறைவு!

logo
Kalki Online
kalkionline.com