

பேரிச்சம்பழத்தின் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் உடலுக்கு தரும் நன்மைகள் விளக்கப்படுகின்றன. உடனடி சக்தி, செரிமானம், எலும்பு பலம் ஆகியவற்றுக்கு பேரிச்சம் உதவினாலும், அதிக கலோரி மற்றும் இயற்கை சர்க்கரை காரணமாக நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது. வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கவனிக்க வேண்டும்.
உடனடி சக்தி அளிக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கு புதையல்போல இருக்கும் பேரிச்சம்பழங்களில் அசல் போலி என இரு வகைகளுமே சந்தைகளில் தாராளமாக கிடைக்கின்றன. அசல் பேரிச்சம்பழம் உடலுக்கு நன்மையை தரும் நிலையில் போலி பேரிச்சம்பழம் ஆரோக்கியத்திற்கு கடுமையான கேடுகளை விளைவிக்கிறது. அந்த வகையில் இக்கட்டுரையில் போலி பேரிச்சம் பழங்களை கண்டறியும் முறை குறித்தும் பேரிச்சம்பழம் சாப்பிட கூடாதவர்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் காண்போம்.
அசல் பேரீச்சம் பழம் போலி பேரிச்சம்பழம் கண்டறியும் முறைகள்:
பளபளப்பாக தெரியும் அனைத்தும் போலியானவை என்பதை உறுதி செய்யும் வகையில் பளபளப்பாக இருக்கும் பேரிச்சம்பழங்கள் போலியானவையாக உள்ளன.
வெளிர் பழுப்பு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் இருந்தால் இயற்கையான நிறத்துடன் பளபளப்பு இல்லாமல் இருந்தால் அவை உண்மையான பேரிச்சம் பழங்கள். மிகவும் பளபளப்பாகவும், பிசுபிசுப்பாகவும், வழவழப்பாகவும் காணப்பட்டால் அவை போலி பேரிச்சம் பழங்கள் ஆகும்.
போலி பேரிச்சம்பழங்கள் செயற்கை நிறமிகளாலும், கிளிசரின் அல்லது பிற செயற்கை வண்ணங்களால் பதப்படுத்தப்படுகின்றன உண்மையான பேரிச்சம் பழத்தில் இயற்கையான ஒருவித இனிப்பு சுவையுடன் மென்மையாக வாயில் வைத்தால் உருகும் தன்மை கொண்டது.
கடினமான பளபளப்பான தோற்றத்துடன் மெல்ல கடினமாக இருந்தால் அவை போலி பேரிச்சம் பழங்கள் ஆகும். இதனை சாப்பிட்டால் சுவையில் மாற்றம் தெரிவதோடு செயற்கையாக இனிப்பு கலந்திருக்கும். மேலும் போலி பேரிச்சம் பழங்களில் சில ரசாயன வாசனை வீசக்கூடும். இதனால் பேரிச்சம் பழத்தை சாப்பிடவே தோன்றாது அதை வைத்தே அது போலியானது என எளிதாக கண்டறிந்துவிடலாம்.
அசல் பேரீச்சம் பழமா போலியான பேரிச்சம் பழமா என கண்டறிய ஒரு டம்ளர் தண்ணீரில் சில பேரிச்சம் பழங்களை எடுத்து அதில் போட்டால் போலி பேரிச்சம் பழங்களாக இருந்தால் அதில் தெளிக்கப்பட்டுள்ள செயற்கை நிறம் கரைந்து தண்ணீரில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். அல்லது வெப்பநிலை அதிகரிக்கும்போது ரசாயனம் ஓரமாக நகர்ந்துவிடும். உண்மையான பேரிச்சம் பழங்களாக இருந்தால் தண்ணீரின் நிறம் மாறவே மாறாது.
பேரிச்சம் பழத்தின் பயன்கள்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது . இதனால் உடனடி சக்தி வழங்குவதில் பேரிச்சம் பழத்திற்கு ஈடு இணை இல்லை.
உடலுக்கு ஆற்றலை தருவதோடு செரிமானத்தையும் பேரிச்சம்பழம் மேம்படுத்துகிறது. பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இயற்கையாகவே புத்துணர்ச்சி ஏற்படுவதோடு எலும்பும் பலம் பெறுகிறது.
பேரிச்சம்பழம் சாப்பிடக் கூடாதவர்கள்
பேரிச்சம் பழம் அதிக கலோரிகளைக் கொண்டிருப்பதாலும், இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளதாலும் நீரிழிவு நோயாளிகளும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்
பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 % நார்ச்சத்து 11.5 % புரதம் 5.6 % கொழுப்பு 0.5% உள்ளது. இது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின் A, பி 12, சி நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் பிரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகியவையும் இருக்கின்றன.
உடலுக்கு ஆரோக்கியமான பேரிச்சம் பழங்களை வாங்கும்போது மேற்கூறிய குறிப்புகளை கவனத்தில் கொண்டு உண்மையான பேரிச்சம் பழங்களாக பார்த்து வாங்கவேண்டும் மேலும் அதன் தயாரிப்பு தேதி காலாவதி ஆகும் தேதி போன்றவற்றையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
நுகர்வோர் சந்தையில் போலிப் பொருட்களை அடையாளம் கண்டு, கலப்படமற்ற அசல் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தைப் பெற்று நீண்ட நாள் நல்வாழ்வை உறுதி செய்ய முடியும்.