உங்க பெட்ஸ் (Pets) ஏசி ரூம்ல இருந்தும் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்!

வெறும் சாப்பாடும் இருப்பிடமும் மட்டும் போதாது; செல்லப் பிராணிகளின் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்!
பெட்ஸ் பராமரிப்பு - Pet Care Tips
பெட்ஸ் பராமரிப்பு - Pet Care Tips
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

உண்மையச் சொல்லணும்னா, எனக்கு இந்தப் பெட்ஸ் வளர்க்குற டாபிக்ல பெருசா எந்த அனுபவமும் கிடையாதுங்க. இப்போதைக்கு நான் எந்த பெட்ஸும் வளர்க்கவும் இல்லை. ஆனா, ரீசண்டா இதப்பத்தி சில ரிசர்ச் விஷயங்களைப் படிச்சப்போ எனக்கு செம ஷாக்கா இருந்துச்சு! நிறைய பேரு வீட்ல நாய், பூனை, மீனுன்னு ஆசையா வளர்க்குறாங்க. நல்ல சாப்பாடு, தண்ணி கொடுத்து, ஏசி ரூம்ல வச்சிருந்தாலே பெட்ஸ் ஹேப்பியா இருக்கும்னு நினைக்கிறாங்க.

ஆனா, அதுதான் தப்பு! வெளிய பார்க்க நல்லா இருக்க மாறி இருந்தாலும், உள்ளுக்குள்ள அதுங்களுக்கு பயங்கர ஸ்ட்ரெஸ் (stress) இருக்கும்னு சயின்ஸ் சொல்லுது. அமெரிக்கன் வெட்னரி மெடிக்கல் அசோசியேஷன் (AVMA) என்ன சொல்றாங்கன்னா, பெட்ஸ் ஆரோக்கியம்ங்கிறது வெறும் உடம்பு சம்பந்தப்பட்டது மட்டும் இல்ல, அதோட மனசும் நல்லா இருக்கணுமாம்.

பெட்ஸ் பராமரிப்பு:

நாய்களுக்கு வர்ற 'சைலண்ட்' போரிங் உணர்வு:

நாயங்கிறது சாதாரணமா ஓடி ஆடி, மோப்பம் பிடிச்சு, புது இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டிய அனிமல். ஆனா, அப்பார்ட்மெண்ட் (Apartment) ஸ்டைல், இல்லனா நெரிசலான தெருக்களில் இருக்கும் வீட்டுல வச்சு வளர்க்கும்போது அதுங்களுக்கு செம போர் அடிச்சுடும்.

இந்த சிம்டம்ஸ் வெளிய டக்குனு தெரியாது. ஆனா, வீட்ல இருக்குற பொருட்களைக் கடிக்கிறது, சும்மா சும்மா குலைக்கிறது, ஒரே இடத்துல சுத்துறது, சோகமா படுக்குறதுன்னு இதெல்லாம் அதோட ஸ்ட்ரெஸ்ஸோட(Stress) ரியாக்ஷன்தான்.

தினமும் வெளிய கூட்டிட்டு போய், நல்லா மோப்பம் பிடிக்கவிட்டாலே அதுங்களோட மூளை செம ஆக்டிவ் ஆகிடும்னு ரிசர்ச் சொல்லுது. அப்புறம் வழக்கமான எக்சர்சைஸ் (Exercise) பண்றது அதுங்களோட ‘பிஹேவியர் பிரச்னைகளை’(Behaviour Problems) குறைக்குமாம்.

பூனைகளோட வீட்டு லைஃப்:

பூனைகளை வீட்டுக்குள்ளேயே வச்சு வளர்க்குறது சேஃப்தான். ஆனா, ஒரே இடத்துல அடைஞ்சு இருக்குறது அதுங்களுக்கு சோம்பேறித்தனமும், குண்டாகுற பிராப்ளமும் வரும்னு ‘RSPCA’ வெப்சைட்ல சொல்லியிருக்காங்க.

பெட்ஸ் பராமரிப்பு - Pet Care Tips
பெட்ஸ் பராமரிப்பு - Pet Care Tips

அதுங்க நகத்தால கீறுறதுக்கு (Scratching) ஸ்க்ராட்ச் போஸ்ட். அப்புறம் உயரமான இடத்துல ஏறி பார்க்குற மாதிரி ‘செட்டப் பண்ணி’ தர்றது ரொம்ப முக்கியம். ஏன்னா பூனைகளுக்கு இயற்கையாவே உயரமான இடத்துல இருந்து வேடிக்கை பார்க்குறது ரொம்பப் பிடிக்கும்.

மீன்கள், கோல்ட் பிஷ் பத்தின 'வாவ்' ஃபேக்ட்:

நம்மள சில பேரு மீனை வெறும் அழகுப் பொருளா பார்க்குறோம். அதுங்களுக்கு எந்த ஃபீலிங்ஸும் இருக்காதுன்னு தப்பாகூட நினைச்சுட்டு இருக்கலாம். ஒரு மீனோட ஆயுசு, அது நீந்துற தண்ணியோட குவாலிட்டி, ஆக்சிஜன் அளவு, டேங்க் சைஸைப் பொறுத்துதான் இருக்குனு RSPCA கைடுலைன் சொல்லுது.

இப்போ ஒரு செம ஷாக்கிங் உண்மை என்னன்னா, முறையா மெயின்டைன் பண்ணா நம்ம வீட்டு கோல்ட் பிஷ் (Goldfish) 25 வருஷம் வரைக்கும் உயிரோட இருக்குமாம், 30 சென்டிமீட்டர் வரைக்கும் வளருமாம்!. ஆனா, சின்ன பவுல்ல வளர்த்தா தேவையான ஆக்சிஜன் கொடுக்காம நாமளே அதோட ‘லைஃப் டைம்மை’ கொறச்சிடுவோமா!

இதையும் படியுங்கள்:
புது வீடு கட்ட போறீங்களா? முதல்ல இந்த சோதனையை செய்யலைனா பட்ஜெட் எகிறிடும்!
பெட்ஸ் பராமரிப்பு - Pet Care Tips

சோ, புதுசா மீன் வளர்க்குறவங்களுக்கு 40 - 50 லிட்டர் வரை தாங்கும் அகலமான டேங்க்தான் ரொம்ப பெஸ்ட்டாம்!. சின்ன தொட்டியை விட பெரிய தொட்டியிலதான் தண்ணி குவாலிட்டி, டெம்பரேச்சர் டக்குனு மாறாம மெயின்டைன் பண்ண ரொம்ப ஈஸியா இருக்குமாம்.

20 லிட்டருக்கும் கம்மியா தண்ணி இருந்தா மீனுங்களுக்கு செட் ஆகாது. ஆனா, 75 - 100 லிட்டர்னா ரொம்ப சூப்பரா இருக்கும். டேங்க் உயரமா இருக்குறதைவிட அகலமா இருந்தாதான் நல்லா ஆக்சிஜன் கிடைக்கும்னு RSPCA கைடுலைன்(Guides) சொல்லுது.

மத்த பெட்ஸ் மாதிரியே மீனுங்களுக்கும் ஒளிஞ்சு விளையாட ‘டம்மி பாறைங்கன்னு’ சில நேச்சுரல் ‘செட்டிங்ஸ்’ ரொம்ப முக்கியம். சோ, மீனுங்க வெறும் தண்ணியில மட்டும் நீந்தாம, அதுங்க சுதந்திரமா இருக்குறமாதிரி கொஞ்சம் இடவசதி செஞ்சு தர்றது பெஸ்ட்.

பறவைகள், முயல்களோட கஷ்டம்:

காட்டுல கிலோமீட்டர் கணக்கா பறக்கவேண்டிய கிளிகளை சின்ன கூண்டுல அடைக்கும்போது, அதுங்க கடுப்பாகி தன் சொந்த இறகுகளையே பிடுங்கிக்கும். இதெல்லாம் கெட்ட பழக்கம் இல்லை, அதுங்களோட மன உளைச்சலோட சிம்டம்ஸ். முயல்களும் கூண்டுல அடைக்கப்பட வேண்டியது இல்ல, அதுங்களுக்கும் ஓடி ஆட இடம் வேணும்.

சோ, பெட்ஸ் உடலளவில் நல்லா இருந்தாலும், அதோட நேச்சுரல் கேரக்டரைக் காட்ட முடியாம மனசளவில கஷ்டப்படலாம். சோ, அதுங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி விளையாடுங்க, டைம் இல்லனாலும் அந்த உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து டைம் ஒதுக்குங்க…

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள்ள எலித் தொல்லையா? பொறி வைக்காமலே ஓட ஓட விரட்ட 5 எளிய இயற்கை வழிகள்!
பெட்ஸ் பராமரிப்பு - Pet Care Tips
logo
Kalki Online
kalkionline.com