மாணவ மாணவிகளே! 'Placement' என்கிற‌ பயங்கரமான புயலை கையாள சில டிப்ஸ்...

placement
placement
Published on

ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு பிரச்சினைகளை இந்த மாணவ மாணவிகள் சந்திக்கிறார்கள். முதலில் L.K.G சேர ஒரு டெஸ்ட், அதில் எப்படியோ போராடி primary level ல் சேர்ந்து பிறகு middle school, secondary school மற்றும் higher secondary வரை கடுமையான போராட்டங்களை சந்திக்கிறார்கள். கூடவே பெற்றோர்களும் இந்த டியுஷன் அந்த டியுஷன் என்று அலைந்து திரிந்து தன் பங்களிப்பை தருகிறார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பை எப்படியோ கஷ்டபட்டு முடித்து விட்டு இந்த மாணவ மாணவிகள் பலவிதமான entrance exams எழுதி பிறகு ஒருவழியாக கல்லூரி படிப்பை தொடங்குகிறார்கள். இவர்கள் கல்லூரி படிப்பு என்றால் அத்தனை சிரமம் இருக்காது ஜாலியாக இருக்கலாம் என்றெல்லாம் மனக் கோட்டை கட்டி கொண்டு உள்ளே நுழைகிறார்கள். நுழைந்த பிறகு தான் அவர்களுக்கு தெரிகிறது எத்தனை கஷ்டங்களை சந்திக்க நேரிடுகிறது என்று. பள்ளிக்கூட வாழ்க்கையே பரவாயில்லை என்பது போல் ஆகி விடுகிறது.

Assignment, project, practical work etc etc என பலவிதமான வேலைகளை ஒருங்கிணைத்து செய்ய வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி backlog இருந்தால் அதையும் மறுபடியும் எழுதி கடைசியாக final year நுழைந்தவுடன் எல்லாவற்றிற்கும் மேலாக placement என்கிற புயல் ஆரம்பித்து விடுகிறது. அப்பப்பா.... அது மாணவ மாணவிகளை உருட்டி புரட்டி எடுத்து விடுகிறது. கடுமையான அந்த புயலை எதிர் கொண்டு கரை சேர்வது என்பது மாணவ மாணவிகளுக்கு ஒரு பெரிய யுத்தம் போல் இருக்கிறது. டென்ஷன் ஆகாதீர்கள் மாணவர்களே.... இதோ உங்களுக்காக சில டிப்ஸ்......

· Placement cell என்ற ஒரு குழு எல்லா கல்லூரியிலும் இருக்கும். அவர்கள் placement தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னாலேயே சில பயிற்சிகள் மற்றும் assignment ஐ கொடுப்பார்கள். எக்காரணத்தை கொண்டும் அவற்றை எல்லாம் மிஸ் பண்ணி விடாதீர்கள்.

· கல்லூரியில் வேண்டாத மற்றும் செய்யக் கூடாத காரியங்களை செய்யாதீர்கள். Black mark கிடைத்து விட்டால் placement ல் உட்கார அனுமதிக்க மாட்டார்கள்.

· Placement cellன் விதிமுறைகளை மீறாதீர்கள்.

· Placement தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே மனதளவில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

· பயப்படாமல் மனதை relax ஆக வைத்திருக்கவும்.

· அடுத்தவர்களோடு உங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

· முதலிலேயே இணைய தளத்தில் model interview questions மற்றும் அதற்கான பதில் இவற்றை எல்லாம் பார்த்து பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்.

· தெரிந்த அல்லது உறவுக்கார senior மாணவரிடம் placement பற்றிய அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: ஏமாறாமல் தப்பிக்க 5 வழிமுறைகள்!
placement

· Placement ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே எல்லா ப்ராஜெக்டையும் மற்றும் back log இருந்தால் அதையும் முடித்து விடவும். Backlog இருந்தால் உட்கார அனுமதி கிடையாது.

· ஒவ்வொரு கல்லூரியிலும் நீங்கள் படிக்கும் துறைக்கு ஏற்றவாறு procedures வேறுபடும்.

· Writing/coding test first round n second round, group discussion என பல்வேறு கட்டங்களாக இருக்கும். முன்னேறபாடாகவே எல்லாவற்றையும் நன்றாக கேட்டு தெரிந்து வைத்து கொள்ளவும்.

· இவைகளை எல்லாம் கடந்து இன்டர்வியுவிற்கு கொஞ்சம் பேர்களை தான் select செய்வார்கள். பிறகு அதிலும் வடிகட்டி இறுதியாக சில பேர select செய்து offer letter கொடுப்பார்கள்.

· ஒவ்வொரு கம்பெனியும் அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாணவர்களை எடுத்து கொள்வார்கள்.

· Test க்கு தகுந்தவாறு தேவையான மற்றும் முக்கியமான நூணுக்கங்களை கற்று பயிற்சி பெறுவது மிக மிக அவசியம்.

· இன்டர்வியுவில் முகத்தில் டென்ஷன் இருப்பது போல் காட்டி கொள்ளாமல் தைரியமாக பதில் சொல்லுங்கள். Presence of mind மிகவும் முக்கியமானது. ஆகவே கேட்ட கேள்விகளை தியானத்தோடு கேட்டு டக்கென்று ஒரு பதிலை கூறுங்கள்.

· இளைஞர்களே நீங்கள் placement சமயத்தில் தலை முடியை நன்றாக trim செய்து கொள்ளுங்கள். முகத்தில் தாடி இருந்தால் ஷேவ் செய்து கொண்டு ஒரு அழகான சிறிய மீசையை மட்டும் வைத்து கொள்ளுங்கள். Personality is very important.

· எத்தனை மணிக்கு வரச் சொல்கிறார்களோ அதற்கு முன்னாலேயே போய் சேர்ந்து விடுங்கள். தாமதமாக சென்றால் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியே அனுமதித்தாலும் உங்களின் மேல் சிறந்த அபிப்ராயம் இருக்காது.

· நீங்கள் எதாவது ஒரு கம்பெனியில் செலக்ட் ஆகி விட்டால் தயவு செய்து அந்த offerஐ ஏற்று கொள்ளவும். சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை.

· சில கல்லூரியில் இரண்டு அல்லது மூன்று கம்பெனிகளில் உட்கார அனுமதி உண்டு. ஆகவே உங்களுக்கு முதலில் கிடைத்த offer ஐ மறுக்காமல் பெற்று கொண்டு மறுபடியும் வேற கம்பெனியில் முயற்சிக்கவும். இதை விட நல்லதாக கிடைத்தால் அப்போது அதை தாராளமாக cancel செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
AI-ஆல் வேலை இழந்த Zomato ஊழியர்கள்.. இணையவாசிகள் அதிர்ச்சி!
placement

· ஒருவேளை உங்கள் கல்லுரியில் ஒரு offer கிடைத்த பிறகு மேலும் உட்கார முடியாது என்ற சட்டம் இருந்தால், நீங்கள் முதலில் கிடைத்த வேலை சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, ஏற்று கொள்ளுங்கள். இதை refuse செய்து விட்டு வேறு கம்பெனியில் அதிக சம்பளத்திற்கு முயற்சி செய்யலாம் என்று நினைத்து பிறகு வேறு எங்கேயும் கிடைக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகி விடும்.

· ஒரு வருடம் வேலையை கற்று கொண்டு பிறகு வேறு கம்பெனியில் இன்னும் அதிக சம்பளத்திற்கு முயற்சி செய்யலாம்.

· இன்னும் ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் நான்கைந்து கம்பெனியில் முதல் ரவுண்டுலேயோ அல்லது இரண்டாவது ரவுண்டிலோ அல்லது கடைசி கட்டத்திலோ reject ஆகி விட்டால் பயப்படாதீர்கள், மனத்தை தளர விடாதீர்கள்.

· மேலும் மேலும் கம்பெனிகள் வந்து கொண்டே இருக்கும். டென்ஷன் ஆகாமல் பொறுமையாக முயற்சி செய்து கொண்டே போனால் நிச்சயமாக placement முடிவதற்குள் ஏதாவது ஒரு இடத்தில் கிடைத்து விடும்.

· நம்பிக்கையோடு எல்லாவற்றையும் எதிர் கொள்ளுங்கள்.

· எல்லாவற்றிற்கும் மேலாக எதாவது சந்தேகம் இருந்தால் placement cell ல் இருக்கும் ஸாரிடம் பணிவோடு கேளுங்கள். அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர்கள்.

மாணவ மாணவிகளே, இவற்றை எல்லாம் நினைவில் வைத்து, placementல் கலந்து கொண்டு நல்ல வேலை கிடைத்து வெற்றி பெற‌ வாழ்த்துக்கள்!

இதையும் படியுங்கள்:
பணியில் சிறக்க வேலை சார்ந்த அறிவு 35 % இருந்தாலே போதும் என்றால், மீதம் 65%?
placement

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com