மின்தடை: இந்த உணவுகளை உடனே தூக்கி எறியாவிட்டால் ஆபத்து!

நீண்ட நேர மின்தடைக்குப் பிறகு ஃபிரிட்ஜில் எதை சாப்பிடலாம், எதைத் தவிர்க்க வேண்டும்?
மின்தடை
மின்தடைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

மின்தடை என்பது நாம் அடிக்கடி சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். குறிப்பாக மழைக்காலத்தில் அதிக காற்று வீசும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. புயல் அல்லது மின் பராமரிப்புப் பணிகளின் பொழுது நிறைய நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அம்மாதிரியான சமயங்களில் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகள் கெட்டுப்போய் விடுமோ என்ற பயம் பலருக்கும் ஏற்படும்.

பிரிட்ஜில் வைத்திருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஆபத்து ஏற்படாது. பால், முட்டை, பன்னீர், தயிர், அசைவ உணவுகள் மற்றும் வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் விரைவில் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மின்சாரம் தடைப்படும் பொழுது எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.

திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால், ஃப்ரீசரின் கதவைத் திறக்காமல் வைத்திருக்கும் பட்சத்தில் முழுமையாக நிரம்பிய ஃப்ரீசரில் உணவு சுமார் 48 மணி நேரமும், பாதி அளவு நிரம்பிய ஃப்ரீசரில் 24 மணி நேரமும் உணவு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும். சாதாரண ஃபிரிட்ஜ் பகுதிக் கதவைத் திறக்காமல் வைத்திருந்தால் 4 மணி நேரம் வரை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் ஃப்ரீசரில் இருக்கும் உணவின் அளவைப் பொறுத்து இந்த நேரம் மாறுபடலாம்.

இதற்கு முக்கியக் காரணம் முழுமையாக நிரம்பிய ஃப்ரீசரில் உறைந்த உணவுப் பொருட்கள் ஒன்றையொன்று குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். பாதி நிரம்பிய ஃப்ரீசரில் காலி இடங்களில் காற்று இருப்பதால் குளிர்ச்சி சற்று வேகமாகக் குறையும். அதுவே சாதாரண பிரிட்ஜ் பகுதியில் அதன் வெப்பநிலை நான்கு டிகிரிக்கும் குறைவாக இருப்பதால் விரைவில் சூடாகிவிடும்.

ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் பொழுதும் உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறி, வெப்பம் உள்ளே செல்லும். இதனால் உணவு விரைவில் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே மின்சாரம் இல்லாத நேரத்தில் ஃப்ரீசரின் கதவைத் திறக்காமல் மூடி வைத்திருப்பதே உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
இனி சமைக்கும் போது முகத்தில் எண்ணெய் தெறிக்காது... ரகசியத்தை படிங்க!
மின்தடை

ஃப்ரீசரில் இடம் காலியாக இருந்தால், உணவு பொட்டலங்களை ஒன்றாகச் சேர்த்து நெருக்கமாக அடுக்கி வைக்கலாம். இவை ஒரு பெரிய ஐஸ்கட்டியைப் போல செயல்பட்டு நீண்ட நேரம் குளிர்ச்சியைத் தக்க வைக்கும். நீண்ட நேரம் மின்சாரம் இருக்காது என்று தெரிந்தால் தண்ணீர் பாட்டில்களை உறைய வைத்து உள்ளே வைக்கலாம் அல்லது கூலர் பெட்டியில் ஐஸ் கட்டிகளைப் போட்டு உணவுகளை மாற்றலாம்.

மின்தடை
மின்தடைGemini image

மின்சாரம் வந்த பிறகு உணவில் இன்னும் ஐஸ் படிகங்கள் இருந்தாலோ அல்லது அதன் வெப்பநிலை 4°C (40°F) அல்லது அதற்குக் கீழ் இருந்தாலோ அவற்றை மீண்டும் ஃப்ரீசரில் வைக்கலாம் அல்லது சமைத்து உண்ணலாம். 

நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த இறைச்சி, மீன், கோழி, பால் பொருட்கள் மற்றும் முட்டை ஆகியவற்றை உடனடியாகத் தூக்கி எறிவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
ஸ்வெட்டர் மற்றும் கம்பளித் துணிகள் சுருங்கிப் போகாமல் துவைப்பது எப்படி தெரியுமா?
மின்தடை

உருகிவிட்ட ஐஸ்கிரீமை மீண்டும் உறைய வைக்க வேண்டாம். ஐஸ்கிரீம் மற்றும் உறைந்த தயிர் (frozen yogurt) போன்றவை உருகி விட்டால் அவற்றை மீண்டும் ஃப்ரீசரில் வைக்காமல் அப்புறப்படுத்துவது நல்லது. முக்கியமாக உணவு கெட்டுப்போயுள்ளதா என்பதை அறிவதற்கு அதை ஒருபோதும் அதை சுவைத்துப் பார்க்கக் கூடாது. துர்நாற்றம் வீசினாலோ அல்லது நிறம் மாறி இருந்தாலோ உடனே அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

மின்தடையின் போது செய்ய வேண்டியவை: 

1. மின்சாரம் இல்லாத சமயங்களில் ஃப்ரீசர் கதவைத் திறக்காமல் இருக்க வேண்டியது அவசியம். 

2. ஃப்ரீசரில் இருக்கும் உணவு பொட்டலங்களை ஒன்றாக சேர்த்து வைப்பது, அவை ஒன்றுக்கொன்று குளிர்ச்சியைத் தக்கவைக்க உதவும்.

3. நீண்ட நேரம் மின்தடை நீடிக்கும் என்று தெரிந்தால் உறைந்த ஐஸ் கட்டிகள் அல்லது ஜெல் பேக்குகளை (frozen gel packs) உணவுகளுக்கு மேல் வைக்கலாம்.

நீண்ட நேர மின்தடைக்குப் பிறகு உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கெட்ட உணவுப் பொருட்களை அடையாளம் கண்டு பாதுகாப்பாக விலக்கும் விழிப்புணர்வை வாசகர் பெறுவார்.