கோடையில் வாழைப்பழம் விரைவில் கெடாமல் பாதுகாக்கும் எளிய சீக்ரெட்ஸ்!

கோடைக்கால சூட்டிலும் எத்திலீன் வாயுவை கட்டுப்படுத்தி, வாழைப்பழத்தின் ஃபிரஷ்னஸை நீண்ட நாட்கள் காக்க உதவும் எளிய வீட்டுச் சீக்ரெட்கள்.
prevent-bananas
prevent-bananas
Updated on

ழங்களிலேயே விலை குறைவானதும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது வாழைப்பழம். இது வருடம் முழுவதும் கிடைக்கக் கூடியது. மேலும்  நம்மில் பலர் வீடுகளிலும் தினசரி வாங்கி வைத்து உண்ணப்படும் பழம்.

கோடை காலங்களில் இதை அதிகளவில் வீட்டில் வாங்கி சேமித்து வைத்திருக்கும்போது, அவை மிக விரைவில் பழுத்து, அழுகிப் போவதற்கான வாய்ப்பு உண்டாகிறது. சரியான முறையில் வாழைப்பழங்களை பாதுகாத்து வைப்போமானால், அவற்றின் தோல் மீது கரும் புள்ளிகள் தோன்றி அவை விரைவிலேயே அழுகிப் போவதை தடுக்க முடியும். அதற்கான வழி முறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழத்திலிருந்து எத்திலீன் (ethylene) என்றொரு  வாயு உருவாகிறது. இந்த வாயு வாழைப்பழம் முழுமையாக பழுப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைக்கக் கூடியது. உஷ்ணம் அதிகம் உள்ள கோடை காலத்தில் பழங்கள் இன்னும் விரைவாக மிருதுத் தன்மையடைந்து, அழுக ஆரம்பித்து  விடுகின்றன.

எத்திலீன் வாயு மற்ற பழங்களையும் பாதிப்படையச் செய்யும் குணம் கொண்டுள்ளதால் வாழைப்பழங்களை மற்ற பழங்களிலிருந்து பிரித்து தனியாக சேமித்து வைத்தல் நலம். உஷ்ணத்தின் அளவு, காற்றோட்டம் மற்றும் எத்திலீன் வாயுவின் கசிவு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் பழத்தினை ஃபிரஷ்னஸ் குறையாமல் பாதுகாப்பது எளிது.

வாழைப்பழத்தின் காம்புகளை பிளாஸ்டிக் ரிப்பன் அல்லது சில்வர் ஃபாயில் (Foil) வைத்து சுற்றிக் கட்டி வைத்தால் எத்திலீன் வாயு வெளியேறுவது குறையும். இதனால், பழுத்து வரும் செயல்பாடுகள் மெதுவாக நடைபெறும். பழங்களின் ஃபிரஷ்னஸ் மேலும் சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்புண்டாகும்.

வாழைப்பழ சீப்களை தரையில் பரத்தி வைப்பதைவிட கயிறு கட்டி தொங்க விடுவது நல்லது. இதனால் காற்றோட்டம் அதிகரிக்கும். பழம் நசுங்குவதற்கான வாய்ப்பு குறையும். பழங்கள் மீதான அழுத்தம் குறையும்போது தோலில் கரும் புள்ளிகள் தோன்றாது. பழம் விரைவில் கெட்டும் போகாது.

இதையும் படியுங்கள்:
கார்பைடு கல் வேண்டாம்... பழ வியாபாரிகளே ஆச்சரியப்படும் இயற்கையாக மாம்பழம் பழுக்க வைக்கும் ஐடியாக்கள் இதோ!
prevent-bananas

நேரடி சூரிய வெளிச்சம் வாழைப்பழத்தின் மீது படாமலும், அடுப்பிற்குப் பக்கத்தில் வைக்காமலும் பாதுகாத்தல் நல்லது. கிச்சனில் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் வாழைப்பழங்களை வைத்திருப்பது  நலம். இதனால் வாழைப்பழத்தின் டெக்ச்சரும், ஃபிரஷ்னஸும் கெடாது.

வாழைப்பழம் முற்றிலும் கனிந்த பின், நீங்கள் அதை சாப்பிடும் மூடில் இல்லையெனில், ஃபிரிட்ஜில் வைத்து விடலாம். அப்போது தோல் கருத்துப்போனாலும் பழம் மேலும் இரண்டு நாட்களுக்கு கெடாது.

வாழைப்பழம் ஏற்கெனவே முற்றிலும் பழுத்து விட்டிருந்தால், அதை தூக்கிப் போட்டுவிடாமல், பனானா மில்க் ஷேக், ஸ்மூத்தி, பான்கேக், பனானா பிரட் போன்றவை தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கூறிய முறைகளில் வாழைப்பழங்களை பத்திரப்படுத்தி, அவைகள் வீணாகமல் பாதுகாக்க முயற்சி செய்யலாமே.

logo
Kalki Online
kalkionline.com