

சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்களை வீட்டில் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறிவிடும்.
குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் உரையாடும் நேரங்களில் செல்போனை தூக்கி தூரமாக வைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதை நோண்டி நோண்டி மற்றவரின் உரையாடலில் பேச்சில் கவனம் இருக்காது. மனப்பூர்வமாகவும் பேசவும் முடியாது.
மிக அவசரமான தருணங்கள் உயரமான கட்டிடங்கள் போன்றவற்றை தவிர்த்து எல்லா இடங்களிலும் லிஃப்டை தவிர்த்து படிகளை பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி தாண்டி இது போன்ற பழக்கங்கள் உங்களது உடலை உறுதியாக்கும்.
அதிகாலையில் எழுந்தவுடன் வாக்கிங், சிறிது படிப்பு என சில தினசரி நடைமுறைகளை பழகுங்கள். தினமும் சரியான நேரத்தில் விழிக்கவும், எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்யவும், மனதை ஒருமுறைப் படுத்தி வேலை செய்யவும் இந்த பழக்கம் உதவும்.
இன்று என்னென்ன வேலைகளை செய்யவேண்டும்? என காலையிலேயே சில நிமிடங்களை ஒதுக்கி திட்டமிட்டு கொள்ளுங்கள். அந்த சில நிமிட பிளானிங் ஒரு நாளில் பல நிமிடங்களை மிச்சம் செய்ய நேரமும் உதவும்.
பசி எடுக்கும்போது சாப்பிடுங்கள் தாகம் எடுக்காவிட்டாலும், போதுமான தண்ணீர் குடியுங்கள். இது உடலை உற்சாகமாக வைத்திருக்க வைக்கும். பழங்கள் கொட்டை வகைகள் என ஆரோக்கிய நொறுக்கு தீனிகளை அருகில் வைத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் ஆரோக்கியமற்ற எதையாவது சாப்பிட்டு விடுவீர்கள்.
அவ்வப்போது திருவிழாக்கள் சுற்றுலாக்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு குடும்பத்துடன் செல்லுங்கள். ஒரு மாலை நேரத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் கோயிலுக்கு குடும்பத்துடன் போய் வந்தால், இறுக்கமான மனதை குறைத்து அன்பு பிணைப்பை உங்களுக்கு ஏற்படுத்தும். இதனால் மனதை குதமாக வைத்திருக்கவும் இது உதவும்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் அவ்வப்போது வெளியில் சொல்லுங்கள். தோட்டவேலை செய்வது, கடைகளுக்கு (கோயிலுக்கு நடந்து செல்வது என இருங்கள். இதனால் மனம் அழகாகும். மனம் மகிழ்ச்சியாகும்.
உட்கார்ந்தபடி டி.வி பார்க்காமல் கை, கால்களை அசைத்து ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்யுங்கள் போன் பேசும்போது காலார சிறிது கொஞ்சம் வீட்டிலேயே நடங்கள். இது உடலுக்கு நன்மை வரும் பழக்கம். தேவைப்படும் சூழல்களில் அடுத்தவர்களின் உதவியை தயங்காமல் கேளுங்கள். அடுத்தவர்கள் உங்களிடம் உதவி கேட்டாலும், உடனடியாக செய்து கொடுங்கள். கொடுப்பவர்களே அதிகம் நன்மை பெறுகிறார்கள். தேவையில்லாமல் எந்த வேலையையும் தள்ளிப்போடாதீர்கள். ஒரு வேலையை முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.
எவரையும் ஒரு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பது மனதுக்கும் அல்லது உடலுக்கும் நல்லது. இந்த சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்களை பழகிக்கொண்டால், உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறிவிடும். மகிழ்ச்சி தரவும், பெறவும் மாற்றங்கள் இவை. இதனை செய்து மன அமைதி மகிழ்ச்சி அடையலாம்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here