ஆச்சரியமூட்டும் சில மனோதத்துவ உண்மைகள்!

Some surprising psychological facts
Some surprising psychological facts
Published on

* ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3,000 சிந்தனைகளைக் கொண்டிருப்பானாம். எண்ணங்கள் ஒருவரை ஆள்கிறது என்றால் அது மிகையில்லை.

* மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. மூன்று நாட்களுக்கு மேலும் கோபம் நீடித்தால், அவர்களிடம் அன்பு இல்லை என்பதைக் குறிக்கும்.

* முத்தம் கொடுத்தல், வாழைப்பழம், சாக்லேட் சாப்பிட்டால் சூயிங்கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உண்மை.

* பிறக்கும்போது நம் கண்கள் எந்த அளவுக்கு இருந்ததோ இறுதி வரை அதே அளவுதான் இருக்கும். ஆனால், காது மற்றும் மூக்கு அளவுகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை வளரும்.

இதையும் படியுங்கள்:
வால்நட்டிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்!
Some surprising psychological facts

* இனிப்புகளையும், சாக்லேட்டுகளையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ஆகவும், வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.

* மூளையில் ஆண் மூளை, பெண் மூளை என்று தனித்தனியாகக் கிடையாது. மூளையை அவரவர் பழக்குவதில் உள்ளது.

* ஒருவர் சிங்கிளாக இருக்கும்போது சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் கவனிப்பார்கள் என மனோதத்துவ ஆய்வு கூறுகின்றது. சிறு வயதில் ஆண்களை விட பெண்களே வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுபவர்கள் ஆகவும் இருக்கிறார்கள்.

* உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும்போது பாட்டு பாடுவது. இவ்வாறு செய்யும்போது உண்மையில் மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து மனநிலை மேம்படும்.

இதையும் படியுங்கள்:
சர்வ பாப விமோசனம் தரும் சனி மகாபிரதோஷ வழிபாடு!
Some surprising psychological facts

* உண்மையான அன்பை ஒருவர் உங்களிடம் கொண்டிருந்தால் உங்களது வலியை, உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்னதான் வெளியே போலியாக சிரித்தாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

* நேர்மறை எண்ணங்கள் கொண்டு ஒரு விஷயம் நடக்கும் என நம்பினால் நிச்சயமாக அது நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை தவறான பாதைக்குதான் இட்டுச் செல்லும். எண்ணங்கள் வலுவானவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com