

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிா். திருமண பந்தம் என்பது இறைவன் போட்ட முடிச்சு. அவன் போட்ட கணக்கும் நாம் போடும் கணக்கும் தவறாகிவிடக்கூடாது.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். இறைவன் படைப்பில் நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் மிருகங்களுக்கு ஐந்து அறிவைக் கொடுத்த இறைவன் நமக்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்துள்ளான் அதுதான் பகுத்தறிவு.
ஒரு காலகட்டத்தில் திருமணம் முடிந்து நல்லவிதமாக வாழ வேண்டும் என இறைவன் சாட்சியாக பொியோர்கள் முன்னிலையில் பெற்றோா்கள் நமக்கு திருமணம் செய்து வைக்கிறாா்கள். அப்போது துவங்கும் வாழ்க்கை எனும் ஓடத்தை கணவன் மனைவி இருவரும் சரியான புாிதலோடு துவங்கவேண்டும்.
ஈவு, இரக்கம், பச்சாதாபம், இவை அனைத்தும் இறைவன் நமக்கு கொடுத்த கொடை அதை நாம் சரிவர பயன்படுத்தினாலே வாழ்க்கை வளமாக அமையும். கணவன் மனைவி பந்தம் என்பதும் இறைவன் நமக்கு கொடுக்கும் அன்பான அட்சய பாத்திரம். அதில் அள்ள அள்ள அன்பு குறையவே கூடாது.
இருபது வருடங்கள் தன்னை வளர்த்த தாய் தந்தை மற்றும் அனைத்து உறவுகளையும் கடந்து நமக்கான கணவன் அமைந்துவிட்டான், இனி எல்லாமே அவன்தான் என்ற தம்பிக்கையில் ஒரு பெண் ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு வருகிறாள். அதேபோல நமது சுக துக்கங்களை பகிா்ந்து கொள்ள நமக்கானவள் நம்மிடம் வந்து சோ்ந்துவிட்டாள் என்ற மனப்பக்குவம் நமக்கு இருக்கவேண்டும்.
முதலில் வாழ்க்கையின் படிக்கட்டுகளின் தன்மையை உணர்ந்து அவசரப்படாமல் நிதானத்துடன் விவேகம் கடைபிடித்து அன்பே மூலதனமாக வைத்து நல்ல புாிதலோடு வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.
நன்கு மனம்விட்டு பேசுங்கள் மனைவியானவள் ஒருவிதமான சூழல், பழக்க வழக்கங்கள் இவைகளோடு வாழ்ந்திருப்பாள் அவள் நமது குடும்ப சூழலுக்கு புதியவள் அவளுக்கு புகுந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் உறவுகளின் மனப்பக்குவம் இவைகளை சொல்லிக் கொடுங்கள். அதற்காக அவர்களது பெற்றோா்கள் மீதும் நீங்கள் அன்பு செலுத்தலாம் அது தவறே இல்லை. எல்லாமே மீட்சுவல் அண்டர் ஸ்டேன்டிங்தான்.
முதலில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புாிந்து கொள்ளுங்கள் அதுதான் அரிச்சுவடி. இதற்கென தனியாக ஆசிாியர் தேவையில்லை. உங்கள் இருவரின் மனதுதான் நல்ல ஆசிாியர்.
குழந்தை வளரும்போது விழுந்து விழுந்துதான் அடிபட்டு அடிபட்டுதான் அழுதுதான் நடை பயில்கிறது அதேபோலத்தான் திருமண வாழ்க்கையும்.
தம்பதிகள் இருவரும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கடைபிடியுங்கள். ஒருவரை ஒருவர் மனதார நம்புங்கள் அதுவே முதன்மையானது. பாழாப்போன ஈகோவை விட்டுத்தள்ளுங்கள். அது இறைவன் கொடுத்த கொடையல்லவே நாமாக தேடிக்கொள்வது,
இரு வேறு உடல்கள், உயிா் ஒன்று உணர்வுகள் ஆசாபாசங்களும் சமமானதே!
உனக்கு நான் எனக்கு நீ என்ற மனப்பக்குவத்திற்கு தயாராகுங்கள்! ஒருவருக்கு ஒருவர் உண்மை பேசுங்கள் அவரவர் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்பால வாழ்க்கைப்பாதையில் ஒற்றுமை எனும் நிலைபாட்டை எடுத்து புாிந்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
விட்டுக்கொடுத்து வாழவேண்டும் ,நீ எனக்கு மனைவி நான் சொல்வதைத்தான் நீ கேட்கவேண்டும் என்ற ஆணாதிக்கம் வேண்டாமே அது என்ன புதுக்கணக்கு.
இருமனமும் சங்கமிக்க வேண்டும். பொதுவாக யாா் மத்தியிலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வாழவேண்டாம். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போனதாய் சரித்திரம் உண்டா?
அதேபோல புகுந்த வீட்டை தன் வீடாகவும் மாமியாா் மாமனாரை பெற்ற தாய் தந்தையாகவும் பாவித்து வாழ்வதே மருமகளுக்கான நல்ல பண்பாடு. வாழ்க்கை சிறப்பானது அது இறைவனின் அனுகூலம் இறைவழி கடைபிடித்து அன்பே பிரதானமாய் வாழப்பழகிக்கொள்ளுங்கள் .
மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்யத் தவறாதீா்கள். பொதுவாக இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அவரவர் வேலையின் கஷ்ட நஷ்டங்களை புாிந்துகொள்ளுங்கள்.
கூடுமான வரையில் எந்த விஷயமானாலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி முடிவு எடுப்பதே நல்ல தம்பதி களுக்கான துவக்கம். வாழ்க்கையை புாிந்து மனமாச்சர்யங்கள் களைந்து அட்சயபாத்திரத்தில் அள்ள அள்ள குறையாத அன்பை கடைபிடியுங்கள் அப்புறம் நீங்கள்தான் கடவுளின் பிள்ளைகள்.
மனிதநேயம் கடைபிடித்து தான தர்மங்கள் செய்து அதர்மம் தவிா்த்து அனைத்து உயிா்களையும் நேசியுங்கள். நேசிப்பை வாசிப்பாய் கொண்டு தாம்பத்யம், தம்பதிகள் எனும் புத்தகங்களை கடைசி பக்கம் வரை படியுங்கள் அதுவே சிறப்பானது.
உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள சவால்களைக் கையாண்டு, தம்பதியரிடையே நீடித்த நேசத்தை உருவாக்கும் வழிகளை அறிவீர்கள். இதன் மூலம் பரஸ்பர அரவணைப்பு, இல்லற வாழ்க்கை அதிகரித்து, குடும்பத்தில் நேர்மறை ஆற்றல் பெருகும்.