
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. 40 நாட்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்து வந்த இருபால் மாணவச்செல்வங்கள், பள்ளிகள் திறப்பை எதிா்நோக்கி காத்திருந்தாா்கள். 2.6.2025ல் ஆா்வத்துடன் பள்ளிக்கு வந்தாா்கள், அனைவருக்கும்நோட்டு, புத்தகங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டன.
மாணவர்கள் தினசரி பள்ளிக்குப் போவதில் மட்டும் அக்கறை செலுத்தாமல் ஆசிாியர்களால் நடத்தப்படும் பாடங்களை நன்கு கவனித்து உள்வாங்கி மனதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதே நேரம் தினசரி நடத்தப்படும் பாடங்களை தினசரி பொறுப்புடன் படிப்பது, எழுதிப்பாா்ப்பது, புாியாத பாடங்களின் சந்தேகங்களை மறுநாள் வகுப்பு ஆசிாியரிடம் கேட்டுத் தொிந்து கொள்வது போன்ற இனங்களில் தகுந்த அக்கறை காட்டி படிக்கவேண்டும்.
பெற்றோா்களும் பிள்ளைகள் பள்ளியில் இருந்து வீடு வந்ததும் அவ்வப்போது நடத்தப்படும் பாடங்களை பற்றி விபரமாக கேட்டு அவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் எழுத துணைபுாிதல் வேண்டும்.
இல்லத்தரசிகள் மெகாதொடா் மோகத்தில் பிள்ளைகளிடம் செல் போனைக்கொடுத்துவிட்டு தொலைக்காட்சியில் ஐக்கியமாவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு 'நீதி போதனை' வகுப்புகள் நடத்த வேண்டும். தினசரி ஒருமணிநேரம் நீதி போதனை வகுப்புகள் நடத்தினால் மாணவர்களுக்கு படிப்போடு கூடிய நல்ல ஒழுக்கங்களும் வளர வாய்ப்பு கிடைக்கும்.
மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களை பள்ளியில் சோ்க்கும் போதே முடி வெட்டிக்கொள்ளும் முறையை பெற்றோா்களிடம் சொல்லி, அதற்கு தகுந்தாற்போல அவர்களிடம் எழுத்துமூலமாக, எழுதிவாங்கி அட்மிஷன் போடுதல் நல்லது.
பெற்றோா்களின், செல் நம்பர் அனைத்து வகுப்பாசிாியர்களிடம் இருப்பதும் எந்த பிரச்சனை வந்தாலும் பெற்றோா்களுக்கு தொியப்படுத்துவதும் நல்லது.
அதே நேரம் மாணவர்களுக்கும் பொியவர்களை மதிக்கும் தன்மை மற்றும் ஆசிாியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பெற்றோா் ஆசிாியர் மாணவர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தவேண்டும்.
பொதுவாக மாணவர்கள் நல்ல பண்பாடுகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். ஆசிாியர்கள் பணி சிறப்பானது, நமது எதிா் காலத்திற்கு நம்மை தயாா் படுத்துவது, ஆசிரியர் பணி என்ற உணர்வு மேலோங்க வேண்டும். மாதா, பிதா ,குரு , தெய்வம் ,என்ற வாா்த்தைக்கேற்ப ,நல்ல பண்பாடுகளையுடைய நல்ல நட்பு, நல்ல நண்பர்கள் இவர்களை தோ்வு செய்து சகோதர உணர்வுடன் பழகவேண்டும்.
ஒரு கால கட்டத்தில் மாணவிகளுக்கு பெண் ஆசிாியர்கள்,பாடம் நடத்தும் நிலை வரவேண்டும். தலைமை ஆசிாியர்கள் இதில் தனிகவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தேவையில்லாத நிகழ்வுகள் வருவதைத் தடுக்கலாம்.
ஆசிாியர்களும் மாணவர்களுடன் சகோதர உணர்வோடு பழகி அன்போடு கூடிய கண்டிப்பைக்காட்ட வேண்டும்,
மாணவர்களுக்குள் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்காட்டாமல் பாடங்களை நடத்துதல் நல்லது.
பள்ளிக்கு அருகாமையில் பல்வேறு துறைகளில் வேலைபாா்த்து பணி நிறைவடைந்த அலுவலர்களை நீதி போதனை வகுப்புகள் நடத்த அனுமதிக்கலாம்.
அப்படி நியமணம் செய்யும் நபர்களுக்கு தலைமை ஆசிாியர் உள்ளிட்ட ஆசிாியர்கள் சோ்ந்து குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்கலாம்.
மாணவர்கள் தேவையில்லாமல் கூடாநட்புடன் சோ்ந்து ஆசிாியர்களை மதிக்காமல், பாடங்களையும் படிக்காமல் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாமல் நல்ல பண்பாடுகளுடன் பொியோா்களை மதிக்கும் பழக்க வழக்கங்களை கடைபிடித்து கல்வியில் நாட்டம் செலுத்தி வாழப் பழக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு உதாரணமாய் ஒரு நீதிக்கதையை சொல்லலாம்.
காட்டில் ஒரு சிங்கம் இருந்தது அதற்கும் ,கொசுவுக்கும் போட்டி வந்தது அப்போது சிங்கம் சொல்லியது ,நான் நினைத்தால் என்னைவிட சிறிய உன்னை என்னால் எதுவும் செய்ய முடியும், நீ பொியவனா? நான் பொியவனா? என பாா்க்கலாமா என்றது அதற்கு கொசுவும் பதிலுக்கு எனது திறமை உனக்குத்தெரியாது போட்டிக்கு நான் தயாா் என்றது. இருவருக்குமான சம்பாஷனை முடிவதற்கள்ளாகவே கொசுவானது தனது சகாக்களை அழைத்து வந்து சிங்கத்தின் மூக்கில் புகுந்தன.
காதுகள் ஓரம் போய் கோரஸாக ரீங்காரமிட்டு சிங்கத்தைக்கடித்து ரத்தத்தை உறிஞ்சின. கொசு கடி தாங்காமல் சிங்கம் அங்கங்கே தனது நகங்களால் கீறிக்கொண்டது. தாடை , முகம், காது, கால், பகுதிகளில் ரத்தம் வர ஆரம்பித்தது. பின்னர் கொசு சிங்கத்திடம் சொல்லியது, "நீ காட்டுக்கே ராஜா உருவத்தில் பொியது, பாா்த்தாயா..?" என இறுமாப்புடன் பறந்து போகும்போது அங்கே இருந்த சிலந்திக்கூட்டில் சிக்கித் தப்பிக்க முடியாமல் திணறியது.
ஆசிாியர்கள் மாணவர்களிடம் ஈகோ பாா்க்கக்கூடாது. ஆசிாியர்கள் மாணவர்களுடன் ஆசிாியராகவும் , சகோதரனாகவும், நண்பனாகவும், கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிப்பு காட்டி மாணவர்களை நல்வழிப்படுத்தலாம்.
அதேபோல மாணவர்களும் கல்வியை நேசித்து ஆசானை மதித்து,எதிா்காலம் கருதி நல் ஒழுக்கங்களை வளா்த்துக்கொண்டு படிப்பில் கவனம்செலுத்த வேண்டும். நல்ல பண்பாடுகளை வளா்த்துக்கொள்வோம்.
நல்ல விதையை விதைப்போம்; நல்லதை அறுவடை செய்வோம்.