சிறுவர் கதை- 'வாழ்க்கைப் பாடம்'

Children's story- 'Life Lesson'
Children's story- 'Life Lesson'
Published on

டேவிட், முருகன், தினேஷ், வருண் நால்வரும் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார்கள்.

தினேஷ், “நாளைக்குதான் ப்ராஜெக்ட் (Project) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்... என்னடா பண்ணலாம்?”

வருண்,  “நான் இன்னும் அதைத் தொடங்கவே இல்லை... நீ வேற ஏன்டா  ஞாபகப்படுத்துற...” 

டேவிட்,  “ஐயோ போச்சு... நா நாளைக்கு ஸ்கூலுக்கு வர மாட்டேன்பா!”

முருகன், ”டேய் என்னடா... பொசுக்குன்னு லீவு போடப் போறேன்னு சுலபமாகச் சொல்ற?”

வருண், ”இது நமக்கு புதுசா என்ன... ஏற்கனவே பண்ணறதுதானே முருகா...”

முருகன், ”டேய்... என்னை இந்த லிஸ்டில் சேர்க்காதே.. பொய் சொல்லிட்டு லீவு போடுறதெல்லாம் எனக்குச் சரிபட்டு வராது.”

தினேஷ், ”அதான் கிளாஸ்க்கே தெரியுமே... நீ உண்மை விளம்பின்னு” என்று சொன்னதும், மூவரும் முருகனைப் பார்த்து சிரித்தனர்.

வருண், “நாளைக்குத்தான் லீவு போடப் போறோம்... ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம்.”

வருண், டேவிட், தினேஷ் மூவரும் குறுக்கு வழியாக வேறொரு பாதையில் ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றனர். முருகன் வீட்டிற்குச் சென்றான்.

முருகன் ஹோம்ஒர்க் வேலைகளை முடித்து இரவில் தூங்குவதற்குத் தயாராகும்போது, ”டேய் நாளைக்கு நூடுல்ஸ் பண்ணித் தரவா... இல்ல வேற எதாச்சும் ஸ்பெஷலா வேணுமா?” என்று முருகனின் அம்மா கேட்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சியானன் முருகன்.

முருகன் மனதிற்குள் “புதுசா நம்மளோட விருப்பத்தைக் கேக்குறாங்க... நாளைக்கு என்ன ஆகப் போகுதோ” என்று நினைத்துக்கொண்டு தூங்கினான்.

காலையில் முருகன் எழுந்து ப்ராஜெக்ட் முடிக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தான். டீச்சர் கேட்டால், ‘முடிக்கவில்லை’ என்று உண்மையைக் கூறிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டு எழுந்து பள்ளிக்குப் புறப்படத் தயாரானான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் நீதிக் கதை: தோற்றத்தைக் கண்டு இகழாதே!
Children's story- 'Life Lesson'

ஸ்கூலுக்குச் சென்றதும் தினேஷ், டேவிட், வருணின் பெற்றோர்கள் இறுக்க முகத்துடன் பள்ளி முதல்வருடன் பேசிக்கொண்டிருந்ததை முருகன் பார்த்தான். ‘ஒருவேளை அவர்கள் ‘ஹோம்வொர்க்’ வேலைகளை முடிக்காமல் அடிக்கடி லீவு போடுவது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதோ... நல்லவேளை நான் வந்துவிட்டேன்’ என்று எண்ணி தன் வகுப்பறைக்குச் சென்றான்.

ஆசிரியர் “ப்ராஜெக்ட் முடிக்க இன்னும் ஒரு வார காலம் அவகாசம் தருகிறேன். அதற்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்” என்றவுடன் முருகன் ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டான். லீவு போடாமல் வகுப்புக்குச் சென்றதை நினைத்து சந்தோஷப்பட்டான்.

மாலை வீட்டிற்குச் சென்றதும் முருகனின் அம்மா, “என்னடா என்ன ஆச்சு... அவர்கள் வந்துவிட்டார்களா?” என்று கேட்டார்.

முருகன், “யார் அம்மா?”

முருகன் அம்மா, “காணாமல் போன உன் நண்பர்கள்தாண்டா...”

“என்னது காணாமல் போய்விட்டார்களா? எப்போ? எனக்குத் தெரியாதே?’ என்று முருகன் அதிர்ச்சியானான்.

முருகன் அம்மா “என்னிடம் போனில் தகவல் கேட்டுவிட்டு உன்னோட பள்ளிக்கு அவர்களுடைய பெற்றோர்கள் வந்திருப்பார்களே... நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.

அப்போதுதான் பள்ளியில் அவன் காலையில் பார்த்த விஷயங்கள் நினைவிற்கு வந்தன. உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு தன் அருகில் இருக்கும் நண்பர் வீட்டிற்குப் புறப்பட்டான். போகும்போது நேற்று மாலை நடந்த சம்பவங்கள் அவன் நினைவுக்கு வந்தன. ‘ஐஸ்கிரீம் கடைக்குப் போக அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை.’ உடனே முருகன் விரைவாக அங்கு சென்றான்.

அது ஒரு சிறிய பாதை. இரு பக்கங்களிலும் மரங்கள் என்று பார்ப்பதற்கு சிறிய காடு போல தோற்றமளிக்கும். முருகனும் அவர்கள் சென்ற பாதையிலே சென்றான். சிறிது தூரத்தில் துர்நாற்றம் வீசியது. அதைச் சுற்றி குப்பைகள் கிடந்தன. அதற்கு அருகிலே ஒரு டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் இருந்தது. அது டேவிட்டுடைய டிபன் பாக்ஸ், வாட்டர்பாட்டில். அதை எடுத்துக்கொண்டு சென்றான் முருகன். சற்று தூரம் சென்றதும் புத்தகம், நோட்டு புத்தகங்கள் பையிலிருந்து சிதறிக் கிடப்பதைப் பார்த்த முருகனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. சைக்கிள்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்துகிடந்தன.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ் சிறுகதை - 'பார்க்க அழகாக இருக்கிறதே' என நினைத்து ஆபத்தில் மாட்டலாமா?
Children's story- 'Life Lesson'

சைக்கிள்கள், புத்தகங்கள், நோட்டுகள் இங்கே... அவர்கள் எங்கே? என்று சைக்கிளை விட்டு கீழே இறங்கினான். யோசித்துக்கொண்டே நடந்து சென்றபோது எதிர்பாராமல் அவன் கால் பட்டு ஒரு கல் உருண்டு, அடர்ந்த புதருக்குள் விழுந்தது. சில விநாடிகளில் 'உதவி உதவி' என்று மெல்லிய குரல் ஒன்று கேட்டதும், முருகன் அதிர்ச்சியானான்.

எப்படி புதருக்குள்ளிருந்து சத்தம் என்று எண்ணி, அதை விலக்கி பார்த்ததும் அங்கே சுற்றுச் சுவர் இடிந்து, ஒரு பாழடைந்த கிணற்றில் அவன் நண்பர்கள் அடிபட்ட நிலையில் இருந்தனர். ஊர் மக்களை அழைத்து, அவர்களைத் தூக்கி மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் அவர்களைக் காப்பாற்றிவிட்டனர்.

முருகன் அவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான்... “நாங்கள் சென்ற பாதையில் ஒரு நாய் எங்களைக் கடிக்கத் துரத்தியது. அந்த நாயிடமிருந்து நாங்கள் தப்பிக்க வேகமாக சைக்கிளை ஓட்டினோம். வேகமாக போனதால் பேலன்ஸ் தவறி சைக்கிள் விழுந்தவுடன் நாங்கள் உருண்டோம். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது...”

வருண் முருகனை அருகில் அழைத்து “பேசாம நாங்கள் நேர்பாதையில் சென்றிருந்தால் நாய் எங்களைத் துரத்தியிருக்காது. இந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. ஆசிரியரும் ப்ராஜெக்ட் முடிக்க மேலும் ஒரு வாரம் தந்திருக்காங்க. சந்தோஷம்தான்டா... நாங்களும் உன்னைப்போல உண்மையா இருந்திருக்கலாம்டா... இனிமேல் உன்னைக் கிண்டல் பண்ண மாட்டோம்” என்று கூற, முருகன் “நேர்பாதையை விட்டுட்டு குறுக்குப்பாதையில் செல்லும்போது கவனமா இருக்கணும்டா... சரி விடுடா... எல்லாம் ஒரு ‘வாழ்க்கைப் பாடம்’தான்” என்றான்.       

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - சைக்கிள்
Children's story- 'Life Lesson'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com