
கரையான்களை கட்டுப்படுத்துவதும், அதற்கான தீர்வுகளாக சந்தையில் திரவ கரையான் கொல்லிகள், நுரைகள், தூண்டில்கள் உள்ளிட்ட ஏராளமான கரையான் கொல்லிகள் உள்ளன. இவற்றில் சரியான முறையை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இதற்கு தொழில்முறை நிபுணத்துவம் பெற்ற நிபுணரை கலந்தாலோசிப்பது அவசியம்.
1. மண் சிகிச்சை: இது கரையான்களுக்கு எதிராக ஒரு தடையை உருவாக்க அடித்தளத்தை சுற்றியுள்ள மண்ணில் திரவ கரையான் கொல்லிகளை செலுத்துவதால் கரையான்களை கட்டுப்படுத்த முடியும்.
2. மர சிகிச்சை: மர சிகிச்சை என்பது மர கட்டமைப்புகளுக்குள் இருக்கும் கரையான் தொல்லைகளை குறிவைத்து நுரை பயன்பாடுகள் அல்லது மரப் பாதுகாப்புகள் போன்ற சிறப்பு சிகிச்சைகளை செய்வதை குறிக்கும். திரவ கரையான் கொல்லிகள் நேரடியாக மர வேலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நிபுணர்கள் மர வேலைகளில் துளைகளை ஏற்படுத்தி அவற்றில் நுரையை செலுத்தியும் கரையான்களை கொல்கின்றனர்.
3. கட்டுமானத்திற்கு முந்தைய சிகிச்சை: கட்டடங்களை கரையான்களின் எதிர்கால தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கு கட்டுமானத்தின்பொழுதே பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு தடுப்பு நடவடிக்கையாகும்.
4. கரையான் தூண்டில் அமைப்புகள்: இந்தக் கரையான் தூண்டில் அமைப்புகள் கரையான்களை ஈர்க்கவும் அழிக்கவும் தூண்டில் நிலையங்களைப் பயன்படுத்துகின்றன. இதனால் அவற்றின் பெருக்கத்தை சீர்குலைத்து கரையான்களை வீட்டில் சேதப்படுத்தாமல் இருப்பதற்கு வழிவகுக்கிறது.
5. வணிக சேவைகள்: சிறப்பு பூச்சி கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் மற்றும் பிராண்ட் பாதுகாப்பை உறுதி செய்து வணிகங்களுக்கான சிறப்பான சேவைகள் செய்யப்படுகின்றன.
6. இயற்கை வைத்தியம்: வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலவைகளைப் பயன்படுத்தி கரையான்களின் ஆரம்பப் புள்ளிகளுக்கு, அதாவது நுழைவுப் புள்ளிகளுக்கு சிகிச்சையளிப்பது போன்ற இயற்கை வைத்தியம் கரையான்களை கட்டுப்படுத்த உதவும்.
7. கரையான் தெளிப்பான்கள்: வேகமாக செயல்படும் பைஃபென்த்ரின், இமிடாக்ளோபிரிட் அல்லது ஃபிப்ரோனில் போன்ற ரசாயனங்கள் கொண்ட வணிகத் தெளிப்பான்கள் பயன்படுத்தப்படும்பொழுது கரையான்களைக் கட்டுப்படுத்த முடியும்.
8. வெப்ப சிகிச்சை: கரையான்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்பநிலையை உயர்த்தி கரையான்களைக் கொல்லும் வெப்ப சிகிச்சை முறை பயனுள்ள ஒன்றாகும்.
9. முழுமையான ஆய்வு: கரையான்களின் பெருக்கம் மற்றும் அதற்கான சிகிச்சைக்கு தொற்றின் அளவு மற்றும் மூலத்தை அடையாளம் காண்பது என்பது மிகவும் முக்கியமானது. கரையான்கள் கட்டுமானங்களில் அல்லது நிலத்தில் எந்தளவு பரவியுள்ளது என்றும், அதனுடைய மூலம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
10. தொழில் முறை நிபுணத்துவம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்: கடுமையான தொற்றுகளுக்கும், அதன் பரவல்களுக்கும் ரசாயனங்கள் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை எடுப்பதற்கு முன்பு பூச்சி கட்டுப்பாடு நிபுணரை அணுகி கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம். அத்துடன் ரசாயனங்களை பயன்படுத்தும்பொழுது உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
11. தடுப்பு நடவடிக்கைகள்: கரையான்களின் தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கையாக கட்டடங்களை சுற்றி வறண்ட சூழலை பராமரிப்பதும், மரம் - மண் தொடர்பை குறைப்பதும், கசிவுகளை உடனடியாக சரி செய்வதும் கரையான் தொல்லைகளை பெருமளவில் தடுக்க உதவும்.
கரையான் கொல்லிகளை தேர்ந்தெடுக்கும்பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
* கரையான் கொல்லிகளை வாங்கும்பொழுது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் செயலில் உள்ள மூலப்பொருள் மற்றும் சிகிச்சை வகையாகும். வேகமாக செயல்படும் பைஃபென்த்ரின் அடிப்படையிலான ஸ்பிரேக்கள் முதல் ஹெக்ஸாஃப்ளூமுரான் பயன்படுத்தும் நீண்டகால தூண்டில் அமைப்புகள் வரை பல வகைகள் உள்ளன.
* முக்கியமாக, நம் பட்ஜெட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் ரசாயனங்கள் எவ்வளவு கடுமையானவை. அவை நம் தோட்டம் அல்லது தாவரங்களை பாதிக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* திரவத் தடைகள் மற்றும் தூண்டில்களைப் போல் இல்லாமல் டெர்மிடோர் ஃபோம் சிறந்த சிகிச்சை முறையாகும். இதனை வீட்டில் நேரடியாகப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளில் கரையான்களை கொல்வதற்கு பயன்படுத்தலாம். இந்த நுரை ஸ்பிரேயை விட நன்கு செயல்பட்டு இண்டு இடுக்குகளில் உள்ள கரையான்களையும் கொல்கின்றன. இவை முற்றிலும் மணமற்றது. எனவே, வீட்டைச் சுற்றி தீங்கு விளைவிக்கும் வாசனையை ஏற்படுத்தாது.
* கரையான் தெளிப்பான் மற்றும் மருந்துகளை கவனமாகக் கலந்து பயன்படுத்த வேண்டும். கடுமையான தொற்றுகளுக்கு பல பயன்பாடுகள் தேவைப்படலாம். கரையான்கள், நெருப்பு எறும்புகள், உண்ணிகள் உட்பட 75க்கும் மேற்பட்ட பூச்சிகளின் பரந்த அளவிலான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் கரையான் தடுப்புகள் உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றது. ஆனால், அவற்றை கையாள்வதில் மிகுந்த கவனம் அவசியம் தேவை.