திரை நேரத்தின் இரட்டை முகம்: திரைச் சாதனம் நண்பனா, எதிரியா?

Is the screen device a friend or a foe?
Computer user
Published on

திரைச் சாதனங்களில் பொதுவாக திரைப்படங்கள், இசை, விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை அடங்கும். திரைச்சாதனங்கள் நமக்கு பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கல்வி ஆகியவற்றில் மிகவும் உதவியாக இருக்கின்றன. இருப்பினும், மிதமான திரை நேரம் மிகவும் முக்கியம். அதிகப்படியான திரை நேரம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

திரைச் சாதனங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்கவும், உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பெறவும் உதவுகின்றன. கல்வி சார்ந்த வீடியோக்கள், பாடங்கள் மற்றும் ஆன்லைன் படிப்புகள் போன்றவற்றை அணுகவும் திரைச் சாதனங்கள் உதவுகின்றன. திரைச் சாதனங்கள் மூலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் புதிய திறன்கள் மற்றும் அறிவை பெற்றுக்கொள்ளலாம். ஒரு புதிய மொழியை கூடக் கற்றுக்கொள்ளலாம். திரை சாதனமானது, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் உணர்வுசார் திறன்களை வளர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ 10 மந்திரங்கள்: ஜப்பானியர்களின் 'இக்கிகை' ரகசியம்!
Is the screen device a friend or a foe?

சில சந்தர்ப்பங்களில், திரைச் சாதனங்கள் உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, நடனம் அல்லது விளையாட்டுகளைக் கற்பிக்கும் பயன்பாடுகள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றைக் கூறலாம்.அதேநேரம், அதிகப்படியான திரை நேரம் உடல் பருமன், தூக்கமின்மை மற்றும் கண் பிரச்னைகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றது. மேலும், மன அழுத்தம், மனப் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்குகின்றன.

அதிகப்படியான திரை நேரம் சமூக தொடர்புகளைக் குறைத்து தனிமைக்கு வழிவகுக்கும். திரை நேரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது கல்வி செயல்திறனை பாதிக்கலாம். திரை நேரத்தைக் குறைத்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல், புத்தகங்களைப் படித்தல், உடற்பயிற்சி செய்தல் போன்ற பிற செயல்பாடுகளிலும் நாம் ஈடுபடுவது நல்லது.

திரையின் முன் அதிக நேரம் செலவிடுவது நமது தூக்க நேரத்தை மாற்றக்கூடும். திரைகளால் வெளிப்படும் ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனை அடக்குவதன் மூலம் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கும். திரை நேரத்தால் நமது அன்றாடத் தூக்கம் பாதிக்கபடாமல் இருக்க படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு திரை சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நல்ல கனவு vs கெட்ட கனவு: எதெல்லாம் பலிக்கும்?
Is the screen device a friend or a foe?

திரைச் சாதனங்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்ற நல்ல தூக்க சுகாதார நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும். படுக்கை நேர வழக்கங்கள், படுக்கை நேரத்தில் வாசிப்பு, படுக்கையறையில் குறைந்த வெளிச்சம் மற்றும் சத்தம், காஃபின் கொண்ட பானங்களை மாலைநேரத்தில் குடிப்பதைத் தவிர்ப்பது, ஒரு குழந்தையை அவர்களின் சொந்த படுக்கையில் தூங்க வைப்பது (பெற்றோரின் கூட்டுத் தூக்கத்திற்கு எதிராக) அனைத்தும் சிறந்த தூக்க விளைவுகளுக்கு பங்களிக்கின்றன.

திரை நேரம் மோசமான தூக்கத் தரத்துடன் தொடர்புடையது. பிரச்னைக்குரிய கேமிங் மற்றும் படுக்கை நேர சாதனப் பயன்பாடு இந்த சிக்கல்களை அதிகரிக்கிறது. மேலும், சமூக ஊடகங்கள் உட்பட திரைகளில் நுகரப்படும் உள்ளடக்கம் பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு பங்களிக்கும், இது தூக்கத்தை மேலும் பாதிக்கலாம்.

நவீன தொழில் நுட்ப உலகில் கைபேசி போன்ற திரைச்சாதனங்களின் பயன்பாடு இல்லாமால் பெரும்பாலும் நம்மில் எவராலும் இருக்க முடிவதில்லை. கைபேசி கைவிரல் நுனியிலேயே உலகின் பயன்பாட்டைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பழைய பிளாஸ்டிக் கப்புகளை தூக்கி எறியாதீங்க: அதில் அழகான லாந்தர் விளக்கு செய்யலாம்!
Is the screen device a friend or a foe?

கைபேசியின் பயன்பாடுகள் இன்றைய தலைமுறைக்கு எண்ணில்லா வழிகளில் பயனுள்ளதாக இருக்கின்றன. மின்னஞ்சல் அனுப்புதல், பெறுதல், முகநூல், ட்விட்டர், டெலிகிராம், வாட்ஸ் அப், வீடியோ கால் போன்ற மனித வாழ்வினை எளிமையாக்கும் அனைத்தும் ஓர் கைபேசியின் பயன்பாட்டால் இன்று சாத்தியமாகியுள்ளது. இதன் பயன்பாட்டினால் மனிதனின் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இதன் காரணமாக நமது உடலிலும், மனதிலும் தினம் ஒரு பிரச்னை வந்து சேருகிறது. குறிப்பாக, இவ்வாறான திரைச்சாதனங்கள் வெளிப்படுத்தும் நீல நிறக் கதிர்கள் நம் கண்களில் பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது பார்க்கும் திறனையும், தூக்கத்தின் தரத்தினையும் இதன் நீண்ட நேர பயன்பாடு வெகுவாக பாதிக்கின்றன.

எனவே, இத்திரைச் சாதனங்களை நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதவைகளாகி விட்டன. என்றாலும், நமது உடல் நலமும், மன நலமும் கெட்டுவிடும் அளவில் அவற்றைப் பயன்படுத்தாமல் அவற்றிற்கென்று நேரக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. நமது குழந்தைகளுக்கும் இவ்வாறான பயிற்சியை அளிப்பதுவும் நமது கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com