பிரபஞ்சத்தை வெல்லும் சக்தி தரும் மௌன விரதம்!

silence fasting
silence fasting
Published on

மௌனமாக இருப்பது என்பது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் பல்வேறு நற்பலன்களைக் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இதனால்தான் சாஸ்திரங்கள் மௌன விரதத்தை கடைபிடிக்கச் சொல்லி அறிவுறுத்தின. மௌனம் பழகினால் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் நன்மைகளும் என்னென்ன என்பதை இந்தப் பதிவின் மூலம் அறிவோம்.

மௌனம் பழகினால் அல்லது மௌன விரதம் இருந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் நமக்குக் கிடைக்குமாம். அனைத்து கடவுளர்களின் ஆசியும் கிடைக்க வாரம் ஒரு முறை மௌன விரதம் கடைபிடிக்க வேண்டுமாம். தொன்றுதொட்டு நம்முடைய இந்து சாஸ்திரத்தின்படி பலரும் இந்த மௌன விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஆனால், இன்று காலப்போக்கில் அவை மாறிப் போய்விட்டது.

மௌன விரதம் மனதையும், நம்முடைய சிந்தனையையும் தூய்மையாக்கக்கூடிய பெரும் வல்லமை கொண்டது. ஒரு நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் நம்முடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது முறையாகும். இதனால் மனம் ஒருமைப்படுகிறது. பலவிதமான கேள்விகளுக்கு மனதிற்கு உள்ளேயே பதிலும் கிடைத்து விடுகிறது.

மௌன விரதம் இல்லாவிட்டாலும் அதிகம் பேசுவதைத் தவிர்ப்பதுதான் ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியது. பேசிக்கொண்டே இருக்கும் ஒருவர் தன்னுடைய எல்லா விஷயங்களையும் வெளியில் கொட்டித் தீர்த்து விடுகிறார். இதனால் அவர் பின்நாளில் பலவிதமான பிரச்னைகளையும் சந்திக்கிறார். ஆனால், குறைவாகப் பேசும் ஒருவரிடம் இருந்து நாம் எதையுமே தெரிந்துகொள்ள முடியாது. அவர் பலவிதமான பிரச்னைகளில் இருந்து தன்னைத்தானே தற்காத்துக் கொள்கிறார். இதைவிட ஒரு அதிர்ஷ்டம் இருக்க முடியுமா?

இதையும் படியுங்கள்:
இந்திய கலாசாரத்தில் புடைவைகளின் தோற்றமும் வளர்ச்சியும்!
silence fasting

அமைதியாகவோ அல்லது மௌனமாகவோ இருப்பதால் நாம் நிறையவே கற்றுக்கொள்ள முடியும். மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க முடியும். அவர்களைப் பற்றி உணர முடியும். இவ்வுலகம் முழுவதும் சப்தங்களால் நிறைந்தவையாக இருக்கின்றன. இந்த சப்தங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய பிரபஞ்ச சக்தியை உணர மனதிற்கு அமைதி தேவை, ஓய்வு தேவை. இதை கொடுப்பதுதான் மௌனம்.

இந்த மௌனம் கூர்மையான ஆயுதம் போன்றது. சிலருக்கு நம் பேச்சை கேட்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும். அப்போதுதான் அவர்கள் அதிகம் பேசத் தொடங்குவார்கள். அவர்களுக்குள் என்ன இருக்கிறது? என்பதை நம்மால் அப்போதுதான் தெரிந்துகொள்ள முடியும். நாம் பேசிக்கொண்டே இருப்பதால் பலருடைய ரகசியங்களையும் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது.

அதைப்போலவே, மௌன விரதம் கடைபிடிப்பதால் இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இதுவரை சொல்லியதெல்லாம், பேசியதெல்லாம் வீணானதே என்கிற உண்மையை புரிந்துகொள்ள முடியும். உங்களை உணர முடியும், கடவுளுடைய சக்தியை காதினால் கேட்க முடியும்.

இதையும் படியுங்கள்:
தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
silence fasting

பேசி பேசி நீங்கள் இதுவரை எதை சாதித்து இருக்கிறீர்கள்? எதுவுமே கிடையாது! மௌனமாக இருந்து பாருங்கள், நீங்கள் சாதிப்பது இந்தப் பிரபஞ்சத்தை என்பதை உணரலாம். மௌனம் பழகிப் பாருங்கள், நீங்கள் அடையப்போவது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை என்பதைப் புரிந்து கொள்ளலாம். மௌன விரதத்தை கடைபிடித்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com