எண்ணெய் பலகாரம் செய்யும்போது அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Oily food
Oily food
Published on

லகாரம் செய்ய எண்ணெய் வைக்கும்போது சிறிது இஞ்சி, வாழைப்பட்டையை அம்மியில் நசுக்கிப் போட்டு பொரித்து எடுத்த பிறகு உபயோகிக்க வேண்டும். இதனால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. எண்ணையும் பொங்கி வழியாது. எண்ணெய் புகையினால் வாந்தி, தலைச்சுற்றல் வரவும் செய்யாது.

ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி பிறகு மாவை கரைத்து பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

எண்ணெயில் பொறிக்கும் முறுக்கு, தட்டை, தேன்குழல் போன்றவற்றை செய்யும்போதும் மாவில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசைந்து செய்தால் அது எந்த எண்ணெயில் செய்ததாக இருந்தாலும் தேங்காய் எண்ணெயில் செய்தது போலவே இருக்கும்.

பட்சணம் செய்யும்போது எண்ணெய் பொங்கி வந்தால் ஒரு சொட்டு வினிகர் விட்டால் எண்ணெய் பொங்காது.

சோடா மாவு போடாமலேயே பஜ்ஜி, காராபூந்தி நன்றாக வர பஜ்ஜியோ அல்லது காராபூந்தியோ செய்யும்போது எண்ணெயை சூடாக்கி ஒரு கரண்டி எடுத்து மாவில் ஊற்றி பிசைந்து செய்தால் எண்ணெய் குடிக்காது. காராபூந்தியும் குண்டு குண்டாக வரும். பஜ்ஜி நன்றாக உப்பி வரும்.

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்க வாஸ்து சொல்லும் வழிகள்!
Oily food

பலகாரங்களை திரவ எண்ணெய்களில் பொரிப்பதே நல்லது. கொழுப்புள்ள டால்டா, நெய் இவற்றில் பொரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த பலகாரமாக இருந்தாலும் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துப் பொரிப்பதே நல்லது. அதேபோல், பொரிக்கும் வாணலியில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயை ஊற்ற வேண்டும். சில வேளைகளில் எண்ணெய் பொங்கும். அப்போது சிறு உருண்டைப் புளியை எண்ணெயில் போட்டால் பொங்காது.

எண்ணெய் நன்கு காய்ந்த பிறகுதான் பொரிக்க வேண்டும். இல்லையெனில் பலகாரத்தின் சுவையும் மாறி கடினமாகி விடும்.

எண்ணெய் பாத்திரத்தில் குறைய ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக அதில் எண்ணெயை பக்குவமாய் ஊற்ற வேண்டும். கொதிக்கும் எண்ணெய் சப்தம் அடங்கினால்தான் பண்டம் வெந்து விட்டது என்று அறியலாம். தயாரான பலகாரத்தை எண்ணெயில் இருந்து எடுத்ததும் எண்ணெயிலிருந்து சிறு துகள் கூட தங்காமல் முழுவதும் எடுத்து விட வேண்டும். இல்லையேல் எண்ணெய் கோர்த்துக் கொள்ளும்.

ஒருமுறை பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பொரிக்கப் பயன்படுத்தும்போது அதில் உள்ள சத்துக்கள் வீணாகும். அதனால் பயன்படுத்தக் கூடாது.

பலகாரத்தை எடுக்கும்போதும் முற்றிலும் எண்ணெயை வடித்து விட வேண்டும். அதேபோல், பொரித்த பண்டத்தை உடனே மூடி வைக்கக் கூடாது. சிறிது நேரம் கழித்து மூட வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும் ஓரிரு வெற்றிலையை அதில் போட வேண்டும். அது ‘சட சட’வென்று வெடித்து அடங்கியதும் வெளியே எடுத்து விட வேண்டும். பிறகு பலகாரங்களைப் பொறித்து எடுத்தால் எண்ணெய் பிடிக்காது. பலகாரமும் தீரும் வரை காரல் வாடையும் வராது.

நாடா பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவுடன் இரண்டு டீஸ்பூன் உளுந்து மாவையும் சேர்த்து செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. கூடுதல் கரகரப்பாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பைசா செலவில்லை... வீட்டில் உள்ள பொருளை வைத்தே கெமிக்கல் இல்லா பூச்சிகொல்லி ஸ்ப்ரே! செய்யலாமே!
Oily food

சூரியகாந்தி எண்ணெய்க்கு பதில் கடலை எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் சீக்கிரத்தில் பழைய வாசனை வராமல் இருக்கும்.

பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெய் தண்ணீர் கலந்திருக்கும் காரணத்தால் மிகவும் சத்தம் போட்டால் அதில் ஒரு துண்டு வாழையிலையை போட்டு விடுங்கள். தானாகவே ஓசை அடங்கிவிடும்.

வறுக்கும்போதோ பொறிக்கும்போதோ எண்ணெய் அதிகமாக வீணாவதைத் தடுக்க வாணலியில் உள்ள எண்ணெயில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து பிறகு வறுத்துப் பாருங்கள். எண்ணெய் வீணாகாமல் குறைவான எண்ணெய் மட்டுமே செலவாகும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய விரும்புகிறீர்களா? வழக்கமாக உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக சீவாமல் சிறிது வித்தியாசமாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியில் நன்றாக எண்ணெயை சுட வைத்து அதில் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை வறுத்து எடுக்க வேண்டும். உப்பு, மிளகு தூள் தூவி சூடாக பரிமாறினால் சாப்பிட சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com