வீட்டை சுத்தம் செய்யறேன்னு இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க, பொருட்கள் நாசமாகிடும்!

disinfecting-wipes
disinfecting-wipes
Published on

இன்றைய அவசர உலகில் வீட்டை க்ளீன் செய்யும் வேலையை சுலபமாக முடிப்பதற்காக பலரும் கையில் எடுக்கும் ஒரு மேஜிக் பொருள்தான் இந்த டிஸ்இன்ஃபெக்டிங் வைப்ஸ் (Disinfecting Wipes). ஒரு பாக்கெட்டை வாங்கினோமா, கண்ணில் படும் எல்லா இடத்தையும் இரண்டு நிமிடத்தில் துடைத்து முடித்தோமா என்றுதான் பலரும் நிம்மதி அடைகிறோம். 

இந்த வைப்ஸ் வேலைகளை எளிதாக்குகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால், வீட்டின் மூலை முடுக்கில் இருக்கும் எல்லாவற்றையும் இதனால் சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். 

லெதர் மற்றும் வினைல் பொருட்கள்!

நமது வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் லெதர் சோபாவிலோ, உங்களுக்குப் பிடித்த விலை உயர்ந்த ஷூவிலோ கொஞ்சம் அழுக்கு படிந்துவிட்டால், உடனே ஒரு வைப்ஸை எடுத்துத் துடைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். இதில் உள்ள ப்ளீச் போன்ற ரசாயனங்கள் லெதரின் தன்மையை நிரந்தரமாக பாழாக்கிவிடும். 

அதேபோல கார் சீட்கள் மற்றும் வீட்டின் தரைகளில் போடப்பட்டிருக்கும் வினைல் பரப்புகளிலும் இதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இதை பயன்படுத்துவதால் அவற்றின் நிறம் மங்கிப் போவதோடு, சீக்கிரத்திலேயே அவை வறண்டு உடைந்து போகவும் இது ஒரு முக்கிய காரணமாகிவிடும்.

குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்கள்!

வீட்டில் உள்ள குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை வைப்ஸ் வைத்துத் துடைத்துவிட்டு உடனே அவர்கள் கையில் கொடுப்பது மிகப்பெரிய தவறு. குழந்தைகள் அந்தப் பொம்மைகளை அடிக்கடி வாயில் வைப்பது வழக்கம். அப்போது அதில் படிந்துள்ள கெமிக்கல்கள் அவர்கள் பிஞ்சு உடலுக்குள் செல்ல அதிக வாய்ப்புள்ளது. 

இதற்குப் பதிலாக சாதாரண சோப் மற்றும் தண்ணீர் வைத்து கழுவுவதே நூறு சதவீதம் பாதுகாப்பானது. அதே போல உங்கள் செல்லப் பிராணிகள் சாப்பிடும் தட்டுகளையும் இதனால் துடைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், அது வாயில்லா ஜீவன்களுக்கு கடுமையான வயிற்றுப் பிரச்சனைகளையும் அலர்ஜியையும் ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
வீட்டை அழகாக்க புது பொருட்கள் தேவையில்லை... பாதி விலையில் கிடைக்கும் இந்த 7 செகண்ட் ஹேண்ட் பொருட்கள் போதும்!
disinfecting-wipes

Electronics பொருட்கள்!

சில பேர் கைகளில் அழுக்கு பட்டால் உடனே வைப்ஸை எடுத்துத் துடைப்பார்கள். கைகளைச் சுத்தம் செய்ய ஹேண்ட் சானிடைசர் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது, அதை விட்டுவிட்டு இதை சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இதிலுள்ள கடினமான கெமிக்கல்கள் நமது சருமத்திற்கு கடுமையான பக்க விளைவுகளைத் தரலாம். 

சில பிராண்ட்கள் இதை பயன்படுத்தும் போது கைகளில் க்ளவுஸ் அணிய வேண்டும் என்று கூட அறிவுறுத்துகிறார்கள். அடுத்ததாக நமது ஸ்மார்ட்போன், டிவி மற்றும் லேப்டாப் ஸ்கிரீன்களை இதனால் துடைக்கவே கூடாது. அப்படிச் செய்தால், ஸ்கிரீனில் இருக்கும் பிங்கர்பிரிண்ட் பாதுகாப்பு பூச்சுகள் முழுவதுமாக அழிந்துவிடும். மொபைலைச் சுத்தம் செய்ய ஒரு சிறிய Microfiber Cloth பயன்படுத்துவதுதான் எப்போதுமே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
disinfecting-wipes

டிஸ்இன்ஃபெக்டிங் வைப்ஸ் அவசரத்திற்கு மேலோட்டமாக சுத்தம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூப்பரான பொருள்தான். ஆனால் அதை எல்லா இடத்திலும் தேய்த்து வீணாக்கக் கூடாது. மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்ய அந்தந்தப் பொருட்களுக்கென்று விற்கப்படும் பாதுகாப்பான கிளீனர்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com