கொசு, கரப்பான் தொல்லை
கொசு, கரப்பான் தொல்லை

கரப்பான் தொல்லையா? பூச்சிகள், எறும்புகள் தொந்தரவா? நொடியில் விரட்ட...

வீடுகளில் கரப்பான், பூச்சிகள், எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி நொடியில் விரட்டி விடலாம்.
Published on

கோதுமை மாவில் ஃபோரிக் ஆசிட் சேர்த்து பிசைந்த கலவையை கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் வைத்தால் அவை சாப்பிட்டு செத்து விடும்.

பிரியாணி இலையை பொடி செய்து கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தில் தூவினாலும் அந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது.

சர்க்கரையுடன் சம அளவு பேக்கிங் சோடா கலந்து கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் தூவினால் அதை சாப்பிட்டு கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும்.

கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தில் கிராம்பு வைத்தால வராது. கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்தாலும் கரப்பான் பூச்சிகள் வராது.

பெப்பர் மிண்ட் எண்ணெயை காட்டன் பந்துகளில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தால் வராது.

சமையல் அறையின் மூலை முடுக்குகளில் மஞ்சள், உப்பு கலந்து தூவி விட்டால் எறும்பு, பூச்சிகள் இதில் கிருமி நாசினி தன்மை இருப்பதால் வராது.

சமையலறையில் கொசு பூச்சிகள் தொல்லை தாங்க முடியவில்லையா? இதற்கு கொதிக்க வைத்த நீரில் மிளகு பொடி, உப்பு சேர்த்து ஆறியவுடன் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி உடனே பூச்சிகள் வரும் இடத்தில் அடித்தால் உடனே அவற்றை அழித்துவிடலாம்.

கொசு மற்றும் ஈக்கள் வரும் இடங்களில் ஆரஞ்சு தோலை மெல்லிய ஒரு துணிக்குள் வைத்து சமையல் அறையில் கட்டி தொங்க விட்டால் பூச்சிகள் தொல்லை நீங்கும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ... தொல்லை தாங்கலையே! கரப்பான் பூச்சிகள் காணாமல் போக 9 குறிப்பகள்!
கொசு, கரப்பான் தொல்லை

வெயில் காலத்தில் ஈக்கள் வரும். வீட்டைத் துடைக்கும் நீரில் சிறிது கல் உப்பை சேர்த்து துடைத்தால் அதன் பின் ஈக்கள் வராது.

வெயில் காலத்தில் வீட்டில் எறும்பு தொல்லை இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் சால்ட் கலந்து அதை நான்கு பக்க ஓரங்களில் தெளித்து விட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கே சிறிது பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்பு தொல்லை இருக்காது. எறும்புகள் வராது.

இரவில் படுத்தும்போது பிளீச்சீங் பவுடரை சிறிது எடுத்து கழிப்பறை, குளியலறையின் ஓரத்தில் தூவிவிட்டு வந்தால் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

இதையும் படியுங்கள்:
ஏன் கரப்பான் பூச்சிகள் இரவில் மட்டும் வெளியே வருகின்றன?
கொசு, கரப்பான் தொல்லை

ஷீக்களில் ரசக்கற்பூரம் உருண்டை ஒன்றை போட்டு வைத்தால் பூச்சிகள் அதன் வாசனைக்கு வராது.

பல்லியை விரட்ட வேண்டுமா?

வெள்ளைப்ப்பூண்டை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்து, ஒரு பெரிய வெங்காயத்தை பாதி அளவு வெட்டி அரைத்து இரண்டையும் சேர்த்து அரைக்கவும் . ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சுட வைத்து ஆவி வரும் பொழுது வெள்ளை பூண்டு, வெங்காய பேஸ்ட் பொடித்த மிளகு போடவும். அதனுடன் கற்பூரவள்ளி இலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். நீர் ஆறியவுடன் ஊற்றி பல்லி வரும் இடங்களில் ஸ்பிரே பண்ணினால் பல்லிகள் வராது. ஓடிவிடும்.

இதையும் படியுங்கள்:
இந்த 4 பொருட்களை உங்கள் வீட்டில் வைத்தாலே போதும்... கரப்பான் பூச்சிகள், எலிகள் எல்லாம் தெறிச்சு ஓடும்! 
கொசு, கரப்பான் தொல்லை
logo
Kalki Online
kalkionline.com