உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும் கல்சட்டி பாரம்பரிய சமையல்!

Kalchatti recipes that play a major role in health
Kalchatti recipes that play a major role in health
Published on

ண் பாண்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் சமையலறைகளில் கல்சட்டிகள் நிறைய அடியெடுத்து வைத்துள்ளன. ஆன்லைன் தளங்களிலும் விதவிதமான கல்சட்டிகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. பொதுவாக, ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி, ஏலக்காய் நசுக்கப் பயன்படுத்தப்படும் சிறிய கல் கொட்லா என பலவிதங்களில் கல்சட்டியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தற்போது கல் பாத்திரங்களில் தோசைக்கல், தயிர்சட்டி, குழம்பு சட்டி, பணியாரக் கல், கடாய் என விதவிதமான வடிவங்களில் கிடைக்கின்றன. சோப்புக்கல் என்று சொல்லப்படும் மாவு கல்லில் இந்த பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. கல் பாத்திரத்தை பழக்க சில நாட்கள் ஆகும். ஆனால், பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் சமைக்கும் நேரம் மிச்சப்படும்.

உணவு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடலாம். உணவு கொதிநிலையிலேயே கல் பாத்திரத்தில் இருக்கும் என்பதால் எரிவாயு மிச்சமாகும். இதில் சமைக்கப்படும் உணவுகளின் ருசியை உணரலாம். கல்சட்டியில் வைத்திருக்கும்போது தயிர் புளிப்பு ஏறாது.

கல்சட்டி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மாவு கல்லில் மக்னீசியம் இருப்பதால் நேரடியாக உணவில் இந்த சத்து கலப்பதற்கு கல்சட்டி உதவும். கல் பாத்திரங்களில் வைக்கப்பட்ட உணவு சுமார் மூன்று மணி நேரம் சூடாகவே இருக்கும். உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாது. வைக்கும் உணவின் ருசி மேம்படும்.

கல்சட்டி சமமான சூட்டை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கும் என்பதால் சமைத்த உணவில் வாடை, தண்ணீர் விட்டுகொள்வது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. கிருமித்தொற்று வராது. பூஞ்சை உணவில் வராமல் தடுக்கும். மண் பாத்திரத்தை போலவே கல்சட்டியில், தாளிக்கும்போதும் சமைக்கும்போது அதன் நறுமணத்தை நுகரலாம்.

இதையும் படியுங்கள்:
பணத்தை விட மகிழ்ச்சி தரும் விஷயம் எதில் இருக்கிறது தெரியுமா?
Kalchatti recipes that play a major role in health

கல்லின் நுண் துகள்கள் உணவில் சேருவதால் இந்த நறுமணம் தரும். அலுமினியம், இன்டாலியம், நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும்போது அந்த ரசாயனங்கள் உணவில் சேரும். அது உடல் நலனுக்கு தீங்கை விளைவிக்கும். புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும்.

இதைத் தவிர்த்து இயற்கையான முறையில் கல்லில் செய்யப்படும் இந்த கல்சட்டிகளில் சமையல் செய்ய உணவில் அமிலத் தன்மையை குறைக்கும். செரிமானக் கோளாறுகளை தடுப்பதோடு, உணவின் சுவையை மேம்படுத்துவதால் கல்சட்டி சமையல் தனி ருசியுடன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மையும் கல்சட்டி சமையலில் உள்ளது. விரைவில் தேயாமல், கனமாகப் பயன்படுத்த எளிதாக இருக்கும் கல்சட்டியை பயன்படுத்துவோம், ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com