

உங்கள் வாகனங்களை டிராபிக் ஜாமில் எப்படி ஸ்கரெட்ச் இல்லாமல் ஓட்டலாம்? அதையும் மீறி ஸ்கரெட்ச் ஆனால் முதலில் என்ன செய்ய வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை படித்து முடித்து வேலையில் செட்டில் ஆகியவுடன் பெரும்பாலோரின் எண்ணம் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசையே. அதிலும் கார் தான் அவர்களை அதிகம் ஈர்க்கிறது. அப்படி அனைவரும் நினைத்ததால் வந்த வினையே இந்த ‘டிராபிக் ஜாம்’. சரி இதில் எப்படி நம் வாகனத்தை ‘ஸ்கரெட்ச்’ ஆகாமல் ஓட்டிச் செல்லலாம் தெரிந்துகொள்வோம்.
போக்குவரத்தில் எப்படி தேவையற்ற ஸ்கரெட்ச்களை தவிர்க்கலாம்? நாம் கவனிக்க வேண்டியவை:
குறுகிய ரோடு பாதைகள், கணிக்க முடியாத ஆட்டோகளின் நகர்வுகள் மற்றும் நெரிசலான சந்திப்புகள் என இந்தியப் போக்குவரத்து மற்ற நாடுகளை காட்டிலும் சற்று தனித்துவமான அல்லது குழப்பமான முறையில் இயங்குகிறது. ஏற்கனவே நகர தூசிகள்(dusts), மோசமான சாலை பள்ளங்கள் நம் காரின் பெயிண்ட் மற்றும் அடிப்பகுதிகளை பதம் பார்க்கின்றன. ஒரு புறம் இதை சமாளிக்கவே நமக்கு எரிச்சல் தலைக்கேற, நகர பகுதிகளில் நிகழும் வாகனங்களுக்கு இடையேயான நெருக்கம், நமக்கு முன்னும், பின்னும் இடைவெளியைப் பராமரிப்பது, வளைந்து நெளிந்து செல்லும் இருசக்கர வாகனங்களைக் கண்டறிவது.
இதோடு சிலர் செய்யும் திடீர் பாதை மாறுதல் போன்றவற்றை நன்றாக கவனித்து வாகனம் ஓட்ட வேண்டி இருக்கிறது. சுவாரஸ்யமாக, 2026 ஆம் ஆண்டு ஐஐடி பெங்களூரு நடத்திய ஒரு ஆய்வில், இன்றைக்கு நன்றாக இருக்கும் சாலைகள், அடுத்த நாளே பல பள்ளங்கள் உருவாக சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன என்கிறார்கள். இவையும் நம் வாகனங்களில் அதிக ஸ்கரெட்ச்களுக்கு காரணமாகின்றன என்று கண்டறியப்படுகிறது.
உடன் பயணிப்பவர்களும் கொஞ்சம் கவனமாக இருக்கலாமே!!:
காரில் பயணிக்கும் மற்றவர்களும் ஸ்கரெட்ச்களை தவிர்க்க உதவலாம். சில நேரங்களில் ஓட்டுநருக்கு பார்வை புலப்படாத இடங்களைச் சுட்டிக்காட்டலாம்(Blind spots), போகும் வழியை பற்றி தெரிவித்து கொண்டே இருக்கலாம் மற்றும் திடீர் ஆட்டோ அல்லது பைக் நகர்வுகள் குறித்து எச்சரிப்பது போன்றவற்றின் மூலம், நீங்களும் ஒரு துணை ஓட்டுனர்களாக செயல்பட முடியும் என்பதைக் சில ஆய்வுகள் காட்டுகின்றன.
இப்படி காரில் பயணிக்கும் அனைவரின் விழிப்புணர்வும், சாலையில் பயணிக்கும் அனைத்து டிரைவரின் கவனச்சிதறல் அபாயங்களைக் குறைக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு(WHO) வலியுறுத்துகிறது. எனவே, குறிப்பாக நெரிசலான போக்குவரத்தில், ஸ்கரெட்ச்களை தடுப்பதில் உடன் பயணிப்பவர்கள்(Co- passengers) உண்மையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றனர்.
ஆட்டோக்கள், டாக்சிகளால் உண்டாகும் பிரச்னைகள்:
புள்ளிவிவரப்படி, ரோட்டில் உலாவரும் ஆட்டோக்களும், டாக்சிகளும் அடிக்கடி நடுவழியில் பாதையை மாற்றுவதாலும், திடீரென நிறுத்துவதாலும், ஸ்கரெட்ச்கள் அதிகமாக ஏற்படுகின்றன. இந்த ஸ்கரெட்ச்கள் தொடர்பான தரவுகள் வெளியில் சொல்ல முடியாத படி குறைவாக இருந்தாலும், இது மறைமுகமாக ஒரு வாகனத்தின் துரு புடிப்பு மற்றும் சிறு சேதங்களாக கணக்கிட்டு, கிட்டத்தட்ட ஆண்டுக்கு ₹87,000 கோடி செலவை உரிமையாளர் மற்றும் வாகன உற்பத்தியாளர்களால் கையாளப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை இந்தியாவின் வாகன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.
இது பார்ப்பதற்கு சிறியதாக தோன்றினாலும், உற்பத்தியை விட ஒட்டுமொத்த சேதங்களின் அளவு எந்தளவு உள்ளது என்பதை காட்டுகிறது.
போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் இந்த நிகழ்வுகளை எப்படி கையாளலாம்?:
பிறரால் உங்களுக்கு ஸ்கரெட்ச் ஏற்பட்டால், முதலில் மற்ற போக்குவரத்தைத் தடுக்காமல் பாதுகாப்பாக ஓரமாக நிற்க வேண்டும். பின் புகைப்படங்கள் மூலம் சேதத்தை ஆவணப்படுத்துவது, தவறு ஏற்படுத்தியவர்களிடம் அமைதியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது ஆகியவை சிறந்த நடைமுறையாகும். அருகிலுள்ள காவல் நிலையத்தில் 24 மணி நேரத்திற்குள் தாமாக முன்வந்து புகார் அளிப்பது இதன் சட்டரீதியான சிக்கல்களை குறைக்கிறது. தவறு செய்த ஓட்டுநர் அல்லது நபரோ அடையாளம் காணப்படுகிறாரா என்பதைப் பொறுத்து, காப்பீட்டுக்(Insurance) கோரிக்கைகளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) அல்லது Non-Traceable Certificate தேவைப்படுகிறது.
உரிமையாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள்:
பாரதிய நியாய சம்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS) கீழ், சொத்து சேதத்தை ஏற்படுத்தும் பொறுப்பற்ற அல்லது கவனக் குறைவான வாகனம் ஓட்டுதல் தண்டனைக்குரியதாகும். பிரிவு 326, நாசவேலை மற்றும் சொத்து சேதத்தைக் இது கையாள்கிறது. அதே நேரத்தில் மோட்டார் வாகனச் சட்டம், 1988 படி, வாகன விபத்துகள் உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் (Motor Accidents Claims Tribunal(MACT) முன் உரிமையை பெற அனுமதிக்கிறது. இதை உடனடியாகச் செய்து, ஆதாரங்களை ஆவணப்படுத்தி, அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் உரிமையாளர்கள்; அநீதியிலிருந்து சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுகிறார்கள்.
தேவையற்ற வாகனச் சேத கார் ஸ்கரெட்ச் செலவுகளிலிருந்து லட்சக்கணக்கான ரூபாயைச் சேமிக்கும் வழிகளையும், சாலைப் பயணத்தின் போது ஏற்படும் மன உளைச்சலைக் குறைத்து நம்பிக்கையுடன் வாகனம் ஓட்டும் திறனையும் பெறுவீர்கள்.