
காதலர் தினத்திற்கு உங்கள் காதலன் அல்லது காதலிக்கு பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாக ரூ.1,000க்குள் கிப்ட் கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க...வெறும் 1000 ரூபாய் இருந்தால் போதும்... இந்த காதலர் தினத்திற்கு சூப்பரான கிப்ட் வாங்கி கொடுத்து உங்கள் காதலர் அல்லது காதலியை குஷிபடுத்தலாம்.
1. சாவி கொத்து : (ரூ.300-500) : காதலர்களின் பெயரின் முதல் எழுத்து அல்லது சிறிய செய்தியுடன் பொறிக்கப்பட்ட சாவிக்கொத்தை ஆர்டர் கொடுத்து வாங்கி பரிசளிக்கலாம். சில கடைகளில் கிடைக்கும் இதய வடிவிலான சாவிக்கொத்தை வாங்கி அதில் உங்கள் பெயரை எழுதி பரிசளிக்கலாம்.
2. LED லவ் லாம்ப் (ரூ.500-1000) : இதய வடிவில் அல்லது துணையின் பெயர் அல்லது தனிப்பட்ட குறிப்புகளுடன் கூடிய சிறிய LED லவ் லாம்ப் அல்லது நைட் லாம்ப்பை இந்த காதலர் தினத்திற்கு பரிசாக அளிக்கலாம். இது உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும். கவலைப்படாதீங்க.
3. வாசனை மெழுகுவர்த்தி (ரூ.300-800) : லாவெண்டர், வெனிலா அல்லது ரோஸ் போன்ற மிதமான வாசனைகளுடன் கூடிய வாசனை மெழுகுவர்த்திகளை பரிசளிக்கலாம். இது உங்கள் துணையுடம் இருக்கும் போது ஒரு வசதியான, காதல் சூழலை உருவாக்கும் என்பதால் இது காதலர் தினத்திற்கு சிறந்த பரிசாக இருக்கும்.
4. லவ் மெசேஜ் ஜார் (ரூ.250-500): உங்கள் அன்பை, பிடித்த நினைவுகளை வெளிப்படுத்தும் குறிப்புகள் அல்லது உங்கள் துணையை நீங்கள் பாராட்டுவதற்கான காரணங்கள், உங்கள் துணையிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்களை உங்கள் கைகளால் சிறிய எழுத்துக்களால் எழுதி ஒரு கண்ணாடி ஜாடியை நிரப்பவும். அதை அழகாக பேக் செய்து உங்கள் துணைக்கு பரிசாக வழங்கலாம்.
5. personalised mug (ரூ.250-600) : காதல் கவிதை அல்லது உங்கள் காதலர் அல்லது காதலியின் பெயர் அல்லது உங்கள் இருவரின் படத்துடன் கூடிய personalised mug வாங்கி பரிசளிக்கலாம். இது ஒரு இனிமையான மற்றும் பயனுள்ள பரிசாக இருக்கும்.
6. மினி ஸ்கிராப்புக் (ரூ.300-700) : உங்கள் உறவின் பயணத்தைப் படம்பிடிக்கும் புகைப்படங்கள், காதல் குறிப்புகள் மற்றும் சிறிய டூடுல்களால் நிரப்பப்பட்ட சிறிய ஸ்கிராப்புக்கை உருவாக்கி அதை பரிசளிக்கலாம். உங்கள் இருவரின் பழைய நினைவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும்.
7. போட்டோ பிரேம் மற்றும் புகைப்பட சட்டகம் (ரூ.400-800): உங்களுக்குப் பிடித்த அல்லது இருவரும் சேர்ந்து இருக்கும் ஃபிரேம் செய்யப்பட்ட படத்தொகுப்பை பரிசளித்தால் அது, இந்த காதலர் தினத்திற்கு நேசத்துக்குரிய நினைவுச்சின்னமாக இருக்கும்.
8. சாக்லேட் மற்றும் ஸ்நாக்ஸ் கிப்ட் செட் (ரூ.500-1000) : உங்கள் காதலன் அல்லது காதலிக்கு விருப்பமான சாக்லேட்டுகள், ஸ்நாக்ஸ் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட உங்கள் துணைக்கு பிடித்த பொருட்களை ஒரு அலங்காரப் பெட்டியில் வைத்து அழகாக பேக் செய்து கொடுக்கலாம்.
9. பர்ஃபியூம் (ரூ.400-600) : உங்கள் காதலியை உங்கள் பக்கம் ஈர்க்கணுமா? அப்போ இந்த காதலர் தினத்திற்கு நல்ல மென்மையான வாசனை கொண்ட பர்ஃபியூம் வாங்கி கொடுத்து அசத்துங்க.
10. அழகான ஹேண்ட் பேக் அல்லது வாலட் (ரூ.500-1000): காதலியாக இருந்தால் ஒரு ஸ்டைலான ஹேண்ட் பேக் அல்லது காதலனாக இருந்தால் நேர்த்தியான வாலட் வாங்கி கொடுக்கலாம். உங்கள் துணைக்கு பரிசளிக்க இது சிறந்த தேர்வாக இருக்கும்.