ஓவராக பேசித் தீர்க்கும் பெண்கள்: ஹார்மோன் சொல்லும் உண்மைகள்!

Women who talk a lot
Women who talk a lot
Published on

பொதுவாகவே, ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் என்கிற ஒரு கருத்துண்டு. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உயிரியல் ரீதியான காரணங்கள்:

மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு: பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட சற்றே வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. மூளையின் ‘புரோக்கா’ பகுதி ஆண்களை விட பெண்களுக்கு பெரிதாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ‘புரோக்கா’ பகுதிதான் மொழி உற்பத்தி செய்யப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது பேச்சு மற்றும் புரிந்து கொள்வதன் தன்மையை விளக்குவதாகும். இதனால்தான் பெண்களால் மிக எளிதாக பிறருடன் உரையாடவும் சட்டென்று பழகவும் முடிகிறது.

ஹார்மோன் தாக்கங்கள்: பெண்களின் மூளையில் அதிக அளவு மொழி புரதம் உள்ளது. பெரும்பாலான பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20 ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறார்கள். ஆண்கள் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வுகள். பெண்கள் விரைவாகப் பேசுவதோடு வாய்மொழி தொடர்புக்கு அதிக மூளை ஆற்றலை செலவிடுகிறார்கள். ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரோன் போன்ற பெண்களுக்கான ஹார்மோன்கள் வாய்மொழி தொடர்புகளில் அதிக பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பாத்ரூம் டிசைன்: இந்த 8 'NO-NO' விஷயங்களை மீறினால் கஷ்டம்தான்!
Women who talk a lot

சமூகத் தொடர்பு: சிறு வயதிலிருந்தே சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் தகவல் தொடர்பு அடிப்படையில் வித்தியாசமாக வளர்க்கப்படுகிறார்கள். சிறுவர்களை விட, சிறுமிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் உரையாடலில் ஈடுபடவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் பிற்காலத்தில் பெண்கள் சரளமாக வாய் பேசுவதற்கு ஏதுவாகிறது. பெரும்பாலும் பெண்கள் நல்லுறவை வளர்ப்பதற்கும் புதியவர்களுடன் சட்டென்று பழகுவதற்கும் தோழமைகளை கட்டிக் காப்பதற்கும் விரும்புவார்கள். அதனால் அதிகமாக பேசுவார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேசமயம், ஆண்கள் தங்களுடைய அந்தஸ்து மற்றும் ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதற்காக மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.

பேச்சு சார்ந்த பணிகள்: பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர் பெண்களாக இருப்பார்கள். நர்சிங் துறையிலும் பெண்களே அதிகளவில் இருப்பார்கள். அதைப்போல கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை துறைகளிலும் பெண்களே அதிகம் அங்கம் வகிக்கிறார்கள். ஆலோசனை தரும் பணிகளில் வலுவான தகவல் தொடர்பு திறன் தேவைப்படுகிறது. அதுபோன்ற பணிகளில் பெண்கள் அதிகமாக பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். பெண்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த மொழியை கருவி போல பயன்படுத்துகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். நிறைய கேள்வி கேட்பதிலும் உரையாடலை வளர்ப்பதிலும் பெண்கள் சிறந்தவர்கள்.

இதையும் படியுங்கள்:
அழகு + ஆரோக்கியம்: அசத்தலான வீட்டுக் குறிப்புகள்!
Women who talk a lot

குடும்பத்தை கவனிப்பதிலும் உறவுகளை வளர்ப்பதிலும் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அதை அவர்கள் பேச்சின் மூலம் அதிகம் சாதிக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் சோகமாகவோ அல்லது கோபமாகவோ இருந்தால் அவர்களை சமாதானப்படுத்தி நல்ல மூடுக்கு கொண்டு வர பெண்களால் முடியும்.

ஆண்கள் என்றால் அழக் கூடாது என்கிற ஒரு பொதுவான கருத்து சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆண்கள் தங்கள் துக்கத்தையும் துன்பத்தையும் மனதிற்குள்ளே பூட்டி வைத்துக் கொள்வார்கள். ஆனால், பெண்கள் கோபம், சோகம், வருத்தம் எல்லாவற்றையும் தங்கள் கண்ணீரின் மூலமும் வார்த்தைகள் மூலமும் வெளிப்படுத்தி விடுவதில் வல்லவர்கள். அதனால் அவர்கள் மனம் எளிதில் லேசாகிவிடும். பிறருடன் எளிதில் சண்டை போடவும் செய்வார்கள். அதேசமயம் உடனே சமாதானமும் ஆவதில் பெண்கள் சிறந்தவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com