வண்டியின் மைலேஜை பல மடங்கு அதிகரிக்கும் சூப்பர் லிக்விட் இதோ!

உங்கள் இருசக்கர வாகனத்தின் இன்ஜினில் படிந்துள்ள தேவையற்ற கார்பன் கழிவுகளை நீக்கி மைலேஜை எகிற வைக்கும் யமஹா கார்பன் கிளீனரின் முழுமையான ரிவியூ இதோ.
YAMAHA Yamalube Pea Fuel System Carbon Cleaner
YAMAHA Yamalube Pea Fuel System Carbon CleanerAI Image
Updated on

சொந்தமாக பைக் அல்லது கார் வைத்திருக்கும் அனைவருக்குமே வண்டி வாங்கி சில வருடங்கள் நன்றாக ஓடும், அதன் பிறகு மைலேஜ் குறைந்துவிடும், அத்தோடு இன்ஜின் சத்தமும் அதிகமாகி வண்டி ஓட்டும் சுகத்தையே கெடுத்துவிடும். இதற்கு என்ன காரணம் என்று பலரும் குழம்புவார்கள். தினசரி ஓடும் வண்டியின் இன்ஜினுக்குள் பெட்ரோல் எரிந்து சேரும் தேவையற்ற கார்பன் கழிவுகள் தான் இதற்கு மிக முக்கிய காரணம். 

மெக்கானிக் கடைக்கு சென்று இன்ஜினை பிரித்து சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கில் செலவு செய்வதற்கு பதிலாக, மிகக் குறைந்த விலையில் ஆன்லைனில் கிடைக்கும் ஒரு சூப்பரான பொருளைப் பற்றி தான் இப்போது விரிவாக பார்க்கப் போகிறோம். அதுதான் யமஹா யமாலூப் கார்பன் கிளீனர் (YAMAHA Yamalube Fuel System Carbon Cleaner). 

இன்ஜினை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்!

யமஹா நிறுவனம் பிரத்தியேகமாக தயாரித்து வெளியிட்டுள்ள இந்த கார்பன் கிளீனர் வெறும் 50 மில்லி அளவு கொண்ட ஒரு சிறிய பாட்டில் வடிவில் வருகிறது. அளவைப் பார்த்து இதை எடைபோட வேண்டாம், இது செய்யும் வேலை  பிரம்மாண்டமானது. இதில் PEA என்ற ஒரு சிறப்பு வேதிப்பொருள் மிக அதிக தூய்மையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. 

இது நமது வண்டியின் இன்ஜினுக்குள் சென்று அங்குள்ள எரிபொருள் அறை, இன்டேக் வால்வுகள் மற்றும் இன்ஜெக்டர்களில் பிடிவாதமாக பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் கரடுமுரடான கார்பன் கழிவுகளை முழுமையாக கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் இன்ஜின் எந்த ஒரு தடையோ சிரமமோ இல்லாமல் ரொம்பவே ஸ்மூத்தாக இயங்க தொடங்கும். வண்டியை ஷோரூமில் இருந்து டெலிவரி எடுக்கும்போது இருந்த அதே ஒரிஜினல் பவர் மற்றும் பிக்அப் மீண்டும் கிடைப்பது நூறு சதவீதம் உறுதி.

பயன்படுத்தும் எளிய முறை!

இதை பயன்படுத்துவதற்கு நீங்கள் பெரிய நிபுணராகவோ அல்லது மெக்கானிக் ஆகவோ இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சுலபமான ஒரு வேலை இது. பெட்ரோல் பங்கில் உங்கள் வண்டிக்கு பெட்ரோல் நிரப்பும்போது, இரண்டு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த ஐம்பது மில்லி கிளீனரை நேரடியாக உங்களின் பெட்ரோல் டேங்கிற்குள் ஊற்றினால் மட்டும் போதுமானது. 

இது கார், பைக், ஸ்கூட்டர் என அனைத்து வகையான போர் ஸ்ட்ரோக் பெட்ரோல் வண்டிகளுக்கும் கச்சிதமாக செட் ஆகும். விலை உயர்ந்த பிரீமியம் பெட்ரோலில் இருக்கும் அதே உயர் ரக சுத்தப்படுத்தும் தன்மை இந்த சிறிய பாட்டிலிலும் உள்ளது என்பது இதன் மாபெரும் பிளஸ் பாயிண்ட். வண்டி ஒவ்வொரு மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் ஓடி முடித்த பிறகும் இதை ஒருமுறை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் வண்டியின் இன்ஜின் ஆயுளை பல மடங்கு அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஏஐ-யிடம் வேலையை இழக்காமல் தப்பிக்க சாணக்கியர் கூறும் 6 சீக்ரெட் டிப்ஸ் இதோ!
YAMAHA Yamalube Pea Fuel System Carbon Cleaner

சலுகைகள்!

இதை பயன்படுத்த தொடங்கிய சில நாட்களிலேயே வண்டியின் தேவையற்ற வைப்ரேஷன் அதாவது அதிரும் நடுக்கம் பெருமளவு குறைவதை நீங்களே வண்டி ஓட்டும்போது கண்கூடாக உணரலாம். சைலன்சரில் இருந்து வரும் கரும் புகை வெளியிடுவதும் கட்டுக்குள் வரும். அமேசான் தளத்தில் வாடிக்கையாளர்கள் இந்த பொருளுக்கு மிகச் சிறந்த ரேட்டிங் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். 

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதை போட்டிபோட்டு வாங்கியுள்ளனர் என்பதே இதன் தரத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும். இதன் சாதாரண MRP விலை 163 ரூபாய் என்றாலும், தற்போது ஒரு அட்டகாசமான கோடைக்கால ஆஃபரில் வெறும் 154 ரூபாய்க்கு அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மேலும் சில பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் இதில் அள்ளிக் கொடுக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பாசப் பரிவர்த்தனை!
YAMAHA Yamalube Pea Fuel System Carbon Cleaner

நமது விருப்பமான வண்டியை எப்போதுமே புதியது போல பாதுகாப்பாகவும் பவர்ஃபுல்லாகவும் பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த யமஹா கார்பன் கிளீனர் உண்மையிலேயே ஒரு தவிர்க்க முடியாத மாபெரும் வரப்பிரசாதம். 

logo
Kalki Online
kalkionline.com