
நாம் நாமாக இருப்பது என்பது பேச்சளவில் சுலபம். ஆனால் நிஜ வாழ்க்கையில், இதுதான் நாம் எடுக்க வேண்டிய மிகவும் கடினமான சாய்ஸ். சுற்றியுள்ள சமூகத்தின் அழுத்தங்கள், நண்பர்களின் எதிர்பார்ப்புகள் என பல வெளிப்புற சக்திகள் உங்களை எப்போதும் இழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால், உங்களுக்கு நிஜமாக என்ன வேண்டும் என்பதில் தெளிவு இல்லாமல் போய்விடுகிறது.
மத்தவங்களுக்காக நீங்க செய்ய வேண்டியது, பேச வேண்டியது என அவர்கள் எதிர்பார்த்த வழியில் செல்வதால் நீங்கள் சோர்வடைய நேரிடலாம். இது பெரும்பாலும் தன்னம்பிக்கை குறைவு மற்றும் நிராகரிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்துடன்தான் பிணைந்துள்ளது. இதை உடைத்து,
நீங்கள் நீங்களாக வாழ 10 வழிகள்:
1. ஃபாலோவரை விடுத்து, லீடரா மாறுங்கள்:
நிராகரிக்கப்படுவோம் என்ற பயத்தினால் பலர் தங்கள் நிஜ சுபாவத்தை மறைக்கிறார்கள். மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டும் என்பதற்காக உங்களை மாற்றிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலில் உங்களை நீங்களே விரும்புங்கள். நீங்கள் உண்மையாக இருக்கும்போது, உங்களை மதிக்கிற சரியான நபர்கள் உங்களுடன் இணைவார்கள்.
2. "முடியாது" என சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்:
குறிப்பாக, நாம் அக்கறை கொண்டவர்களிடம் 'வேண்டாம்' என்று சொல்வது கஷ்டம்தான். ஆனால், தொடர்ந்து மற்றவர்களை உங்களுக்கு முன் வைப்பது உங்களின் சுய தேவைகளை புறக்கணிப்பதாகும். மரியாதையுடன், உறுதியாக 'முடியாது' என்று சொல்வது ஒரு சுயஅன்பின் செயல்.
3. உங்க கனவுகளுக்கு முதலிடம் கொடுங்கள்:
மற்றவர்களின் இலக்குகளை அடைய உதவுவதில் நீங்கள் தொலைந்து போக எளிது. ஆனால், இது உங்க வாழ்க்கை. உங்கள் சொந்த இலக்குகளை அடையாளம் கண்டு, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்குங்கள்.
4. நெகட்டிவ் ஆட்களை கட் பண்ணுங்கள்:
Toxic People உங்கள் ஆற்றலை உறிஞ்சுவார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கவே மாட்டார்கள். நீங்க நீங்களாக இருக்க விரும்பினால், அவர்களை விட்டு விலகுங்கள். உங்களை உண்மையாக மதிப்பவர்களுடன் மட்டுமே இருங்கள்.
5. உங்க உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்:
உங்கள் உண்மையான உணர்வுகளை மறைப்பது, உங்களை உங்களிடமிருந்தே விலக்கிவிடும். வெளித்தோற்றத்திற்காக உங்கள் உணர்ச்சிகளை அடக்குவதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதில் நேர்மையாக இருங்கள்.
6. பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்:
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு, பொறுப்புடன்எதிர்காலத்தை நோக்கிச் செல்லுங்கள்.
7. உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்:
மற்றவரைப் போல நடிக்க முயலலாம், ஆனால் அது ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது. நீங்கள் யார் என்பதை ஏற்றுக்கொள்வதில் இருந்துதான் உண்மையான ஆனந்தம் வரும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, உங்க சொந்த வாழ்க்கையை வாழுங்கள்.
8. வாழ்க்கை மிகவும் சிறியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
ஒரு நாள் உங்கள் நேரம் முடிந்துவிடும். அந்த நேரத்தில், "நான் உண்மையாகவே வாழ்ந்தேன்" என்று நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டாமா? இது, உங்கள் கனவுகளைத் துரத்தவும் துணிச்சலாக வாழவும் உங்களைத் தூண்டும்.
9. உங்க பலத்தில் கவனம் செலுத்துங்கள்:
உங்கள் மதிப்பை நிரூபிக்க நீங்கள் வேறு யாராகவும் இருக்க வேண்டியதில்லை. உங்கள் திறமைகள் என்ன என்று கண்டுபிடித்து, அதன் மீது கவனம் செலுத்தி வளர்த்துக் கொள்ளுங்கள்.
10. தவறுகளை எதிர்பார்க்கலாம்:
நீங்கள் தடுமாறலாம், அது பரவாயில்லை. சந்தேகங்களும் பின்னடைவுகளும் இந்த பயணத்தின் ஒரு பகுதி. உண்மைத் தன்மையுடன் வாழ்வது எளிதல்ல; ஆனால், நீங்கள் தொடர்ந்து முயலும்போது, நீங்களாக வாழத் தொடங்குவீர்கள்.