

துணிவு எப்போது வரும்; துக்கம் வரும்போது தான்.
துக்கம் எப்போது வரும்; துணிந்து ஒரு 'செயல்' செய்யும் போது தான்.
செயல் என்பது பல வினைகளால் கட்டமைக்கப்படுகிறது; காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது; இடத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது.
இவ்வளவு 'காரணிகள்' கொண்டு ஒரு துணிவு நம்மிடம் பிறக்க எது காரணமாக இருக்கிறது.
'சுயநலம்' என்று உடனே சொல்லி விடலாம்! உண்மைதான்!
ஆனால், அது ஒன்றே போதுமா?
உதாரணத்திற்கு ஒரு முதலாளி ஒரு உணவகம் ஒன்றை அமைக்க முனைகிறார்.
அதற்கு அவருக்கு முதலில் 'சுயநலம்' என்ற ஒன்று காரணமாக இருக்கிறது. காரணம் அவர் ஒரு பெரிய முதலீட்டை வைத்து ஒரு வணிகத்தை, ஒரு வியாபாரத்தை தொடங்க முடிவெடுப்பதற்கு முன் அதில் உள்ள 'நிறை குறைகளை' அறிய அவரே ஒரு தொழிலாளியாக பணியாற்றி இருக்க வேண்டும்.
இல்லையென்றால் குறைந்த பட்சம் தன் குடும்பத் தொழில் என்று எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சிக்கு பல 'விழுமியங்களை' ஒன்று கூட்டி அமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகள் என்ன? என்ன?
இதே இங்கே பார்க்கலாம்...
1. இடம்
2. முதலீடு
3. கடன் பெறுதல்
4. சொத்துக்கள் அடைமானம்
5. தொழிலாளர்கள் நேர்த்தி
6. பயன்படுத்து பொருள்கள்
7. போக்குவரத்து சம்பந்தமான செலவீனங்கள்
8. தொழில்முறை போட்டிகள்
9. அணுகுமுறை
10. தரம்
11. நிரந்தரத் தன்மை பற்றிய புரிதல்...
இதையே கீழிருந்து மேலாக யோசித்து செயல்படுவீர்கள் என்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்!