உங்கள் கேரியர் வளர்கிறதா அல்லது தேக்கமடைந்துள்ளதா. இந்த 10 அறிகுறிகளை வைத்து உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

career-growth-vs-stagnation
career-growth-vs-stagnation
Published on

நமது அன்றாட வாழ்வில் அலுவலகத்திற்குச் செல்வதும், மாத இறுதியில் ஊதியம் பெறுவதும் ஒரு வழக்கமான செயலாகிவிட்டது. ஆனால், நமது கேரியர் உண்மையிலேயே சரியான பாதையில் செல்கிறதா அல்லது ஒரே இடத்தில் தேக்கமடைந்து நிற்கிறதா என்பதை பல நேரங்களில் நாம் கவனிப்பதில்லை. வேலைக்குச் செல்வது மட்டுமே நமது வளர்ச்சியை உறுதி செய்துவிடாது. 

நமது திறமைகள் எந்த அளவில் உள்ளன என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். நீங்கள் உங்கள் வேலையில் சிறந்து விளங்குகிறீர்களா அல்லது தேக்க நிலையில் இருக்கிறீர்களா என்பதை அடையாளம் காண சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உங்கள் கேரியர் தேக்கமடைந்துள்ளது என்பதற்கான 10 அறிகுறிகள்:

  1. கடந்த சில வருடங்களாக நீங்கள் எந்த ஒரு புதிய Skills அல்லது தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.

  2. தினமும் காலையில் எழுந்து அலுவலகம் செல்ல நினைக்கும் போதே, மனதளவில் ஒருவித சோர்வும் வெறுப்பும் ஏற்படுவது.

  3. நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில், எந்த ஒரு ப்ரோமோஷன் அல்லது பதவி உயர்வும் இல்லாமல் இருப்பது.

  4. அலுவலக கூட்டங்களில் நீங்கள் கூறும் ஐடியாக்களுக்கு உரிய முக்கியத்துவமோ, அங்கீகாரமோ கிடைக்காமல் போவது.

  5. எப்போது வார இறுதி நாட்கள் வரும், எப்போது லீவ் எடுக்கலாம் என்ற எண்ணம் மட்டுமே எப்போதும் மேலோங்கி இருப்பது.

  6. உங்களுக்குப் பின்பு வேலையில் சேர்ந்த ஜூனியர்கள் அனைவரும் எளிதாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வது.

  7. இயந்திரம் போல தினமும் ஒரே வேலையை எந்த ஒரு ஆர்வமும் ஈடுபாடும் இல்லாமல் தொடர்ந்து செய்து வருவது.

  8. உங்களுக்கான புதிய ப்ரொபஷனல் நெட்வொர்க் எதுவும் அமையாமல், புதிய மனிதர்களை சந்திக்காமல் இருப்பது.

  9. உங்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற ஊதியமும், சரியான மரியாதையும் கிடைக்கவில்லை என்ற உணர்வு உங்களை வாட்டுவது.

  10. உங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு, அலுவலக பாலிடிக்ஸ் காரணமாக நீங்கள் முடங்கிப் போவது.

இதையும் படியுங்கள்:
நாயின் தாகமும் மனிதனின் மனமும் - நாய்கள் நமக்குச் சொல்லும் நீதி!
career-growth-vs-stagnation

ஒவ்வொரு மனிதனின் கேரியர் பயணத்திலும் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பான ஒரு விஷயமே. நீங்கள் தற்சமயம் தேக்க நிலையில் இருப்பதாக உணர்ந்தால், அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. இது உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய ஒரு சரியான தருணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை இன்றே தொடங்குங்கள். உங்கள் வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது, அதற்கான பலன் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com