அனுபவம் இருந்தா போதுமா? ஒரு 'Master Leader'ஆக வேண்டாமா? மேஜிக் ஃபார்முலா இதோ!

Leadership skills
Leadership skills
Published on

தெளிவான எதிர்பார்ப்புகளை உங்கள் ஊழியர்களிடம் தெரிவிக்கும் போது அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதையும் தாங்கள் வெற்றியாளர்கள் (Leadership skills) என்ற உணர்வை அனுபவிப்பதை நீங்கள் சாத்தியமாக்குகிறீர்கள்.

வெற்றி பெறுவதற்கான 5 காரணிகள்

எல்லைக் கோட்டைக் தாண்டிச் சென்று வேலையில் வெற்றியாளராக உணர்வதற்கு ஒரு ஊழியருக்கு 5 விஷயங்கள் தேவைப்படுகின்றன‌.

1. தெளிவான இலக்குகள் மற்றும் நோக்கங்கள்.

இவற்றைப்பற்றி முன் கூட்டியே பேசப்பட்டு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எல்லோரும் அவற்றை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

2. தெளிவான அளவீடுகள் மற்றும் தரங்கள்

தன்னுடைய வெற்றி அளவிடப்படும் என்பதை அந்த ஊழியர் அப்போது அறிந்து கொள்வார்.

3. தெளிவான காலக்கெடுக்கள்

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அந்த ஊழியருக்கு தான் தெரியும்.

4.வெற்றி அனுபவங்கள்

இந்த ஊழியர் தனக்கான வேலைக்கான காலக்கெடுவுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற தரத்திற்கு ஏற்ப வேலையை முடிக்க வேண்டும்.

5. அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள்

ஒரு வேலையை ஒருவர் வெற்றிகரமாக முடிக்கும் போது அவருடைய மேலதிகாரி அதை அங்கீகரிக்க வேண்டும். முடிந்தபோது வெகுமதியும் அளிக்கப்பட வேண்டும்.

உங்களால் பார்க்க முடியாத இலக்கை உங்களால் குறிவைத்துத் தாக்க முடியாது‌ என்ற கூற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள்‌. இலக்குகளும், நோக்கங்களும் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ, அவற்றை அடைவது எளிதாக இருக்கும்‌. தாங்கள் வெற்றியாளர்கள் என்ற உணர்வு எவ்வளவு அதிகமாக ஏற்படுகிறதோ, அவர்களுடைய சுய மதிப்பு அதிகரிக்கிறது‌.

இதையும் படியுங்கள்:
நைட் ஷிப்ட் பணியாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க பயனுள்ள சூப்பர் டிப்ஸ்!
Leadership skills

பல மேலாளர்கள் நேரம் பற்றாக்குறை காரணமாக வேலையைப் பற்றி ஊழியர்களிடம் எந்த விவரமும் பேசாமல் வேலையை ஒப்படைக்கும் தவற்றை செய்கின்றனர். அது நிறைவேற்றப்படாமல் இருக்கும் போதோ அல்லது மோசமாக செய்துமுடிக்கப்பட்ட போதோ அந்த ஊழியர் தகுதியற்றவர் என்று பழி சுமத்துவார்கள்‌‌. ஒரு குறிப்பிட்ட வேலை சிறப்பாகச் செயல்படும் போது அது எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்‌.

மேலும், கண்காணிப்பது என்பது வேலை பார்ப்பவரின் சுய மதிப்பை வெகுவாக அதிகரிக்கும். எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அவை சிறப்பாக முடிக்கப்பட்டால் எத்தகைய விளைவுகளைப் பெற்றுத்தரும். அவற்றுக்கான காலக்கெடுகள் என்ன ஆகியவற்றை உங்கள் கீழ் பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் துல்லியமாக அறித்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்று.

எதிர்பார்ப்புகளை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். வேலையை உங்கள் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். இதை நீங்கள் அவருக்குத் தெளிவாக விவரிக்காமல் விட்டால், நீங்கள் வேலை செய்வதில் உள்ள அவரின் மகிழ்ச்சியை பறித்துவிடுவீர்கள். இதைச் செய்யாமல் இருப்பதால்தான் வேலை குறித்து அதிருப்தி ஏற்பட காரணமாகிறது‌.நீங்கள் ஒருவரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு முற்றிலும் மறந்துவிடுவதற்கு பதிலாக, அந்த வேலை எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒரு முறையான கால அட்டவணையை நீங்கள் அமைத்துக் கொள்ளும் போது அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை ஊழியர் புரிந்து கெள்வர்.

அடுத்த முறை நீங்கள் ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது என்ன செய்யப்படவேண்டும், எந்த தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் போன்ற விவரங்களை கலந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி நீங்கள் கொடுக்கின்ற இலக்குகள், நோக்கங்களுக்கு அவர் உடன்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்‌.

இதையும் படியுங்கள்:
ஊக்கம் (Motivation) வேண்டுமா? அல்லது கட்டுப்பாடு (Discipline) அவசியமா?
Leadership skills

பிறகு அவரின் சொந்த வார்த்தைகளில் நீங்கள் கூறிய விவரங்கள் பற்றிக் கேளுங்கள். இதன்மூலம் அவர் எவ்வளவு தெளிவாக உங்கள் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டுள்ளார் என்பதை இது உறுதி செய்யும். ஒரு மேலாளர் என்ற முறையில் மிக கவனமாக யோசித்து மேற்கூறிய படிசெயல்பட வேலையில் வெற்றி என்பது உறுதியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com