நைட் ஷிப்ட் பணியாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க பயனுள்ள சூப்பர் டிப்ஸ்!

Helpful tips for those working night shifts
women working the night shift
Published on

ரவில் விழித்திருப்பதும், பகலில் தூங்குவதும் இயற்கையான உடல் இயக்க நிலைக்கு எதிரானது. அது உடலில் நோய்களை உருவாக்குகிறது என்பது தெரிந்தும் பொருளாதார தேவைக்காக பலர் இரவு பணிகளுக்குச் செல்கிறார்கள். இதனால் அவர்களுக்குத் தூக்கத்தில் ஏற்படும் பாதிப்பு மட்டுமல்ல, பலதரப்பட்ட உடல்நலக் குறைவு ஏற்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர். இரவு நேரங்களில் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள் இளவயதிலேயே பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று சூரே பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதன் பாதிப்புகளிலிருந்து ஓரளவு தப்பிக்க சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம். புரதம் நிறைந்த காய்கறிகள் அதிகம் சாப்பிடவும், இரவு நேரத்தில் வேலைக்குச் சென்றாலும் பகல் நேரத்தில் உங்கள் காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை எப்போதும் போல சரியான நேரத்தில் சாப்பிட்டு வாருங்கள். இரவு நேரங்களிலும் எளிதாக ஜீரணமாகும் உணவையே சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
புரோட்டீன் சத்து குறைந்த இட்லியை ஆரோக்கிய இட்லியாக மாற்றுவது எப்படி?
Helpful tips for those working night shifts

இரவு பணியின்போது ஹெவியாக சாப்பிடாதீர்கள். எவ்வளவு குறைவாக சாப்பிட முடியுமோ அவ்வளவு குறைவான அளவில் சாப்பிடுங்கள். இல்லாவிடில் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். பகல் நேரத்தில் உங்கள் உணவுகளை முறைப்படி சாப்பிட முயலுங்கள். இரவு பணிக்கு செல்வதாக இருந்தால் ஏழு அல்லது எட்டு மணிக்கே சாப்பிட்டு விடுங்கள். இரவு செல்வதாக இருந்தால் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவும். புரதச்சத்து உணவுகள் உங்களை முழுமையாக உணர வைத்து பசியை கட்டுப்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுடன், இரவில் சுறுசுறுப்பாக இருக்க உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் முக்கியம். இரவு நேர தொழிலாளர்கள் பெரும்பாலும் டீ மற்றும் காபி குடிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இது உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது. அதற்கு பதிலாக இரவில் அதிக தண்ணீர் குடிக்கவும்.

இரவு பணி காரணமாக சரியாக தூங்க முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் அதனை ஈடுகட்ட நேரம் கிடைக்கும்போது ஒரு குட்டி தூக்கம் போடுங்கள். இரவு பணி காரணமாக தினமும் சரியாக தூங்குவதில்லையா? பரவாயில்லை வாரத்தின் கடைசி ஓய்வு நாளில் நன்றாகத் தூங்கி சரி செய்து கொள்ளலாம். அதனால் உங்களின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
வீண் செலவைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்த பக்காவான 12 வழிகள்!
Helpful tips for those working night shifts

இரவு பணியாளர்கள் பகலில் வீடுகளில் நிம்மதியாக தூங்குவது சிரமம். இதனால் பகலில் தூங்கி எழ சத்தமில்லாமல், இருட்டான, காற்றோட்டம் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுங்கள். இரவில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புகிறவர்கள் பகலில் அமைதியான சூழலில் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். அப்போது செல்போனை ஆப் செய்து விடுங்கள். திரைச்சீலையை பயன்படுத்தி அறையை இருட்டு சூழலுக்கு மாற்றிவிட வேண்டும். இளம்சுடு நீரில் குளித்துவிட்டு தூங்குவது நல்லது.

இரவு ஷிப்ட் முடிந்து வீட்டிற்குக் கிளம்பும்போது தூக்கத்தை கெடுக்கும் காபி மற்றும் டீ குடிக்காதீர்கள். நைட் ஷிப்ட் பணி முடிந்ததும், ஒரு மணி நேரம் உங்களை ரிலாக்ஸ் செய்யுங்கள். முடிந்த மட்டும் இரவு பணியில் சுறுசுறுப்பாக இயங்க முற்படுங்கள். அது நல்ல தூக்கத்திற்கு உதவும். உங்களால் முடிந்தவரை ஆக்டிவாக இருங்கள். ஒவ்வொரு மணி நேரமும் எழுந்து உங்கள் உடலை தளர்த்தி நீட்டவும், உங்கள் கால் விரல்களைத் தொடவும் அல்லது அறையைச் சுற்றி நடக்கவும்.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் இந்த 8 பொருட்களை வைத்தால், எறும்புகள் தலை தெறிக்க ஓடும்!
Helpful tips for those working night shifts

உங்கள் இடைவேளையின்போது உங்கள் பணியிடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இந்த இயக்கம் உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது மற்றும் படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

இரவு பணியில் இருப்பவர்கள் சர்க்கரையை குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், காபின் உணவுகளை தவிர்க்க முயலுங்கள். மதுவை அறவே தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம். தூங்கி எழுந்த பிறகு உடற்பயிற்சி செய்யலாம்.

இரவு பணியாளர்கள் தங்களது தூக்கத்தை தள்ளிப்போடவோ அல்லது தூக்கம் வரவழைக்கவோ மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் நன்மைகள் பெறுவதை காட்டிலும் தீமைகளே அதிகம் பெறுவதாக லண்டன் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவீ,ராஜேந்திரன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com