
தேங்காய் பால் ஐஸ்கிரீம்
தேவை:
தேங்காய் பால் – 2 கப்
சர்க்கரை – ½ கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்
வெனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன்
செய்முறை:
தேங்காய் பாலை சோளமாவை, சர்க்கரை சேர்த்து கிளறி அடர்த்தி செய்யவும். இறக்கி வெனிலா எஸன்ஸ் சேர்க்கவும்.
ஃப்ரீஸில் வைத்து பிளெண்ட் செய்து மீண்டும் ஃப்ரீஸ் செய்யவும். சுவையான தேங்காய் பால் ஐஸ்கிரீம் தயார்.
********
தேங்காய்ப் பால் சாதம்
தேவை:
வெந்த சாதம் – 2 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கடுகு, கடலைப் பருப்பு - தாளிக்க
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு பச்சை மிளகாய் தாளித்து, வெந்த சாதம், தேங்காய் பால், உப்பு சேர்த்து கலக்கவும். சூப்பர் சுவையில் தேங்காய்ப் பால் சாதம் தயார். எளிதில் செய்யக்கூடிய சுவையான உணவு இது.
******
தேங்காய்ப் பால் குழம்பு
தேவை:
நறுக்கிய முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி (பெரியது) -1
பச்சை மிளகாய் - 3
பூண்டு பல் - 3
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடிவைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான தேங்காய்ப் பால் குழம்பு தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
******
தேங்காய் பால் பாயாசம்:
தேவை:
தேங்காய்ப் பால் - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
நெய் - ஒரு ஸ்பூன்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
செய்முறை:
பாசிப்பருப்பை நெய்யில் வறுக்கவும். பின்னர் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின், தேங்காய் பால், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் நெய்யில் வறுத்த உலர் திராட்சை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக, ஏலக்காய் தட்டி சேர்க்கவும். தேங்காய் பால் பாயாசம் ரெடி.