அதிகப்படியான பாசிட்டிவ் எண்ணம் ஆபத்தா? கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க 'தற்காப்பு எதிர்மறை சிந்தனை'!

பயணங்கள் மற்றும் வங்கி பணிகளில் கடைசி நேர அலட்சியத்தை தவிர்த்து மன அமைதி பெறும் எளிய வழிமுறைகள்.
திட்டமிடலின் முக்கியத்துவம்
திட்டமிடலின் முக்கியத்துவம்Gemini image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

நேர்மறை சிந்தனை அவசியம்தான், ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் எதிர்மறை சிந்தனையும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கையாக தேவைப்படுகிறது. ரயில், விமானப் பயணம், வங்கி வேலை போன்றவற்றை கடைசி நேரத்தில் செய்வோம் என்ற அலட்சியம் பெரும் சிக்கலை தரலாம். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பதையே இந்த கட்டுரை நன்கு விளக்குகிறது.

நம்மில் பலர் எப்போதும் நேர்மறை எண்ணத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். நேர்மறை எண்ணம் நல்லது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் சில சமயங்களில் எதிர்மறை எண்ணங்களும் தேவையானதாக இருக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளுவோம்.

நம்மில் வெகுசிலர் ரயில் பயணம் மற்றும் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் போது பயண நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில் நிலையத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கோ சென்றுவிடுவார்கள். இது மிகவும் சரியான செயல். ஆனால் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பலர் பயணத்திற்குக் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு முன்னதாக சென்றால் போதும் என்று வீட்டிலேயே அமர்ந்து இருந்து பின்னர் குறிப்பிட்ட இடத்திற்குப் புறப்படுவதை வழக்கமாக வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதாவது டிராபிக் ஜாம் என்பது தினமும் மணிகொரு தரம் நடக்கக்கூடிய செயலாக மாறிவிட்டது. ஒரே இடத்தில் வாகனத்தில் ஒரு மணி நேரம் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலையையும் நாம் சந்திக்கிறோம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ளும் மற்றொரு நண்பரை கேலி செய்வார். “எல்லாத்துலேயும் பாசிட்டிவா யோசிக்கணும் பிரதர். வீட்டிலே இருந்து புறப்பட்டா கரெக்ட்டா போய் சேர்ந்துடுவோம்னு நம்பணும். அதைவிட்டுட்டு டிராபிக்லே மாட்டிகிட்டா என்னாகறது? டயர் பஞ்சர் ஆனா என்னாகறதுன்னு நெகட்டிவா யோசிச்சா அப்படியே ஆயிடும். ஊருக்கு முன்னாடி அங்கே போய் உட்கார்ந்து என்னத்தை சாதிக்கப் போறே?” என்பார்.

திட்டமிடலின் முக்கியத்துவம்
திட்டமிடலின் முக்கியத்துவம்Gemini image

ஆனால் கேலிக்கு உள்ளான நண்பர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர். ஆனால் கேலி செய்த நண்பர் ஒரு சமயம் இதுபோல விமானத்தைப் பிடிக்க சரியான நேரத்தில் புறப்பட்டார். ஆனால் அன்று அவருடைய நேரம் சரியில்லை. வழியில் டயர் பஞ்சராகி அதை சரிசெய்து கொண்டு புறப்பட காலதாமதமாகி அன்றைய விமானத்தைத் தவறவிட்டுவிட்டார். அன்றுதான் அவர் முன்னதாக பயணத்தைத் திட்டமிடுவதன் அவசியத்தை உணர்ந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்:
எண்ணம்போல் வாழ்க்கை: நேர்மறை எண்ணங்கள் நம் வாழ்வை எப்படி மாற்றும்?
திட்டமிடலின் முக்கியத்துவம்

இப்படித்தான் எனது நண்பர் ஒருவர் அவருடைய மகனின் கவுன்சிலிங்கிற்குச் செல்ல முன்னதாக டிமாண்ட் டிராப்ட் எடுத்து வைக்காமல் கவுன்சிலிங்கிற்கு முந்தைய நாள் எடுத்துக் கொள்ளுவோம் என்று அலட்சியமாக இருந்து விட்டார். அப்படியே முந்தைய நாள் வங்கிக்குச் சென்றார். அன்று பார்த்து நெட்வொர்க் மற்றும் சர்வர் பிரச்னையால் அவரால் டிமாண்ட் டிராப்ட் எடுக்க முடியாமல் போய்விட்டது. பாவம் அவர் திண்டாடிவிட்டார். பிறகு மறுநாள் காலை வங்கிக்குச் சென்று டென்ஷனுடன் டிமாண்ட் டிராப்ட் எடுத்து சமாளித்து கவுன்சிலிங்கில் பங்கேற்றார்.

எல்லாவற்றிற்கும் நேர்மறை சிந்தனை பொருந்தாது என்பதை நாம் உணரவேண்டும். எந்த ஒரு விஷயத்தை கடைசி நேரத்தில் செய்து முடிக்கலாம் என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். நேரம் கிடைக்கும்போது உரிய செயலைச் செய்துவிட்டால் நாம் நிம்மதியாக இருக்கலாம்.

சிலர் வீட்டிலிருந்து ரயில் அல்லது விமான நிலையத்திற்குச் செல்ல டாக்சியை புக் செய்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது சற்று முன்னதானவே டாக்சியை புக் செய்து டிரைவரை நீங்கள் முடிவு செய்திருக்கும் நேரத்திற்கு ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வீட்டிற்கு வரச்சொல்லிவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கவிதை: கஷ்டங்கள் ஏன் உனக்கு மட்டும் அதிகம் பெண்ணே?
திட்டமிடலின் முக்கியத்துவம்

அவர் முன்னதாக வந்துவிட்டால் கவலை இல்லை. அவரும் நிம்மதியாக இருப்பார். நீங்களும் நிம்மதியாகப் புறப்படலாம். இத்தகைய செயல் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

பொதுவாக யாருமே எந்த ஒரு செயலையும் நல்லபடியாக முடிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இதில் நேர்மறை எதிர்மறை சிந்தனைக்கே இடமில்லை. எனவே நண்பர்களே! எதையும் நெருக்கத்தில் செய்து கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு முன் கூட்டியே செய்வதால் உங்களுக்கு நன்மையைத் தவிர வேறொன்றும் விளையாது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

இந்த பதிவை வாசிப்பதன் மூலம், அளவுக்கு மீறிய நேர்மறை சிந்தனையால் ஏற்படும் கடைசி நேரத் தவறுகளைத் தவிர்த்து, பயணங்கள் மற்றும் நிதி சார்ந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிடலின் முக்கியத்துவம் பதற்றமில்லாத மன அமைதியான வாழ்க்கையை எப்படிக் கட்டமைப்பது என்ற தெளிவான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com